சுருதி ஸூக்தி மாலா : சுலோகம் 51-100


|| ஓம் நம: சிவாய ||

சுருதி ஸூக்தி மாலா

அல்லது

சதுர் வேத தாத்பர்ய ஸங்க்ரஹம்

சிவலிங்க பூபதியின்
ஸம்ஸ்க்ருத வ்யாக்யானத்தைத் தழுவி
தமிழில் பதவுரையும் தாத்பர்யங்களும்

எழுதியவர்:
பண்டிதராஜ – ஸாம்ப ஸ்ரீ
கை. பாலஸுப்ரமண்ய சாஸ்திரிகள்
தலைமை உபாத்தியாயர், ஸம்ஸ்க்ருத கல்லூரி
மயிலாப்பூர், சென்னை – 600 004
சுருதி ஸூக்தி மாலை
சுலோகம் 51 முதல் 100 முடிய

சுலோகம் 51

ஏஷா மஹோபநிஷத் ஆஹ ஹிரண்ய கர்ப்பம்
ஜாதம் த்வதேவ பகவன் ப்ரதமம் ஸுராணாம் |
நாராயாணாபி ஜனமேனமதாபி மந்தா :
சம்ஸந்தி தத்ர பவத : கதிசித் ப்ரஸூதிம் ||
புருஷோத்தமனாலும் உபாஸிக்கப்படும் ஈச்வரன் நாராயணன் நாபி கமலத்திலுண்டான ஹிரண்ய கர்ப்பன் நெற்றியில் பிறந்தவன் என்ற கொள்கையையும், அப்புராணங்களின் அபிப்ராய பேதத்தையும், இந்த நாராயணோப நிஷத் மேலே நன்கு விளக்குகிறது என்கிறார்.

பதவுரை

பகவந் – ஹே பகவானே! ஏஷா மஹோபநிஷத் – இந்த யோ தேவானாம் ப்ரதமம் புரஸ்தாத் —–ஸம்யுனக்து என்ற மந்த்ரமானது, ஸுராணா ப்ரதமம் – தேவர்களுக்கு முந்தினவரான ஹிரண்ய கர்பம் – ஹிரண்ய கர்ப்பனை, த்வதேவ – உம்மிடமிருந்தே, ஜாதமாஹ – பிறந்தவனாகக் கூறுகிறது. பிரம்மா விஷ்ணுவான பத்மநாபரின் நாபிக்கமலத்திலிருந்து பிறந்தார் என்ற ப்ரமை நீங்கிய நல்ல நினைவுள்ள அறிவைக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த மந்த்ரம் வேண்டுவது கவனிக்கத் தகுந்தது. அதா அபி – இப்படிதத்வமிருந்த போதிலும், ஏனம் – இந்த ஹிரண்யகர்ப்பன் நாராயணாபி ஜனம் – நாராயணனிடமிருந்து நாபிக்கமலத்தில் பிறந்தவராக, மந்தா : சம்ஸத்தி – ந்யாய விசாரத்தால் சுருதியர்த்தம் செய்ய இயலாத மூடர்கள் சொல்லுகிறார்கள். கதிசித் – சிலர், தத்ர – அந்த ஹிரண்ய கர்ப்பனிடத்தில் (அவன் நெற்றியில்) பவத :- உம்முடைய, ப்ரஸூதிம் சம்ஸந்தி – பிறப்பையும் சொல்லுகிறார்கள். புராணங்களில் பிரம்மாவும் விஷ்ணுவும், பரமேச்வரனால் படைக்கப்பட்ட பிறகு தந்தையைக் குறித்துக் கடும் தவம் புரிந்து தந்தைக்குச் சமமான விச்வ ரூபாத்மக மகிமையை அடைந்தார்கள். பிறகு அவ்விருவர்களுக்கும் ஓர் ஸமயம் யார் பெரியவன் என்ற கலகம் நேரிட்டது. அப்போது பிரம்மன் விஷ்ணுவைப்பார்த்து என் சரீரத்துக்குள் புகுந்து என் மகிமையைப்பார் என்று சொல்ல விஷ்ணுவும் பிரம்மா சரீரம் புகுந்து மகிமையைப் பார்த்துவிட்டு வெளியே வந்தார். பிறகு விஷ்ணு ப்ரம்மாவைத் தன் சரீரத்தில் புகுந்து தன் மகிமையைப் பார்க்கச் சொன்னார். பிரம்மா விஷ்ணுவின் சரீரம் புகுந்தார். விஷ்ணுவின் மகிமையைப் பார்த்துவிட்டு, வெளியே வரவழியில்லாமல் சிறிது நேரம் தவித்துக் கடைசியில் நாபித்வாரம் வழியாக வெளிவந்தார். பிறகு ஈச்வரனைக் குறித்து பின்னும் கடும் தவம் புரிந்தார். சிலகாலம் கழித்து தவத்தில் உபாஸ்ய மூர்த்தியான ஈச்வரன் உபாஸனா ஸ்தானமாகிய ப்ரூமத்யஸ்தானம் என்ற ஆக்ஞாசக்ரத்திலிருந்து தோன்றி, ப்ரம்மாவிற்கு வரம் கொடுத்து அனுக்ரஹித்தார் என்ற விளக்கம் நன்கு காணப்படுகிறது. ஆகவே விஷ்ணுவின் நாபி வழியாக வெளிவந்த ப்ரம்மாவை விஷ்ணு புத்ரன் என்று சொல்வது ஹன்ஹுரிஷியின் காதிலிருந்து வெளிவந்த கங்கையை, ஜன்ஹுவின் புத்ரி ஜான்ஹவி என்று சொல்வது போல், தவறான அபிப்ராயம், வாயிற்படியின் வழியாக வெளிவருபவனை, வீட்டின் புத்ரன், வாயிற்படியின் புத்ரன் என்று சொல்லலாமா? உபாஸிக்கப் படுகிற பரமேச்வரன் ப்ரூமத்யஸ்தானத்தில் ஆவிர்பவித்ததால், பிரம்மாவின் புத்ரன் என்று சொல்வது தவறு.

