மஹாசாஸ்தா(ஐயப்பன்) பிறப்பில் ஆபாசமா ? -refutetrisula2 என்ற இஸ்லாமிய வெறி தளத்துக்கு ஒரு பதிலடி

மஹாசாஸ்தா,ஓரினசெயர்க்கையால் பிறந்தார் என்றும் ஐயப்பன் பிறப்பு வரலாறை சாடி,புரானங்களின் உட்கருத்தை புரிந்துக்கொள்ள முடியாத ஒரு இஸ்லாமிய வெறி தளமான refutetrisula2 ,சைவத்துக்கு எதிராக பல பதிவுகளை இட்டு வருகிறது..இந்த தீவிரவாத தளத்துக்கு பதிலடி கொடுப்பது நமது கடமையாதலால்,இனி அதன் ஒவ்வொரு புளுகுகளுக்கும் பதிலடி கொடுக்கப்படும்..

அத்தளத்தில் குற்றச்சாட்டை இங்கு பார்க்கலாம் : http://refutetrisula2.wordpress.com/ஐயப்பன்-வரலாறு/

நமது பதிலடி :

ஸ்ரீ மெய்கண்ட தேசிகர் திருவடிகள் போற்றி

சைவ விரோதிகளான திக-வினர்,முஸ்லிம்கள்,கிருத்துவர்கள் மற்றும் ஏனைய பலர் சைவ சமயத்தை தாக்கி,அதை அழிக்கப்
பார்க்கின்றனர்..ஆனால்,மாமலையை ஒரு சிறு எறும்பு கூட்டம் குடைந்துக் கொண்டு ,அதனைப் பொடிப் பொடியாக்க முடியுமா ??முடியாதென்பர் அறிவுள்ளவர்..ஆனால்,அறியாமையால் மூடப்பட்டு பொய் சமயங்களில் பிரவேசித்து,இறைவனின் இலக்கணம் இவை
என்று அறிந்துக் கொள்ள முடியாத இந்த மூடர்கள்,கண்டவனையெல்லாம் தெய்வமென,பொய் தெய்வங்களை உண்மையென நம்பி,நம்
சமயமான சைவத்தை முழு மூச்சுடன் எதிர்க்கின்றன..சைவ சமய அடிப்படை அறிவு கூட இல்லாமல்,சைவப் புராணங்களில் உள்ள
வரலாறுகளை திரித்தும்,அவற்றின் உட்கருத்தை தெரிந்துக்கொள்ள அறிவில்லாமல் அவற்றை சாடியும் பதிவிட்டு வருகின்றனர்…இவர்கள் நம் சமயத்துக்கு எதிராக வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் மிகவும் பிரபலியமான ஒன்றுதான் மஹாசாஸ்தாவின் பிறப்பு…அதனை சிறிது பார்ப்போம்..

யார் இந்த மஹாசாஸ்தா ?? இவரை தான் பலர் ஐயப்பன் என்பார்கள்..சிலர் ஐயனார் என்பர்..சைவ சமயத்தில்(சிவாகமங்களில்) இவர்
மகாசாஸ்தா என்றழைக்கப்படுவார்…சிவகண தலைவர்களில் இவரும் ஒருவர்..ஆனால்,சபரி மலையில் இருக்கும் ஐயப்பன் கோவில் சிவாகமத்துக்கு முற்றிலும் விரோதமானது..அங்குள்ள ஐயப்பனின் நெற்றியில் நாமத்தை பூசிவிட்டனர்…ஆனால்,மகாசாஸ்தா ஒரு சைவ உத்தமர்..நெற்றியில் விபூதியை மட்டுமே பூசுபவர்…ஆதலால்,சபரி மலைக்கு சைவர்கள் போகக் கூடாது..அது நம் ஆலயமும்
அல்ல..சரி,விஷயத்துக்கு வருவோம்…சைவ விரோதிகள் என்ன குற்றம் சாட்டுகின்றனர் என்றால்,ஆணுக்கும் ஆணுக்கும்,அதாவது ஓரின புணர்ச்சியால் பிறந்தவர் தான் இந்த சாஸ்தா என்கின்றனர்..இந்த சைவ விரோத மூடர்களின் பொய்யுரையை சற்று ஆழமாக அலசி,அவர்கள் முகத்தில் கரியை பூசுவோம்…

முதலில்,இக்கதை புராணத்தில் இருக்கிறது…சைவ புராணங்களில் இதனைப் பார்க்கலாம்…முதலில்,புராணத்தை நாம் எப்படி படிக்க
வேண்டும் என்பதைப் பார்ப்போம்..

