மதுரை வாதம்

காமகோடி ஸ்ரீ சங்கராச்சாரியார் மதுரை நகர சபையில் பேசிய செய்தி 5-9-1963 தினமணியில் வந்தது. அதில் ‘ஞான சம்பந்தப் பெருமான் சமணரை வாதில் வென்று சைவத்தை நிலை நாட்டியதும் சமணர்கள் கழுவி லேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது இந்த சம்பவத்தை இன்றும் மதுரையில் உற்சவமாக கொண்டாடுகிறோம். ஆனால் சகிப்புத்தன்மைக்கு சிறந்ததான நம் சமயம் இப்படிப்பட்ட கொலை செய்யும் கொடூரமான செயலிலீடுபட்டதென்பது கேட்பதற்கே அனுசிதமாக இருக்கிறது’ என்கிறாரவர். அதில் ‘நம்சமயம்’ என்ற சொல் அவற்றைக் கலவடஞ் செய்வதாயிருக்கிறது. ‘சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது’…

சமணர் கழுவேற்றம்-விளக்கம்

உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சமணர் கழுவேற்றம் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை சமணர் கழுவேற்றம் பிரமாண நூல்கள் ஒவ்வொரு சமயமும் ஒன்றோடொன்று இயைபுடைய பலகோட்பாடுகளை யுடையது அவ்வியைபு நேராகவேனும் பரம்பரையாகவேனும் இருக்கும். ஒரு வாற்றானுந் தம்முள் இயைபில்லாத கோட்பாடுகள் எச்சமயத்தினுமில்லை. ஆகவே, ஒன்றனை யழிக்க முந்துறுவது பிறவற்றினும் போய்ப்பற்றி எல்லாவற்றையுமே யழிக்க எத்தனிப்பதாய் முடியும். இதனைக் கூர்த்தமதிகொண் டோர்க. இனி அத்தகைய கோட்பாடுகள் அவ்வச்சமயப் பிரமாணநூல் களாற்றான்…