சுலோகம் 52

மத்யே லலாடமரவிந்த புவ : க்ஷணேன
த்ருஷ்டோ பவானிதி க ஏஷநிகர்ஷ வாத |
யோகா திரூடமனஸ : சிவ மாத்ருசோபி
ஸ்தானேஷு பஞ்சஸு ந கஸ்ய தவோபலம்ப : ||
பிரம்மாவிற்கு பத்மஜன் என்று பெயர்; விஷ்ணுவிற்கு அக்ஷஜன் என்று பெயர்; அவ்விதமே ஈச்வரனுக்கு லலாடஜன் என்று பெயர். இந்தப் பெயர்கள் வெளிவந்த இடத்தைத் தான் குறிக்கின்றன. தந்தையைக் குறிக்கவில்லை யென்பது விளக்கப்படுகிறது.

பதவுரை

அரவிந்தபுவ :- தாமரையில் வெளிவந்த ப்ரம்மதேவனுடைய, மத்யேலலாடம் – நடு நெற்றியில், பவான் – தாங்கள், க்ஷணேன த்ருஷ்ட :- ஒரு க்ஷணம் வரப்ரஸாதம் அளிக்க ஆவிர்ப்பவித்த ஸமயம் காணப்பட்டீர், இத்யேஷ :- என்ற இந்த வாதம், கோ நிகர்ஷவாத :- உம்மைக் குறைவாகச் சொல்லும் வாக்யம் ஆகுமா என்ன ?

தல்லலாடாதபூத் சம்பு: ஸ்ருஷ்ட்யர்த்தம் தத் ந தூஷணம் என்று ப்ரம்மாண்ட புராண வசனம், ப்ரம்மாவிற்கு படைக்கும் சக்தியைக் கொடுக்க வந்த பரமசிவனுக்கு நெற்றியில் ஆவிர்ப்பவித்தது குறைவாகாது என்று ஸ்பஷ்டமாகச் சொல்லப்படுவது புலப்படவில்லையா என்று சிவலிங்கபூபதி கேட்கிறார்.