“இப்புராணங்கள் பௌராணிக போர்வை காவியப் போர்வை எனும் இருவகைப் போர்வை போர்த்துக் கொண்டுள்லமையால் அவற்றை
உரித்து விட்டே பொருளுண்மையைக் காண வேண்டியாகும்..புராணங்களின் பொருளை அறிவுடையோர் ஆராய்ந்து கண்டுகொள்ளல்
வேண்டுமெனக் கந்தபுராண ஆசிரியர் (ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார்) கூறுவர்..புராணங்களின் உண்மைப் பொருள்,அவற்றின் முகப்புத்
தோற்றமளவில் பெறப்பட்டாகாது என்பதே அவர் கூற்றின் தாய்பரியமாம்.ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் புராணங்கள் பற்றி குறிபிட்டிருப்பதாவது :-

கந்தபுராணத்தில் விவரிக்கப்படுந் திருமணங்கள் மூன்றில் ஒன்றேனும் என்றேனும் குறித்த விவரணப்படி நிகழ்ந்த நிகச்சியாகா.பிரபஞ்ச சிருஷ்டி நேருங்காலத்தில் பரமசிவத்திடமிருந்து சக்தி வியாபிக்கும் நிலையே அவற்றில் அறிகுறி வகையால்
உணர்த்தப்பட்டுள்ளது..அவ்வுணர்வின்றி இப்பகுதிக்கு இலக்கிய ஆய்வு மோடியில் உரை நிகழ்த்து வோருங் கேட்போரும் நரகத்தில் வீழ்வர்” (சைவப் பெரியார் சிவஸ்ரீ சு.சிவபாதசுந்தரம் அவர்களின் நூலான “சைவமகத்துவ”த்திலிருந்து ஒரு பகுதி).

ஆகையினால்,புராணங்களில் விவரிக்கப்படும் நிகழ்ச்சிகளை,சைவ சித்தாந்த சாத்திர பயிற்சி மற்றும் சிவாகம பயிற்சி உள்ளவர்கள்,அதன்
உள்ளர்த்தத்தை ஆராய வேண்டும் என்று வெளிப்படையாக படித்துவிட்டு கொக்கரிக்கக் கூடாது என்றும் பெறப்படும்..அப்படியெனில்,இந்த
சாஸ்தாவின் பிறப்பு வரலாறு எந்த உண்மையை நமகு உணர்த்துகிறது ??அதை இனி நாம் பார்ப்போம்…
இந்த கதை எங்கு வருகின்றதென்று பார்ப்போம்..கந்த புராணத்தில்,பாற்கடலில் எழுந்த அமுதத்தை தேவர்களுக்கு பகிர்ந்துக் கொடுத்தற் பொருட்டு விஷ்ணு மோகினியானார்…அண்ட்ஹ மோகினியை சிவபிரான் புணர்ந்து வயிற்றில் கருவை உண்டாக்கினார்…அதனால் ஹரிஹர
புத்திரர் வெளிபட்டார்..ருத்ரஹ்ருதய உபநிஷத்தில்,”ருத்ராத் ப்ரவர்த்தே பீஜம் பீஜயோநிர்ஜநார்த்தந :” என்று வருகிறது..இதன் அர்த்தம், “ருத்ர மூர்த்தி பீஜமெனவும் அந்த பீஜத்துக்கு யோனி,ஜனார்த்தனாகிய விஷ்ணுவெனவும் சொல்லப்படுகிறார்கள் ” ….

இந்த புராண மற்றும் வேத ஆதாரம் கொண்ட வரலாறு நமக்கு என்ன உணர்த்துகின்றதென்றால்,சிவபிரான் திருவருள் விஷ்ணுவாகிய
மூர்த்தியில் அதிட்டித்தலாற் காத்தலாகிய தொழில் நடைபெறும்..அவ்வருள் தொழிலாகிய காத்தலை ஐயனாரெனக் ,புராண முறைப்படி கூறப்பட்டது,அதாவது குறியீட்டாக,symbolical ஆக….கந்தப் புராணத்தில்,மகாசாத்தா படலத்தில் 28ஆம் செய்யுளில் விஷ்ணுவை ஒரு சக்தி என்றும் 32ஆம் செய்யுளில் விருப்பு வெறுப்பு இல்லையாதலால் “உற்ற காதலும் உண்மை அன்று ” என்றலும் ,புணார்ச்சியெனும் சொல்,மேலே கூறிய பொருளையே உடையதென்பதை தெளிவிக்கும்…54ஆம் பாட்டில்,ஐயனார் “எவ்வுலகையும் கங்குலம் பகலெல்லையுங் காப்பன்” என்றதால்,அவர் காத்தல் அருளின் வடிவென்று பெறப்படும்…மேலும் சிவ பிரானுக்கு காமம் என்பது இல்லையென்று குறிக்கவே
புராணங்களில்,அவர் காமனை எரித்த வரலாறு கூறப்படுகின்றது..வேதத்திலும் இவ்வாறு கூறப்படுகிறது :

