வேதத்தில் விக்கிரக வழிபாடு இல்லையா ?

இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும்,சைவர்களை தடம் மாறி போக செய்யும் பல சதிகளில் ஒன்று தான்,வேதத்தில் விக்கிரக வழிபாடு இல்லையென்பது.சிலர்,விக்கிரக வழிபாடு,ஆகமத்தில் மட்டும் ஆதரிக்கப்படுகிறது,வேதத்தில் விக்கிரக வழிபாடு இல்லையென்கின்றனர்.வேதத்தில் விக்கிரக வழிபாடு கூறப்பட்டிருக்கிறதா இல்லையா ?? வேதத்தில் விக்கிரக வழிபாடு கூறப்பட்டிருக்கிறது..ஆதாரம் : 1) ” சம்வத்சரஸ்ய ப்ரதிமாம் யாம் த்வா ராத்ர்யுபாசதே ப்ரஜாம் சுவீராம் கருத்வாவிச்வ மாயுர் வியச்னவத் ப்ரஜாபத்யாம்” -(5ஆம் கண்டம்,7ஆம் பிரசினம்,2ஆம் அநுவாகம்,யஜூர் வேதம்) பொருள் : காலரூபியாகிய உமது பிரதிமையை செய்து இருட்டறையில் உபாசிப்பவன்…

ராமர் ராமேஸ்வரத்தில் வழிபட்டது ஏன் வால்மிகி ராமாயணத்தில் இல்லை ??

ராமர்,ராவணனை வதம் செய்தவுடன்,அவருக்கு பிரம்மஹத்தி ஏற்பட்டதாகவும்,அதனால் அவர் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு,பிரம்மஹத்தியை போக்கியதாக சைவ நூல்கள் கூறுகின்றன…ஆனால்,வைணவர்கள் கூறுகின்றனர் ,இது சைவர்கள் கட்டிவிட்ட கதையென்றும் ,வால்மிகி ராமாயணத்தில் இல்லையென்றும் பதில் கூறுகின்றனர்…வைணவர்களுக்கு,இராமரின் சிவவழிபாடு எவ்வளவு நிந்திதமோ,அவ்வளவு வந்திதம் ராம நாமத்தின் தாரகத்துவம்…ராம நாமம் தாரக மந்திரம் என்பது உண்மையென்றால்,அதனை கூற வால்மிகி ராமாயணத்தைவிட சிறந்த நூல் இருக்க முடியாது…ஆனால்,வால்மிகி ராமாயணத்திலோ,ராம நாமம் தாரக மந்திரம் என்ற ஒரு சிறு குறிப்புமில்லை…நிலை இப்படியிருக்க,வால்மிகி ராமாயணத்தில் குறிக்கப்படாமல் இருந்து,ராம நாமம்…

இலிங்கோத்பவர்

முன்னொரு காலத்தில் நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், “நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்” என்றார். திருமால், “நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்” என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது. அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும்…