சிவ – ஹே பரமேச்வரா! யோகாதிரூடமனஸ:- உபாஸனையில் அமர்ந்த மனதை உடைய, மாத்ருசோபி – என்னைப் போன்ற ஸாதாரண ஜனங்களான, கஸ்ய – யாருக்குத்தான், பஞ்சஸு ஸ்தானேஷு – ஹ்ருதய கமலம், கர்ணரந்த்ரம், பிரம்மரந்த்ரம் தாடை புருவத்தின் நடுவு, என்ற ஐந்து (தாங்கள் ஆவிர்ப்பவிக்கும்) இடங்களில், தவ – உம்முடைய, உபலம்ப : ந : ஆவிர்ப்பவித்தல் ஏற்படுகிறதில்லை? த்யானம் செய்யும் என்னைப்போன்ற மனுஷ்யனுடைய ஐந்து ஸ்தானங்களில் ஏதாவது ஒன்றில் ஆவிர்ப்பவித்து வரமளிக்கும் ஆசுதோஷியான நீர் ஹிரண்ய கர்ப்பன், ஆதிதேவன் தவத்திற்கு, சிறந்த ஸ்தானமான ப்ரூமத்ய ஸ்தானத்தில் ஆவிர்ப்பவித்து படைக்கும் சக்தியை அளிக்காமல் எப்படி இருக்க முடியும்? அங்கு வாமனிக்க ஆவிர்ப்பவித்தீர் இந்த உண்மை தெரியாதவர்கள், உம்மை பிரம்ம புத்ரன் என்று சொல்லுகிறார்கள். அதுவும் உம் புதல்வனுக்கு ப்ரஸம்சை தான் உமக்கும் ஸந்தோஷம் தான் புத்ரன் நன்மை தந்தைக் கில்லையா?

சுலோகம் 53

ப்ரம்மாணி பஞ்ச தநவ : சிவ மந்த்ரரூபா
ஜீவாதவ : பசுபதே ! சிவஸம் ஹிதானாம் |
ருத்ரேஷுபுண்யமிவ பஞ்சக மக்ஷராணாம்
அஸ்யாம் மஹோபநிஷதீதி மஹத்வவாத : ||
ஏதத்வை மஹோபநிஷதம் வேதானாம் குஹ்யம் என்ற சுருதி வாக்யம் நாராயணோப நிஷத்தை – மஹோப நிஷத் என்று கூறுகிறது, அதற்குக் காரணம் விளக்கப்படுகிறது.

பதவுரை

பசுபதே – ஹே பசுபதியே! சிவஸம்ஹிதானாம் – சிவஸம்ஹிதைகளுக்கு, ஜீவாதவ: – உயிராக விருக்கும் (பரதானமான) பஞ்சப்ரம்மாணி – ஸத்யோஜ்ஜாதம் ப்ரபத்யாமி —–ஸதாசிவோம் என்ற ஐந்து ப்ரம்மங்களாகிய, சிவ மந்த்ர ரூபாஸ்ததவ: – ஸதா சிவங்களான சரீரங்கள், அஸ்யம் மஹோபநிஷதி – இந்த உபநிஷத்தில், ருத்ரேஷு – ருத்ராநுவாகங்கள் பதினொன்றில், புண்ய மக்ஷராணாம் பஞ்சகமிவ – கீர்த்தன மாத்ரத்தில் புண்ய ப்ரதமான பஞ்சாக்ஷரங்கள் போல அனுப்ரவிஷ்டா :- நடுவில் அடங்கியிருக்கின்றன, இதி – என்ற காரணத்தால், மஹத்வ வாத:- மஹோப நிஷத் என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது.

பஞ்சாக்ஷரமான “நம : சிவாய” என்பது நடுவில் இருப்பதால் ருத்ரமந்த்ரத்துக்குச் சிறந்த மஹிமை அப்படியே ஸத்யோ ஜாதாதி ஐந்து மந்த்ரங்கள் நடுவில் அடங்கியிருப்பதால் மஹோப நிஷத் என்ற பெயர். பஞ்சாக்ஷரம் அடங்கியதால் ருத்ரநுவாகம், ருத்ரப்ரதி பாதகம் என்பது, எப்படி ஸந்தேக மற்றதோ அப்படியே, பஞ்சப்ரம்ம மந்த்ரங்கள் ஐந்தும் அடங்கியிருப்பதால், மஹோபநிஷத்தாகிய நாராயணோபநிஷத் பரமேச்வரன் உபாஸனையை விளக்குகிறது என்பதில் சிறிதும் ஸந்தேகமில்லை. இந்த முத்ரை வைக்கப்பட்டு விட்டதால் அந்யதேவதையைக் குறிக்கும் ஸம் பாவனைக்குக் கொஞ்சமும் இடம் கிடையாது.

