மஹாசாஸ்தா(ஐயப்பன்) பிறப்பில் ஆபாசமா ? -refutetrisula2 என்ற இஸ்லாமிய வெறி தளத்துக்கு ஒரு பதிலடி

மஹாசாஸ்தா,ஓரினசெயர்க்கையால் பிறந்தார் என்றும் ஐயப்பன் பிறப்பு வரலாறை சாடி,புரானங்களின் உட்கருத்தை புரிந்துக்கொள்ள முடியாத ஒரு இஸ்லாமிய வெறி தளமான refutetrisula2 ,சைவத்துக்கு எதிராக பல பதிவுகளை இட்டு வருகிறது..இந்த தீவிரவாத தளத்துக்கு பதிலடி கொடுப்பது நமது கடமையாதலால்,இனி அதன் ஒவ்வொரு புளுகுகளுக்கும் பதிலடி கொடுக்கப்படும்.. அத்தளத்தில் குற்றச்சாட்டை இங்கு பார்க்கலாம் : http://refutetrisula2.wordpress.com/ஐயப்பன்-வரலாறு/ நமது பதிலடி : ஸ்ரீ மெய்கண்ட தேசிகர் திருவடிகள் போற்றி சைவ விரோதிகளான திக-வினர்,முஸ்லிம்கள்,கிருத்துவர்கள் மற்றும் ஏனைய பலர் சைவ சமயத்தை தாக்கி,அதை அழிக்கப்…

மதுரை வாதம்

காமகோடி ஸ்ரீ சங்கராச்சாரியார் மதுரை நகர சபையில் பேசிய செய்தி 5-9-1963 தினமணியில் வந்தது. அதில் ‘ஞான சம்பந்தப் பெருமான் சமணரை வாதில் வென்று சைவத்தை நிலை நாட்டியதும் சமணர்கள் கழுவி லேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது இந்த சம்பவத்தை இன்றும் மதுரையில் உற்சவமாக கொண்டாடுகிறோம். ஆனால் சகிப்புத்தன்மைக்கு சிறந்ததான நம் சமயம் இப்படிப்பட்ட கொலை செய்யும் கொடூரமான செயலிலீடுபட்டதென்பது கேட்பதற்கே அனுசிதமாக இருக்கிறது’ என்கிறாரவர். அதில் ‘நம்சமயம்’ என்ற சொல் அவற்றைக் கலவடஞ் செய்வதாயிருக்கிறது. ‘சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது’…

ஹரதத்த சிவாச்சாரியார்

ஸ்ரீ ஹரதத்த சிவாச்சாரியாரின் புண்ணிய சரித்திரம்

சிவபெருமான் நரசிங்கத்தோல் அணிந்தது

உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க ஸிம்ஹக்ந மூர்த்தம் (சிவபெருமான் நரசிங்கத்தோல் அணிந்தது) பொங்குளை யழல்வாய்ப் புகைவிழி யொருதனிச் சிங்கங் கொன்ற சேவகம் போற்றி -பதினொராந் திருமுறை ——————————————————————————– சிவமயம் காசிபமுனிவர் திதி, அதிதி, தனு, அரிட்டை, சுரசை, கடை, சுரபி, விநதை, தாம்பிரை, குரோதவசை, இளை, கத்துரு, முனி என்னும் பதின்மூவரையும் விவாகஞ் செய்தார். அவருள் திதி என்பாள் இரணியன், இரணியாக்கன் என்னும் இருவர் ஆண்மக்களையும், சிம்மிகை என்னும் பெண்ணொருத்தியையும் பெற்றாள். அவருள்…

சமணர் கழுவேற்றம்-விளக்கம்

உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சமணர் கழுவேற்றம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை சமணர் கழுவேற்றம் பிரமாண நூல்கள் ஒவ்வொரு சமயமும் ஒன்றோடொன்று இயைபுடைய பலகோட்பாடுகளை யுடையது அவ்வியைபு நேராகவேனும் பரம்பரையாகவேனும் இருக்கும். ஒரு வாற்றானுந் தம்முள் இயைபில்லாத கோட்பாடுகள் எச்சமயத்தினுமில்லை. ஆகவே, ஒன்றனை யழிக்க முந்துறுவது பிறவற்றினும் போய்ப்பற்றி எல்லாவற்றையுமே யழிக்க எத்தனிப்பதாய் முடியும். இதனைக் கூர்த்தமதிகொண் டோர்க. இனி அத்தகைய கோட்பாடுகள் அவ்வச்சமயப் பிரமாணநூல் களாற்றான்…