சைவம் இஸ்லாம் -ஒரு சிறு ஒப்பீடு

உ சிவமயம் சைவ சித்தாந்த ஆச்சாரியர்கள் திருவடி போற்றி

(குறிப்பு : சைவம் = * , இஸ்லாம்= #)

எல்லா சமயங்களும் நிச்சயம் சமம் இல்லை…எல்லாம் சமயங்களும் நிச்சயம் உண்மயை இல்லை…எல்லா சமயங்களும் நிச்சயம் முக்தியை கொடுக்க வல்ல சமயங்களும் அல்ல…பொய் சமயங்கள் பல உண்டு,உண்மை சமயம் ஒன்று தான்…

முன்பு இல்லாத மனிதனை திடீரென படைத்தான் இறைவன் என்றும் ஏன் படைத்தான் என்றால் பதில் கொடுக்க முடியாமலும் சில சமயம் தன்னை வணங்கத்தான் மனிதனை இறைவன் படைத்தான் என்று ஒரு சமயம் கூறுகிறது…இறைவனுக்கு தேவை இல்லாமையால்,மனிதன் தன்னை வணங்கி இறைவனுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை,அதனால் ஏன் முன்பு மனிதனை படைக்க வேண்டும் என்ற வினாக்கு பதிலடிக்க முடியாமல் திணறும் சமயம் இது (#)…

ஆன்மாக்கள் மூன்று வகையுண்டு,ஆன்மாக்கள் அநாதி என்று சொல்கிறது ஒரு சமயம்…ஆதலால் இங்கு இறைவன் ஆன்மாவை ஏன் படைத்தான் என்ற கேள்வி எழ முடியாது…அந்த ஆன்மாக்களின் பக்குவத்துக்கேற்ப உடல்களை கொடுத்து,பல பிறப்பு எடுக்க வைத்து கடைசியில் ஞானத்தை அளித்து,முக்தியை கொடுக்கிறான் என்கிறது ஒரு சமயம் (*)…

இவ்விரண்டு சமயமும் எங்ஙணம் சமமாக இருக்க முடியும் ??

இறைவன் தான் எல்லாவற்றுக்கும் காரணம்,அப்படியெனில் தீய காரியத்திற்கும் அவனே காரணம் என்று ஆகிவிடுகிறது…பின்பு ஏன் இந்த தீய காரியம் நடக்கும்படி இறைவன் செய்ய வேண்டும் என்ற வினாக்கு,இந்த சமயத்தில் பதில் இல்லை…ஏன் இறைவன் சாத்தானை படைத்து,அவனை வழி தவற செய்ய வேண்டும்,என்ற வினாக்கு பதில் இல்லை…இப்படி ஒரு சமயம்(#)…

ஆன்மாக்கள் செய்யும் தவறுக்கு இறைவன் காரண்ம் இல்லை,அது ஆணவ மலத்தின் தாக்கம்….இந்த ஆணவ மலம் தான் ஆன்மாக்கள் தவறு செய்யும்படி தூண்டுகின்றன…இறைவன் அந்த தவறு செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்து,பிறகு அந்த ஆன்மா செய்த தவறுக்கு,அதற்கு நரக தண்டனை கொடுக்கிறான்…இவ்வாறே ஆன்மாக்கள்,புண்ணியம் செய்ய தக்க சூழ்நிலையை கொடுத்து,புண்ணியம் செய்யும்படி செய்வித்து சொர்க்கமும் (பொது புண்ணியத்துக்கு) சாலோகமும் (சிவ புண்ணியத்துக்கு) கொடுத்து,பல பிறவிகள் தோறும் அவை பாவ புண்ணியம் செய்து பக்குவப் பட்டுக்கொண்டே வந்து,சிவாகமத்தில் குறியபடி சரியை,கிரியை,யோக நெறிகளை முடித்து  கடைசியில் அவ்வான்மாக்களுக்கு ஞானத்தை கொடுத்து,முக்தியை அருள்கிறான் இறைவன்,என்று மற்றொரு சமயம் போதிக்கிறது….(*)

இவ்விரண்டும் சமம் என்றால்,சூரியனும் மின்மினி பூச்சியும் சமம் என்றல்லவா கூறவேண்டும் ??