சுலோகம் 54

வித்யேச்வரஸ்த்வமஸி பூதபதிஸ் த்வமேக :
ஸ்ரஷ்டுர் பவானதிபதி : ஸ்ருஜதி ப்ரபஞ்சம் |
யத் ப்ராம்ஹணான் ப்ரதி தவ ச்ருதமாதிபத்யம்
தத் ப்ரம்மணோ மம ஸதாசிவ ! ஜன்மலாய : ||

முன் சுலோகத்தில் குறிக்கப்பட்ட பஞ்சப்ரம்ம மந்த்ரங்கள் ஐந்தில் ஐந்தாவது மந்த்ரத்தின் அர்த்தம் விளக்கப் படுகிறது.
பதவுரை

த்வம் – நீர், வித்யேச்வரோஸி – 18 வித்யா ஸ்தானங்களுக்கும் தலைவராக இருக்கிறீர், ஏகஸ்த்வம் – நீர் ஒருவர்தாம், பூதபதிரஸி – ஸர்வ ப்ராணிகளுக்கும் தலைவராக இருக்கிறீர் ஷ்ரஷ்டு :- பிரம்ம தேவருக்கு அதிபதி:- தலைவராகிய, பவாந் – தாங்கள், ப்ரபஞ்சம் ஸ்ருஜதி: – உலகத்தைப் படைக்கிறீர், யத் – எந்தக் காரணத்தால், ப்ராம்மண ஜாதியான தவ – உமக்கு, ப்ராமணன் ப்ரதி – ப்ராம்மணர்களுக்கெல்லாம், ஆதிபத்யம் – தலைவனாயிருப்பது, ச்ருதம் – இந்த ஈசான மந்த்ரத்தில், ப்ரம்மாதிபதி:- என்ற பதத்தில் கர்மதாராய ஸமாஸத்தை நிஷாதுஸ்தபதி ந்யாயப்படி ஆச்ரயித்து. பிராம்மணராகவும், அவர்களுக்குத் தலைவராகவும், இருப்பவர் என்று அர்த்தம் கொள்வதால், சொல்லப் பட்டிருக்கிறதோ, தத் – அந்தக் காரணத்தால் ஸதாசிவ – ஸதாசிவ ஸ்வரூபனே, பவத : பிராம்மணராகிய உம்மிடமிருந்து, மம – பிராமணானாகிய எனக்கு, ஜன்மலாப :- ஜன்மா ஏற்பட்டது பெரிய லாபம், பெரிய பாக்யம், ப்ராம்மணராகிய தாங்கள் கூடஸ்த புருஷனாகவிருக்கும் ப்ராம்மண வம்சத்தில் நான் ஜனித்தது பல ஜன்மாக்களில் ஆர்ஜிதமான புண்ணியங்களின் பலன் – பெரியலாபம், க்ருத க்ருதயனானேன் என்று ஸ்ரீ ஹரதத்த பரமாசார்யார் தன் பிராம்மணப் பிறப்பைக் குறித்து மகிழ்ந்து பேசுகிறார்.

சுலோகம் 55

வித்யேச்வரத்வ புனருக்த தயா ந வாச்யம்
வேதாதி பத்யமயமேவ மஹேச ! வேத : |
வித்யாபவந்தி சதச : ப்ரவிபஜ்யமானா:
ஸ்ரோதாம்ஸி கின்ன ஸரிதேவ ப்ருதக் க்ருதாநி ||
ப்ரம்மாதிபதி : என்ற பதத்திற்கு வேதத்தின் தலைவர் என்ற பொருள் கூறாமல் ப்ராம்மணர் என்றும், ப்ராம்மணர்களுக்குத் தலைவரென்றும் பொருள் கூறியிதற்குக் காரணம் சொல்லப்படுகிறது.