“யோ..பஸ்மீசகார மந்மதம் ….தஸ்பை..ருத்ராய நமோ அஸ்து ” ( எவன் மன்மதனை சாம்பராக்கினான்,அந்த உருத்திரனுக்கு நமஸ்காரம் ஆகட்டும்)- சரபோபநிஷத்

ஆகையினால்,காமமே இல்லாத இறைவனான சிவபிரான்,காமத்தால் மோகினையை புணரவில்லையென்பது ,அறிவுள்ளவருக்கு தெளிவாகும்..இங்கு மோகினையை புணர்ந்தார் என்பது,symbolicஆக, சிவ பெருமான் அருளால்,விஷ்ணு காத்தல் தொழிலை புரிகிறார் என்பதும்,அந்த காத்தல் அருளுக்கு symbol தான் சாஸ்தா என்று புராணம் தன் பாணியில் கதை ரீதியாக கூறியது…

இதே கதையை,திருவாவடுதுறை புராணம் வேறு விதமாக கூறுகிறது..

திருவாவடுதுறை புராணத்தில் ,”சாத்தாவை பிறப்பித்துக் காவல் தொழில் கொடுத்த அத்தியாய”த்தில்,

கருணை வைத்துநன் மறையருள் புரியெனக் கழற
அருணமலர்க்கரம் அமைத்துமா முடியினை அசைத்துத்
தருண மோகினி உமைவடி வமைவுறுந் தகையாற்
புரண நாயகன் பாவகப் பரிசினாற் புணர்ந்தான் (பாடல் 725)

பொருள் : “எம் மீது கருணை வைத்து நல்ல மறைகளை எமக்கு மீண்டும் அளித்து அருள் புரிக” என்று (தேவர்கள்) வேண்டவும்,பொன்
மலர்க்கரம் அமைத்து,மாமுடியினை அசைத்து,இளமையான உமையன்னை வடிவு திகழும் முறைமையால்,புராண நாயகன் பாவக முறைமையால் புணர்ந்தருளினார்..

அங்கு நின்றவர்க் கறிவுறா தரிமனம் அறியப்
பொங்கு சிற்சுகம் காட்டியே தாதுவைப் புரியச்
செங்கை யிற்தரித் தேந்தலும் ஒருசிறு மகவாய்த்
துங்க மேவுநற் சாத்தாவந் துதித்தனர் சுடர்போல் (பாடல் 726)

பொருள் : அங்கு நின்ற தேவர்களுக்கு அறுவுறாத வண்ணம்,திருமால் மனம் அறிய ,பொங்கிடும் அறிவுமயமான சுகம் காட்டி தாதுவைப் புரிய,திருமால் தம் செங்கையில் தாங்கி ஏந்திடவும் ,ஒரு சிறு குழந்தையாய்,தூய்மை பொருந்திய நல்ல சாத்தா வந்து சுடர் போல் தோன்றினார்…(சிற்சுகம் என்றால் அறிவுமயமான சுகம்..புலனின்பத்தின் மேலான சுகம்)

மேலே உள்ள பாடல்களில்,மற்ற தேவர்களுக்கு அறியாமல்,திருமாலுக்கு மட்டுமே அறிவும் வண்ணம்,சிவ பெருமான் அருள் புரிய,மோகினியின் கரத்தில் ஒரு சாஸ்தாவாகிய ஆண் குழந்தை தோன்றியது..ஆக,இங்கு சிவ பெருமான் ,மோகினியை புணரவில்லை,மாறாக
அறிவுமயமான சுகத்தை கொடுக்க,திடீரென ஒரு குழந்தை தோன்றியது ??அப்படியாயின் ,இக்குழந்தை புணர்ச்சியில் பிறக்கவில்லை என்று பெறப்படுகிறது..

ஆகையினால்,சாஸ்தாவின் தோற்றத்தில் ,இந்த சைவ விரோதிகள் கூறுவது போல் எந்த வித ஆபாசமும் இல்லை,மாறாக,சிவாகமத்தில்
கூறிய கருத்தை,கதா ரூபமாக புராணங்கள் கூறுகின்றன..அவ்வளவே..

 “திருநாவுக்கரசு சுவாமிகள் ‘அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே’ எனவும்.

    ‘நூறு கோடி பிரமர்கள் நொந்தினர்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்
ஈறிலாதவன் ஈசன் ஒருவனே’ எனவும்

அருளிச் செய்கிறார்.  முதலில் கூறப்பட்ட அரியும், அடுத்த திருப்பாடலில் காணப்படும் நாராயணனும் ஒருவரா? வெவ்வேறான தெய்வங்களா? ஒருவராக முடியாது.  இருப்பின் அழியக் கூடிய நாராயணன் சிவபிரானின் தேவி என்று அபத்தமாக முடியும் அன்றோ! எனவே அவ்விருவரும் ஒரே தெய்வமல்ல என்பது தானே போதரும்.

