ராமர் ராமேஸ்வரத்தில் வழிபட்டது ஏன் வால்மிகி ராமாயணத்தில் இல்லை ??

ராமர்,ராவணனை வதம் செய்தவுடன்,அவருக்கு பிரம்மஹத்தி ஏற்பட்டதாகவும்,அதனால் அவர் சிவலிங்கம் அமைத்து வழிபட்டு,பிரம்மஹத்தியை போக்கியதாக சைவ நூல்கள் கூறுகின்றன…ஆனால்,வைணவர்கள் கூறுகின்றனர் ,இது சைவர்கள் கட்டிவிட்ட கதையென்றும் ,வால்மிகி ராமாயணத்தில் இல்லையென்றும் பதில் கூறுகின்றனர்…வைணவர்களுக்கு,இராமரின் சிவவழிபாடு எவ்வளவு நிந்திதமோ,அவ்வளவு வந்திதம் ராம நாமத்தின் தாரகத்துவம்…ராம நாமம் தாரக மந்திரம் என்பது உண்மையென்றால்,அதனை கூற வால்மிகி ராமாயணத்தைவிட சிறந்த நூல் இருக்க முடியாது…ஆனால்,வால்மிகி ராமாயணத்திலோ,ராம நாமம் தாரக மந்திரம் என்ற ஒரு சிறு குறிப்புமில்லை…நிலை இப்படியிருக்க,வால்மிகி ராமாயணத்தில் குறிக்கப்படாமல் இருந்து,ராம நாமம்…

வட மொழி வேதங்கள்,சைவ நூற்களா ??

சைவ சித்தாந்த சாத்திரங்கள் 14இல்,ஒன்றான சிவஞான சித்தியார் கூறுகிறது :   ஆரண மாக மங்க ளருளினா லுருவு கொண்டு காரண னருளா னாகிற் கதிப்பவ ரில்லை யாகு நாரணன் முதலா யுள்ள சுரர்நரர் நாகர்க் கெல்லாஞ் சீரணி குருசந் தானச் செய்தியுஞ் சென்றி டாவே – ( சிவஞான சித்தியார் 1.46) “ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவுகொண்டு காரணன் அருளான் ஆகில் கதிப்பவர் இல்லை “ இதன் பொருள்,“வேதத்தையும் சிவாகமத்தையும் சிவ பெருமான் அருளவில்லையென்றால்,கதியடைபவர் இல்லை”  அதாவது,சிவ பெருமான்,அருளை திருமேனியாகக்…

வேத வசனங்களில் ஆர்ய படையெடுப்பா ??-refutetrisula2 என்ற இஸ்லாமிய வெறி தளத்துக்கு ஒரு பதிலடி

முஸ்லிம்கள், மற்ற சமயங்களைப் பற்றி தப்பான கருத்துக்களை பரப்பி,அச்சமய மக்களை பிளவுபடுத்தி,பிறகு தங்கள் பொய் சமயமான இஸ்லாத்தை அவர்கள் மத்தியில் வஞ்சமாக புகுத்துவார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை…இந்தியாவிலும் இந்த இஸ்லாமிய வெறியர்கள் இந்த கபட நாடகத்தையே கடைபிடிக்கிறார்கள்…இவர்களுக்கு கிடைத்த ஒரு பொய்க்கதை தான் ஆர்யர் படையெடுப்பு என்ற ஒரு சரித்திர புரட்டு..இந்த புரட்டை வைத்துக்கொண்டு,பிராமணர்களை மற்ற இதர சைவ வைணவ சமயத்தரிடமிருந்து பிரித்து,நம்மை பிளவு படுத்த,இந்த புளுகை அவர்கள் ஓயாமல் கூச்சலிட்டு வருகிரார்கள்..வேதத்தில் ஆர்யர்கள் இங்கு…

மஹாசாஸ்தா(ஐயப்பன்) பிறப்பில் ஆபாசமா ? -refutetrisula2 என்ற இஸ்லாமிய வெறி தளத்துக்கு ஒரு பதிலடி

மஹாசாஸ்தா,ஓரினசெயர்க்கையால் பிறந்தார் என்றும் ஐயப்பன் பிறப்பு வரலாறை சாடி,புரானங்களின் உட்கருத்தை புரிந்துக்கொள்ள முடியாத ஒரு இஸ்லாமிய வெறி தளமான refutetrisula2 ,சைவத்துக்கு எதிராக பல பதிவுகளை இட்டு வருகிறது..இந்த தீவிரவாத தளத்துக்கு பதிலடி கொடுப்பது நமது கடமையாதலால்,இனி அதன் ஒவ்வொரு புளுகுகளுக்கும் பதிலடி கொடுக்கப்படும்.. அத்தளத்தில் குற்றச்சாட்டை இங்கு பார்க்கலாம் : http://refutetrisula2.wordpress.com/ஐயப்பன்-வரலாறு/ நமது பதிலடி : ஸ்ரீ மெய்கண்ட தேசிகர் திருவடிகள் போற்றி சைவ விரோதிகளான திக-வினர்,முஸ்லிம்கள்,கிருத்துவர்கள் மற்றும் ஏனைய பலர் சைவ சமயத்தை தாக்கி,அதை அழிக்கப்…

திருக்கலியாணம்

உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க திருக்கலியாணம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை ——————————————————————————————————- தோற்றுவாய் தெய்வம் ஒன்று. அது முற்றறிவுள்ளது. எல்லாம் வல்லது. பேரருளூடையது. அதனால் வணங்காமை அதற்கியல்பாயிற்று. அது யாரையும் வணங்க வேண்டாம். விலங்கு பறவையாதியவற்றுக்கு அத்தெய்வகுணமில்லை. வணங்காமை அவற்றுக்கும் இயல்பு தான். ஏன்? வணங்க வேண்டுமென்ற உணர்ச்சி அவற்றுக்கில்லை. ஆகலின் அவையும் வணங்கா. ஆனால் மனிதன் வணங்கும் இயல்புடையான். வணங்குஞ்செயல் தொன்று தொட்டே அவனிடம் இருந்து…

நம: பார்வதீ பதயே

உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க நம: பார்வதீ பதயே சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை தோற்றுவாய் : சில வருடங்களுகு முன்வரை பாரததேசம் அடிமைப் பட்டுக்கிடந்தது. அதன் சுதந்திரத்தேர் கொண்டுபோய் நிறுத்தப்பட்டிருந்த இடம் இங்கிலாந்து. இப்பாரதத்தை ஆங்கிலேயர் ஆண்டனர். அத்தேரை இங்கு இழுத்து வரவேண்டும். அதற்காக முயன்ற பெரியார் பலர். அவருள் காந்தி கூர்ச்சரர், லஜபதிராய் பாஞ்சாலர். வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழர். சுபாஷ் வங்கர். கோகலே மராடர். பிற மாகாணங்களிலும்…

சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 101-151

உ || ஓம் நம: சிவாய || சுருதி ஸூக்தி மாலா அல்லது சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம் சிவலிங்க பூபதியின் ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும் எழுதியவர்: பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள் தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி மயிலாப்பூர், சென்னை – 600 004 சுருதி ஸூக்தி மாலை சுலோகம் 101 முதல் 151 முடிய சுலோகம் 101 ஏக : ச்ருதோஸி பரமேச்வர ! ஸத்விதீயம்…