பதவுரை

வித்யேச்வரத்வ புனருக்ததயா – ஐந்தாவது மந்த்ரத்தில், ஈசானஸ்ஸர்வ வித்யானாம் என்ற பதத்தால் சொல்லப்பட்ட விஷயத்தாலேயே கிடைப்பதால், புனருக்தி தோஷம் வராமல் இருப்பதற்காக வேதாதிபத்யம் ந வாச்யம், பிரம்மாதிபதி: என்ற பதத்துக்கு வேதங்களுக்குத் தலைவன் என்று அர்த்தம் சொல்லக் கூடாது மஹேச – பரமசிவனே! சதச : பலவிதமாக, ப்ரவிபஜ்யமானா :- பிரிக்கப்படுகின்ற, வித்யா :- வித்யைகள், அயம் வேத ஏவ பவந்தி – இந்த வேதமாகவே இருக்கின்றன. வேதமூலகமான வித்தைகள் வேதம் தானே; மண் குடம் மண் தான். ஆதலால் வித்தைகளுக்கதிபதி என்றால், வேதாதி தி என்பதும் அதிலிருந்தே கிடைத்துவிடும். மறுபடி சொன்ன தோஷம் கூறியது கூறல் வராத வண்ணம் ப்ராம்மணரும்,அவர்கள் தலைவரும் என்ற புது அர்த்தம் கைக்கொள்ளப்பட்டது.

ஸரிதா – பெரிய நதியால், ப்ருதக் க்ருதாநி – பிரிக்கப்பட்ட ஸ்ரோதா, ஸி – ப்ரவாகங்கள் ஸரிந்த ந பவந்தி கிம் – நதியாக ஆகாதா என்ன? நதியும் ப்ரவாகமும் ஒன்றுதான்.

ப்ரமம் பதத்துக்கு பரப்ரம்மம், தாமரையில் வீற்றிருக்கும் படைப்பவன் (பிரம்மா) வேதம், ப்ராம்மணன் என்று நாலு அர்த்தங்கள் உண்டு. ப்ரம்ஹணோதி பதி: என்ற பாகம் படைக்கும் பிரம்மாவிற்கு அதிபதி என்று கூறிவிட்டது. வித்யாதி பதி: என்றதால்,ஸகல வித்தைகளுக்கும் மூலமான வேத ஆதிபத்யம் கூறப்பட்டுவிட்டது, பரப்ரம்மம் தானே தனக்கு அதிபதியாக இருக்க முடியாது, பரப்ரம்மத்திற்கு அதிபதி மற்றொருவர் இல்லை.

யஸ்மாத் பரம் நாபரம் அஸ்தி கிஞ்சித் என்பது சுருதி வாக்யம். வாயவ ஸம்ஹிதையில் முனிவர்கள் பிரம்மாவைக் கேட்க ப்ரம்மா மஹேச்வரனுக்குமேல் உயர்ந்த தெய்வம் கிடையாது என்று அவர் மகிமையை விளக்கும் வசனங்கள் பலவாறாக விவரிக்கப்பட்டிருப்பது காண்க, மேலே கூறிய நாலு அர்த்தங்களில், மூன்றுக்கு அவகாசம் இல்லாததால் பாரி சேஷந்யாயத்தால் மிகுதியான, நாலாவதான ப்ராம்மண ஜாதி என்ற அர்த்தம் தான் பிரம்மாதிபதி என்ற பதத்துக்கு அர்த்தங் கொள்ள வேண்டும். ஆதலால் இந்த மந்த்ரப்படி, பிராம்மணர்கள், பூஜிக்க வேண்டிய தெய்வம் பரமேச்வரன் தான் என்று வெளியாகிறது, பரமேச்வரனைப் பூஜிப்பவன் ப்ராம்மணனாகத் தான் இருப்பான்; கூடஸ்த புருஷன் வாஸனை அந்த வம்சத்திலுதித்தவனுக்குத் தானே ஏற்படும். விசேஷாத் ப்ராம்மணோ ருத்ரம் ஈசானம் சரணம் வ்ரஜேத் என்ற கூர்ம புராண வசனமும் காண்க.

இவ்விதம் 20 சுலோகங்களால் மூன்றாவது லக்ஷணமாகிய யாக்ஞிக்யோபநிஷத் ப்ரோக்தோபாஸனா கர்மத்வம் என்ற லக்ஷணத்தை விவரித்தார்.