ஒரு சமயம் கூறுகிறது,தன்னை வணங்காதவனை இறைவன் நித்திய நரகத்தில் தள்ளுவான் என்று…அவனே மனிதர்கள் தன்னை வணங்காமல் இருக்கும்படி செய்துவிட்டு,பிறகு அவர்களை நரகில் தள்ளுவான் என்று சிறுபிள்ளைத்தனமாக கூறுகிறது ஒரு சமயம் (#)…

தன்னை ஒருவன் வணங்கவில்லையென்றாலும்,அவன் பிற பொய் தெய்வங்களை வணங்கினாலும்,அதற்கு அவனை பழிவாங்காமல்,அவன் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப நரக சொர்க்கத்தை கொடுத்தி,மறுபடியும் பிறக்க வைத்து,அவனை பக்குவபடுத்தி,கடைசியில் தனது முக்தி மார்க்கத்தில் பிறக்கும்படி செய்து உதவுகிறான் இறைவன் என்று கூறுகிறது ஒரு சமயம்…(*)

இவ்விரு சமயம் போதிக்கும் இறை இலக்கணம் ஒன்றா ???

ஒரு சமயத்தில் உள்ள பிரிவுகளுக்கிடைய நடக்கும் போர்,அந்த சமயம் உருவானதிலிருந்து இன்று வரை தொடர்கிறது… அந்த சமயத்தின் பிரிவுகளிலொருவர்,அதே சமயத்தின் வேறு பிரிவினர் மத்தியில் தான் இந்த பிரிவை சார்ந்தவன் என்று தைர்யமாக் கூறமுடியாது,வேறு பிரிவின வழிபாட்டு தளத்தில் போய் தைர்யமாக வழிபட முடியாது..செய்தால் அவர்கள் உயிருக்கே ஆபத்து.. வழிபாட்டு தளத்தை கூட அந்த சமயத்தின் பிரிவினருக்கு மட்டுமே சொந்தம் என் பிரித்துவைத்துள்ளனர்… (#)

மற்றொரு சமயத்திலோ,ஒருவன் எக்குலமாயினும்,அவன் அச்சமயத்தின் சின்னங்க்களை தரித்தானாகில்,அவனை அன்பொடு வரவேற்று,இன்சொற்களை கூறி,உபசரணை செய்ய வேண்டும் என்றும்,அவன் தாழ்ந்த குலத்தை சாந்தவன் என்பதற்காக அவனை இகழ்ந்தால்,அது இறைவனையே நிந்தனை செய்வதற்கு சமம் என்று எச்சரிக்கிறது…(*)

இவ்விரண்டு சமயங்களும் ஒரே நெறியை,அதாவது ஒற்றுமையா போதிக்கின்றன ???

ஒரு சமயம் கூறுகிறது,பெண்கள் கணவன் இறந்தவுடன் எவனை வேண்டுமானாலும் மணந்து,புணரலாம் என்று..ஒரு பெண் எவ்வளவு தடவை வேண்டுமென்றாலும் விவாகரத்து செய்துக்கொண்டு,எவ்வளவு தடவை வேண்டுமென்றாலும் மணம் செய்யலாம்,எவனை வேண்டுமென்றாலும் புணரலாம்…(#)

மற்றொரு சமயம் கூறுகிறது,ஒரு பெண்ணுக்கு கற்பு நெறியை முக்கியம் என்றும்,கணவனே தெய்வம் என்றும் கணவனுக்கு பணி செய்வதே அவளுக்கு மேலான அறம் என்றும்,அவளுக்கு மணம் ஒரு முறை தான் என்றும்,விதவா மறுமணத்தை  கற்புள்ள பெண் நினைத்துக்கூட பார்க்க மாட்டாள் என்று…(*)

இதில் எந்த சமயம் பெண்களுக்கு கற்பு நெறியை போதிக்கிறது ???

ஆகையினால் இவ்விரண்டு சமயங்களும் சமம் ஆவது எப்படி ??? மலையும் எறும்பு புற்றும் சமமா ??? சூரியனும் மின்மினி பூச்சியும் சமமா ??

ஒரு சமயம் தீவிரவாதம்,விபச்சாரம்,அனுமதிக்கிறது,இறை இலக்கணம் இதுவென தெரியாமல் மனித தன்மைகளான பழி வாங்குதல் போன்றவற்றை இறைவன் மீது ஏற்றுகிறது…(#)…..

மற்றொரு சமயமோ,ஒற்றுமை,கற்பு நெறியை வலியுறுத்தி,இறை இலக்கணத்தை சரியாக கூறுகிறது…(*)

ஆகையினால் எல்லா சமயமும் ஒன்று என்பது மடமையிலும் மடமை…

சர்வலோகத்துக்கும் ஏக நாயகன்,அவன் சிவனொருவனே…சர்வ சமயங்களுக்கும் சக்ரவர்த்தியும் முக்தி மார்க்கமுமாகிய ஒரே சமயம்,சைவ சித்தாந்தம் மட்டுமே….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s