மூன்று வகைப்பட்ட நாராயணன்

    சிவபிரானின் தாதான்மிய சக்திகள் நான்கில் புருஷ சக்தியே நாராயணன எனப்படும். அந்நாராயணன் தான் எந்தையின் தேவி.  ‘அரியலால் தேவியில்லை’ என்ற அருள்வாக்கு இந்த நாராயண சக்தியையேக் குறிப்பிடுகிறது.

    இனி, சுத்தவித்தை ‘முத்திபெற்று மலவாசனை மாத்திரம் உடையவராய்க் கீழுள்ள உருத்திரன், மால், அயன், இந்திரன் முதலியோரைத் தொழிற் படுத்துவோராகிய உருத்திரன் மால் அயன் இந்திரன் முதலியோருக்கும் அவர் தறுகரணாதிகட்கும் இடமாம் என்றுணர்க; என்று சிவஞான பாஷ்ய மொழியைச் சிந்திக்க.  இதில் தொழிற்படுத்தும் நாராயணன், தொழிற்படும் நாராயணன் என இருவகை நாராயணர் பேசப்படுகின்றனர்.  தொழிற்படுத்துகின்ற நாராயணனும் உயிர்த்தான்.  மலவாசனை மாத்திரம் உடையவன்.  பிறப்பிறப்பற்ற நிலை பெற்றவன்.  அவனது இருப்பிடம் சுத்தவித்தியா தத்துவம்.

    அவனால் தொழிற்படுத்தப்படும் நாராயணன் கீழுள்ள பிரகிருதியில் உள்ளவன்.  அவன் 25 தத்துவங்களையே பேசும் வைணவர்களின் தெய்வம்.  அவனே ‘ஆறு கோடி நாராயணர்’ என அப்பர் பெருமானால் அடையாளம் காட்டப்பட்டவன்.  ஐயிரு பிறப்பெடுத்தவனும் அவனே.  அங்ஙனம் 25 தத்துவங்களுட்பட்ட நாராயணனும், 36 தத்துவங்கட்கு அப்பாற்பட்ட சிவபிரானும் சமரசத் தெய்வங்கள் என்று கூறுவது சரியா?

    பஞ்சராத்திரம் என்றழைக்கப்படும் வைணவம் சித்தாந்த சைவத்தில் புறச்சமய வரிசையில் காணப்படுகிறது.  அந்த வைணவமும், நமது ‘மேன்மை கொள்’ சைவமும் இருபெரும் தெய்வமுடையன எனறு சமரசம் பேசுவது பொருந்துமா? 12 பக்கங்களில் ‘மாலறியா, நான் முகனும் காணாமலை’ யாம் திருவண்ணாமலையின் ஈடிணையற்ற சிறப்பினை விரிவாக எடுத்துரைத்த கட்டுரைக்கு அடுத்து ‘நஞ்சுண்ட அரனும், மண்ணுண்ட மாலவனும்’ இருபெரும் தெய்வம் எனக் கூறும் கட்டுரை இடம்பெற்றது விசித்திரமன்றோ! ” (“சைவத்தில் சமரசமா” என்று சைவசரபம் மா.பட்டமுத்து ஐயா அவர்களின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி) 

ஆகையினால்,நாராயணர்(விஷ்ணு) மூவகையானவர்கள் இருக்கின்ரனர்..அதில் ஒருத்தர் தான் சிவனின் சக்தி என்று கூறப்படுகிரார்..மேலும்,இந்த இஸ்லாமிய பாசிச தளம் refutetrisula2 ,வெளியிட்ட கந்த புராண பாடல்களில்,தெளிவாக கூறப்பட்டிருக்கிறது நாராயணன் சிவனின் ஒரு சக்தியென்று…பாடல் 29இலிருந்து 37 வரை படியுங்கள்…. வெறுமனே இந்த இஸ்லாமிய வெறி பிடித்த கயவர்கள் நம் சமயத்தைப்பற்றி தப்பான அபிப்பிராயத்தை பரப்ப பார்க்கின்றனர்..ஆனால்,இவர்களுடைய அரபு மூட நம்பிக்கை நிறைந்த சமயம் போல் அல்ல நம் சைவ சமயம்..இவர்கள் என்ன முயற்சி செய்தாலும்,நம் சமயத்தை அவர்கள் அழிக்க முடியாது…இதை அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்..

Advertisements

2 thoughts on “மஹாசாஸ்தா(ஐயப்பன்) பிறப்பில் ஆபாசமா ? -refutetrisula2 என்ற இஸ்லாமிய வெறி தளத்துக்கு ஒரு பதிலடி

  1. Pingback: திரிசுலா கொடுத்தது பதிலடியாம் …திரிசுலாவின் நகைச்சுவை -1 « refutetrisula2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s