சுலோகம் 56

ஆதித்யம் ருக் யஜுஷஸாமநிதான கோசே
பிம்பே நிவிஷ்டமதிதிஷ்டதி பூருஷோ ய : |
ஏஷா தமேஷ இதி ஸாபிநயா பவந்தம்
பூதாதிபத்ய வசனேன சசம்ஸ நாம்னா ||

நான்காவதான காயத்ரீ ப்ரதிபாத்யன் என்ற லக்ஷணத்தை விவரிக்கும்முன் உபோத்காதமாக சூரியன் மகிமையைச் சொல்லுகிறார்.
பதவுரை

ருக், யஜுஷ ஸாம நிதான கோசே – ருக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்று விதமான மந்த்ரங்களாகிற நிதியை வைத்திருக்கும் கஜானாவாகிய, பிம்பே – சூரிய பிம்பத்தில், நிவிஷ்ட – இருக்கும், சூர்யனை, ய: புருஷ :- எந்த புருஷன் அதிதிஷ்டதி – ஆதாரமாகத் தங்கி (அதிஷ்டித்து) உள்ளந்தர்யாமியாக இருக்கிறானோ தம் – அவனை, ஏஷா உபநிஷத் – ஆதித்யோவா ஏஷ – புருஷ : என்ற ஆதித்யோபநிஷத்தானது, ஏஷ: என்ற சப்தத்தால், ஸாபிநயா – சுட்டிகாட்டி (ப்ரத்யக்ஷமாக எதிரிலிருப்பதைக் கைவிரலால் சுட்டிக்காட்டுவது போல்) பூதாதிபத்ய வசனேச – பூதங்களுக்கு அதிபதி என்ற அர்த்ததை விளக்கும், நாம்னோ பூதாதிபதி : என்ற அஸாதாரணமான ரூடப் பெயரால், பவந்தம் – தங்களை சசம்ஸ – சொன்னது, புமழ்ந்து வெளியிட்டது, த்யேய: ஸதா – சக்ர: என்ற ஸ்ம்ருதி, சுருதிக்கு விரோதமாதலால் தள்ளத்தகுந்தது, (விரோதாதிகரண ந்யாயம், மீமான்ஸகர்கள் ஸம்மதப்படி)

‘ஸெளர மண்டல மத்யஸ்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம் |
நீலக்ரீவம் விருபாக்ஷம் நமாமி சிவம் அவ்யயம் ||

முதலிய ஸ்ம்ருதிப்படிக்கும் ஸூர்ய மத்யவர்த்தீ புருஷன் பரமேச்வரன் தான், நாராயணன் அல்ல.
சுலோகம் 57

உக்தோ ஹிரண்யபதிரேஷ ஹிரண்ய பாஹு :
உக்தோ அம்பிகாபதி ருமாபதிரேஷ உக்த : |
ஆஹுர் பவந்தம் அதிதைவதமுஷ்ணரச்மே :
ஆதஸ் ததர்ச்சன விதெள பகவந் அபிஞா : ||
பதவுரை

ஏஷ : இந்தபரமசிவன், ஹிரண்யபதி : உக்த :- உலகத்திலுள்ள தங்கமனைத்திற்கும் காரணமானவர் என்று சொல்லப்பட்டிருக்கிறார். பரமேச்வரன் ரேதஸ்ஸால், மேரு உள்பட, ஆயிரத்துக்கு மேல்பட்ட மலைகள், தங்கமயமாக்கப்பட்டிருக்கின்றன வென்றும், ப்ரம்மாண்டமும் தங்கமயமாக்கப்பட்டிருக்கின்றன வென்றும், ப்ரம்மாண்டமும் தங்கமயக் கோழிமுட்டையாகக் காணப்படுகிறதென்றும், பரமசிவனுடைய ரேதஸ்ஸின் திவிலை தான் கலியுகத்தில் மகாசக்தியுள்ள தெய்வமாக விளங்கும் சரவணபவனான கார்த்திகேயன் என்றும், அக்னிக்கு அந்த ரேதஸ் அம்சமானதால் கொளுத்தும் சக்தி ஏற்பட்டதென்றும், கங்கைக்கு சரக்காட்டிற்கும் அந்த ரேதஸ் ஸம்பந்தத்தால் தான் மகிமை வளர்ந்ததென்றும், வாயவீய ஸம்ஹிதை, ஆதித்ய புராணம், ஸனத்குமார ஸம்ஹிதை, ஸ்ரீமத் வால்மீகி ராமாயணங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. ஜம்பூலம் என்று சொல்லப்படும் நாவல் பழம் மகிமையும் ஜாம்பூநதம் என்று தங்கத்தின் பெயரும், பரமசிவன் ரேதஸ்ஸின் திவிலையிலிருந்து உண்டானது பற்றியே என்பதும் விளக்கப்பட்டிருக்கிறது.

