அபிரகாமிய காமுகர்கள்-பாகம் 2 (போர்ஜியா குடும்பம்)

borgias

சிவமயம்

பல நூற்றாண்டுகளாக கத்தொலிக்க கிருத்துவம் தான் ஐரோப்பாவின் ஒரே சமயமாக இருந்தது..கத்தொலிக்க சர்ச் ஐரோப்பாவை ஆட்சி செய்தன…அதனால் பாவ மன்னிப்பு மற்றும் ரட்சிப்பு வியாபாரமயமாக்கப்பட்டன…எந்த பாவத்தை புரிந்தாலும்,ஒரு குறிப்பிட்ட பெரும் தொகையை கத்தொலிக்க சர்ச்சுக்கு கொடுத்துவிட்டால்,உடனே பாவ மன்னிப்பு சான்றிதழ் வழங்கப்படும்…பிற தெய்வங்களை வழிபடுபவர்களை இறக்கமில்லாமல் கொல்லுதலை தமது தர்மமாக இந்த கத்தொலிக்க கிருத்துவம் கொண்டது…கத்தொலிக்க சர்ச்சின் ,உலகம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்களை எவர் எதிர்த்தாலும்,அவருக்கு மரண தண்டனை கொடுக்கும் அளவுக்கு கத்தொலிக்க சர்ச்சு வலுவாக மாறியது…சர்ச்சுக்கள் ,பாவ மன்னிப்புக்காக பெருந்தொகையை வசூலித்து,பெரும் சொத்துக்களை குவிக்க துவங்கியது….15ஆம் நூற்றாண்டு வாக்கில்,போப்பாண்டவர் பதவி சமய தலைவராக மட்டும் இல்லை,ஒரு அரசியல் சக்தியாகவும் உருவெடுத்தது…

 

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பிறந்தவர் தான் ரோட்ரிகோ போர்ஜியா (Rodrigo Borgia) … ஏப்ரல் 1455இல்,அவருடைய தாயின் சகோதரர், மூன்றாம் கலிக்தசு போப்பாண்டவர் (Pope Calixtus III) ஆனார்..அவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி,போர்ஜியா சுலபமாகவே பிஷப்பாக நியமிக்கப்பட்டார்…..படிப்படியாக கத்தொலிக்க மத குரு அதிகார படிமுறையில் முன்னேறினார்….கார்டினலாக (cardinal) நியமிக்கப்பட்டு அதன் பின் வைஸ் சான்ஸிலராக (vice chancellor) நியமிக்கப்பட்டார் …ஐந்து போப்பாண்டவர்களின் கீழ்,சமய பணிகளை செய்தார்…

 

ஆனால் சமயம்,ஒழுக்கம் என்ற பெயரில்,போர்ஜியா,பல கன்னிப் பெண்களுடன் காமக் களியாட்டம் நடத்தினார்…காமம் மிகுந்தவராக இவர் இருந்ததால்,பெண்களின் உடம்பின் மீது அதிக மோகம் கொண்டவராக இருந்தார்..இவருடைய ஒரு பெரிய காமக் களியாட்ட விருந்தை (open-air sex orgie) கேள்வியுற்ற போப்பாண்டவர்,இவரை பதவியிலிருந்து விலக்கினார்..அந்த அளவுக்கு,காமத்தில் ஈடுபாடுள்ளவராக இருந்தார் போர்ஜியா…1470இல்,போர்ஜியா,வனோஜா டீய் கத்தநெய்(Vanozza dei Catanei) என்ற 28 வயதுடைய அழகியுடன் காதல் உறவை துவக்கினார்…அவள்,போர்ஜியாவுக்கு,மூன்று ஆண் குழந்தைகளையும்  ஒரு பெண் குழந்தையையும்   ஈன்றாள்..அவர்கள் ஜியோவானி(Giovanni,1474),சீசர்(Cessare ,1476) ,ஜொப்ரேடோ (Goffredo,1481) மற்றும் லுக்ரெஸியா(Lucrezia,1480) …

