சைவ சித்தாந்த ஆச்சாரியர்களை அறிவோம்- பாகம் ஒன்று

desikar

சிவமயம்

 

இவர் தான் மறைஞான சம்பந்த தேசிகர்…இவருக்கு இன்னுமொரு பெயருண்டு,அது தான் “நிகமஞான தேசிகர்” … 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் … களந்தை என்ற ஊரில் அவதரித்து அந்தப் பதியில் இருந்த ஞானப்பிரகாச பண்டாரத்திடம் சமய கல்வி பயின்றார்…அவ்வாசிரியர் முக்திப் பெற்ற பின்பு,மறைஞான சம்பந்த தேசிகர், காளஹஸ்திக்கு சென்றார்..அங்கு வீட்டிருக்கும் கண்ணப்பப் பண்டாரத்திடம் உபதேசம் பெற்றார்..இப்பேருபதேசம் பெற்ற பின்பு, தில்லையை அடைந்து,அங்கு நிரந்தரமாக தங்கினார்..தில்லையில் சிவயோகத்தில் திளைத்து,தன் கண்கள் பிற பொருள்களை பார்க்க வேண்டாம் என்று எண்ணி,தம் கண்களை கட்டிக் கொண்டார்…இதனால்,இவரை “கண்கட்டி பண்டாரம்” என்று பொதுமக்கள் அழைத்தனர்..இவர் இருந்த மடம்,”கண்கட்டி மடம்” என்று அழைக்கப்பட்டு வந்ததது..இம்மடம் அண்மையில் இடிக்கப்பட்டது…

சைவ சித்தாந்தத்தில் பெரும் பாண்டித்யம் உடையவர் இந்த மறைஞான சம்பந்த தேசிகர்..சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் பெரும் புலமையுடையவராக திகழ்ந்தார்…சைவ சித்தாந்த கருத்துக்களை மக்களுக்கு கூற,பல சித்தாந்த நூல்களை இயற்றினார்…சைவ சித்தாந்தத்தின் பரம பிரமாண நூல்கள்,வேதமும் சிவாகமமும்..அவை சம்ஸ்கிருதத்தில் இருக்கும் நூல்கள்…16ஆம் நூற்றாண்டில்,சம்ஸ்கிருதம் பயல்பவர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வந்ததால்,சிவாகம கருத்துக்களை தமிழில் அருளினார்கள் சைவ சித்தாந்த ஆச்சாரியர்கள்…மறைஞான சம்பந்த தேசிகரும், சிவாகம கருத்துக்களை தமிழில் தந்துள்ளார்…28 சிவாகமங்களில்,ஸ்ரீ சர்வோக்தம ஆகமமும் ஒன்று…அதற்கு உபாகமமாக இருப்பது சிவதருமோத்தரம்…இந்த உபாகமத்தை,தமிழில்,அதே பெயரில் மொழிபெயர்த்தருளினார்…மூல சிவதருமோத்தரம் விரிந்த ஒரு பெரும் நூல்…அதில் உள்ள சில முக்கிய கருத்துக்களை,ஏறக்குறைய ஆயிரம் பாடல்களில்,தமிழுக்கு மொழிபெயர்த்து பேருபகாரம் செய்துள்ளார்…”சிவதருமோத்தரம்” மட்டுமின்றி,”சைவ சமய நெறி” என்ற நூலையும் இவர் இயற்றியுள்ளார்…இந்த நூல்,சிவாகம கருத்துக்களை கூறும் நூல்…இவர் இயற்றிய சிவதருமோத்தரம் மற்றும் சைவ சமய நெறி என்ற இரண்டு நூல்களும்,சரியை நெறியை வலியுறுத்தும் நூல்கள்…மேலும்,பல நூல்களையும் இயற்றியுள்ளார்… சங்கற்ப நிராகரணம், உருத்திராக்க விசிட்டம்,முத்தி நிலை,பதி பசு பாசப் பனுவல், பரமோபதேசம்,வருத்தம் அற உய்யும் வழி, ஐக்கிய இயல் ,  பரம திமிர பானு,மகா சிவராத்திரி கற்பம்,சோமவார கற்பம்,திருக்கோயில் குற்றம் என்று பல நூல்களை இயற்றியுள்ளார்… தமிழ் மட்டுமின்றி,வட மொழியிலும் பல நூல்களை அருளியிருக்கிறார்…அதில் மிகவும் பிரசித்தி பெற்றது “ஆன்மார்த்த பூஜா பத்ததி” என்பதே.. சாத்திர நூல்கள் அன்றி,பல புராண நூல்களையும் இயற்றியுள்ளார்..கமலாலய புராணம் மற்றும் அருணகிரிப் புராணம் இவர் இயற்றியதே…

மறைஞான சம்பந்த தேசிகர் இயற்றிய பல நூல்களில் ஒன்று முத்தி நிலை….சைவ சித்தாந்தத்தில் பெரும் பாண்டித்ய உடைய இவர்,முத்தியைப் பற்றிய கருத்தில் திருக்கயிலாய பரம்பரை ஆச்சாரியர்களிடமிருந்து மாறுபட்டார்…முத்தியைப் பற்றி இவர் கொண்ட கருத்து, ஆன்ம ஆனந்த வாதம் என்று அழைக்கப்படுவது…முக்தியைப் பற்றிய தனது கருத்தை,”முத்தி நிலை” என்ற தமது நூலில் விளக்கியிருக்கிறார்… இவருடைய இந்த கருத்து,சிவாகம கருத்துடன் முரணிக்கிறது என்பதால்,தருமபுர ஆதீன ஸ்தாபகரும் திருக்கயிலாய பரம்பரையை சார்ந்தவரும் ஆன பரமாசாரியார் ,ஸ்ரீ குருஞானசம்பந்த தேசிகர், “முத்தி நிச்சயம்” என்ற கண்டன நூலை இயற்றி,மறைஞான சம்பந்தரை கண்டித்தார்…  “முத்தி நிச்சயம்” நூலுக்கு தருமபுர ஆதீனத்து ஸ்ரீ வெள்ளி அம்பலவாண தம்பிரான்,ஒரு பேருரை இயற்றியருளினார்…

சைவ சித்தந்தத்தை சார்ந்தவர்க்ள் பல குருபரம்பரையை சார்ந்தவர்களாக இருபர்…சைவ சித்தாந்தத்தில்,திருக்கயிலாய குரு பரம்பரை,ஸ்ரீ ஸ்கந்தப் பரம்பரை என்று பல சம்பிரதாயங்கள் (குரு பரம்பரை) உண்டு..மறைஞான சம்பந்த தேசிகரின் முத்தியைப் பற்றி கருத்து,நம் ஆச்சாரியர்களின் கருத்துக்கு முரணாக இருப்பினும்,மறைஞான சம்பந்தர் நமக்கு இவ்வளவு,சைவ சித்தாந்த நூல்களை அருளி பேருபகாரம் செய்ததால்,அவரை என்றென்றும் போற்றுதலே நன்றி உணர்ச்சியாகும்…

திருசிற்றம்பலம் !!

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s