ஏஷ : இந்த பரமசிவன், ஹிரண்ய பாஹு :- உக்த : கை முதலிய ஸர்வ அங்கங்களும் ஸ்வர்ணமயம் என்று சுருதி, ஸ்ம்ருதி இதிகாஸ புராணங்களில் சொல்லப் படுகிறது; சாந்தோக்ய உபநிஷத்தில் நகசிகை பர்யத்தம் தங்க மயமாக, சூர்ய மண்டலத்தில், ஈச்வர உபாஸனை சொல்லப்பட்டிருக்கிறது. அங்கு யதா கப்யாஸம் புண்டரீக மேவம் அக்ஷிணீ என்று, சூர்ய கிரணத்தால் மலர்ந்த தாமரைபோல் இருகண்கள் என்று சொல்லப்பட்டிருப்பதால், அக்ஷ்யாதித்ய புருஷேபாஸனை முக்கண்ணனைக் குறிக்காது என்பது ஸரியல்ல, மூன்று பிள்ளைகளின் தந்தையைப்பற்றி, இவருடைய இரண்டு பிள்ளைகள் அக்னிக்கு ஸமமான தேஜஸ் உள்ளவர்களென்று சொன்னால் மூன்றாவது பிள்ளை அக்னிதுல்யமாக இருக்கவில்லை யென்பது தான் பொருள்படும். அதுபோல் ஈச்வரனுடைய இரண்டு கண்கள் மலர்ந்த தாமரை போன்றது என்று சொன்னால், அவருடைய மூன்றாவது கண் மலர்ந்த தாமரை போன்றதல்ல, தாமரை மொட்டு போன்றது என்பது கருத்தாகுமே யல்லாது இருகண்கள் உள்ளவனைத்தான் குறிக்கும் என்பது ந்யாய விருத்தம். காளிதாஸ் மகாகவி மூன்றாவது கண்ணைப் பற்றி உத்ப்ரேக்ஷித்திருப்பதும் இதற்கு ஸாதகமாகும். மன்மதன் எரிந்து சாம்பலாகிவிட்டதால், கருணா மூர்த்தி மூன்றாவது கண்ணைத் திறப்பதேயில்லை. இரவு, பகல் ஏற்பட சூர்ய சந்திரர்களான மற்ற இரண்டு கண்களைத்தான் திறந்து கொள்கிறார். இதை மகாகவி வெட்கத்தால் மூன்றாவது கண்ணை மூடியே வைத்திருப்பதாக உத்ப்ரேக்ஷிக்கிறார். கொளுத்திய ஒரு மன்மதனுக்குப் பதில், பராசக்தி தன் கடாக்ஷப் பார்வையால், பல மன்மதன்கள் முளைக்கச் செய்து விட்டாள். வெட்கித்து வெட்கித்து மூன்றாவது கண்ணை தேவி கடாக்ஷத்தின் அருகில் திறப்பதில்லை, ஆதலால் மொட்டுத் தாமரை போலிருப்பதென்று சொல்வதும் உசிதமே.