 

பின்பு வனொஜாவின் மீதுள்ள காமம் குறை, ஜியுலியா பர்னெஸ் (Giulia Farnese) என்ற 16 வயதுடைய பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டார்…. ஆனால் பிறர் தம்முடைய காமக் களியாட்டங்களை உணராமல் இருக்க,ஜியுலியா எனும் தனது காதலியை,தனது உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தான்…ஆனால்,அவளுடன் உடலுறவு கொள்ளக் கூடாது என்று அந்த பையனுக்கு தடையும் விதித்தார் போர்ஜியா…

 

1492இல்,மூன்றாம் மாசற்ற போப்பாண்டவர் (Pope Innocent III) இறந்தவுடன்,அவர் பதவிக்கு வர போட்டியிடும் மூன்று நபர்களில் போர்ஜியாவும் ஒருவர் ஆவார்…வாக்களிப்பின் முதல் சுற்றில்,பாதிரிகள் சங்கம்,இறந்த போப்பாண்டவரால் நியமிக்கப்பட்ட  ஜியுலியானோ டெல்லா ரொவேருக்கு ( Giuliano della Rovere) வாக்களித்தனர்…ஆனால்,போர்ஜியா அந்த பாதிரிகள் சங்கத்திற்கு பெருந்தொகை கொண்ட கையூட்டுகளையும்( லஞ்சம்),ஆடம்பர பரிசுகளையும் வழங்கி,தன்னை போப்பாண்டவராக தேர்ந்தெடுத்தால்,இன்னும் பல சலுகைகளும் பெரிய பதவிகளையும் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்…இதனால்,10 ஆகஸ்டுஇல்,போர்ஜியா புதிய போப்பாண்டவராக நியமிக்கப்பட்டார்…ஆறாம் அலெக்சாண்டரு போப்பாண்டவர் (Pope Alexander VI) எனும் பெயரை தாங்கினார்…

 

பதவிக்கு வந்த உடனே,தகாத உறவில் பிறந்த தமது பிள்ளைகளுக்கு ,போர்ஜியா ஆடம்பர பரிசுகளையும் பதவிகளையும் வழங்கினார் ….சீசர் எனும்,16 வயதே நிரம்பிய தன் மகனை ,வலன்சியா நகரின் தலைமை பிஷப்பாக நியமித்தார் போர்ஜியா…ஒரு வருஷம் கழித்து சீசர்,கார்டினலாக நியமிக்கப்பட்டான்…ஆனாலும்,சீசருக்கு மனதில் பொறாமை உருவானது..ஏனெனில், தனது மூத்த சகோதரன், கத்தொலிக்க படையின் தளபதியாக இருக்கிறான் என்பதால்…இதனால்,சீசரும்,ஒருபெரும் படையை திரட்டி,தன் படை தனக்கு பின்னால் வர,சீசரோ கட்டழகு சுந்தரிகளுடன் ,ரோம் நகரத்தை வலம் வர ஆரம்பித்தான்…வெளிப்படையாகவே தனது சகோதரியான லுக்ரஸியாவுடன் புணர்ச்சியில் ஈடுபட ஆரம்பித்தான்…தனது தந்தையின் காமக் களியாட்டங்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு சீசர் ஒரு காமுகனாக இருந்தான்…நாப்பல் (Naples) மன்னனின் மகளான சஞ்சியா (Sanchia) என்ற இளம் அழகி,ஜொப்ரேடொவை ( சீசரின் இளைய சகோதரன்) மணக்க  வட்டிகனுக்கு (Vatican) வந்த போது,போர்ஜியாவும் சீசரும் அவளை தங்கள் கட்டிலுக்கழைத்து,தங்களின் காமக் கிழத்தியாக்கிக் கொண்டனர்…

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s