ஏஷ : அம்பிகாபதிருக்த :- இவர் அம்பிகாபதி யென்றும் சொல்லப்படுகிறார் துர்கா, லக்ஷ்மீ, ஸரஸ்வதீ, என்ற மூன்று சக்திக்கும், அகார, உகார, மகார என்ற மூன்று எழுத்துக்களுக்கும் தலைவனல்லவா, ஓங்கார ப்ரதி பாத்யனான பரமசிவன் ஏஷ: உமாபதிருக்த :- இவர் கேனோபநிஷத்தில் சொல்லியபடி ப்ரம்மவித்யா ரூபணியான உமாதேவிக்குத் தலைவன் என்றும் சொல்லப்படுகிறார். உஷ்ணரச்மே :- சூரியனுக்கு, அதிதைவதம் – அதிஷ்டாதாவான தேவதையாக, பகவந் – ஹே பரமேச்வரா ! பவந்தம் உம்மை, ஆஹு:- சூரியனுக்கு பரமசிவன் தைவதம் என்று கல்ப்பகாரர்கள் சொல்லுகிறார்கள், ஆத :- ஆதலால் ததர்ச்சனவிதெள – அந்த சூரிய பூஜை செய்யும் கார்யத்தில், அபிஞர் : – விஷயமறிந்தவர்கள், பவந்தம் ஆஹு :- உம்மைத்தான் தேவதையாக பூஜிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள்.

ஈச்வரம் பாஸ்கரம் வித்யாத் ஸ்கந்தமங்காரகம் ததா |
சுக்ரம் சசீபதிம் வித்யாத் உமாம் சைவ நிசாகரம் ||
என்ற வசனங்கள் ஆதாரமாக் காணப்படுகின்றன. தேவர்ஷிகளின் ப்ரச்னத்துக்கு ஸூதர் பதில் அளிப்பதாகச் சொல்லப்படும் லிங்க புராணம் வசனங்கள், சூரியனைப் பரமசிவனாகவும், சந்திரனை உமாதேவியாகவும் ப்ரம்மா, விஷ்ணு மற்ற தேவதைகளைப் பரிவார தேவதைகளாகவும் அர்த்தநாரீச்வரரை உபாஸிக்கும்படி கூறுகின்றன. ராமாயணத்திலும், ராமனுக்கு ராவணனை ஸம்ஹாரம் செய்ய சக்தி உண்டாவதற்காக, ஸ்ரீ அகஸ்தியர் உபதேசித்த ஆதித்யஹ்ருதயத்தில், சூரியனை பாஸ்வதே ஸர்வபக்ஷாய ரெளத்ராய வபுஷே நம : என்று கூறப்பட்டிருப்பதும் ஆதாரமாகும்.

சுலோகம் 58

யோ மண்டலம் தபதி ய : ச ததந்தராத்மா
யா சாநயோர் பவதி பூதபதே ! விபூதி : |
ஜானான ஏததபி யத் பலமச்னுதே ச
ஸர்வம் யதாவதிஹ தத் கதிதம் க்ரமேண ||

ஆதித்யோ வா ஏஷ: என்ற அநுவாகத்தின் அர்த்தத்தைச் சுருக்கமாகச் சொல்லும் சுலோகம்.
பதவுரை

பூதபதே – ஸகல ஜகத்துக்கும் ரக்ஷகனே. யோ மண்டலம் தபதி – எந்த சூரியன் வட்டமான மண்டலத்தில் ப்ரகாசிக்கிறோனோ, ய : ச ததந்தராத்மா – தேஜஸ்ஸுக்கும் அர்தர்யாமியான யாதொரு புருஷனோ, அனயோ :- இவ்விருவர்களுடைய யா ச விபூதி : பவதி – தேஜஸ், ஓஜஸ், பலம், யசஸ், சக்ஷுஸ், காது, மந்யு, ம்ருத்யு, மித்ரன், வாயு, ப்ராணன், திக்பாலகன் முதலிய எவ்வளவு விபூதிகள் உண்டோ, ஏதத் – இதை, ஜானான : – அறிந்து உபாஸிப்பவன் யதபி பல மச்னுதே – எந்தப்பயனை அடைகிறானோ, தத்ஸர்வம் ச – அவையனைத்தும், இஹ – இந்த இரண்டு அநுவாகங்களில், யதாவத் – உள்ளபடி, கரமேண கதிதம் – முறையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஏஷ பூதானாமதிபதி : என்று தெளிவாக ஸூர்ய ஜ்யோதிஸ்ஸில் உபாசிக்கப்பட வேண்டிய ஸாயுஜ்ய, ஸாலோக்ய, ஸமானைச்வர்ய முக்தியைத்தரும் தெய்வம், பூத நாதனாகிய பரமசிவன் என்று கூறி, பிறகு ஸர்வோவை ருத்ர : என்று அடுத்த அநுவாகத்தால் விளக்கி, அம்பிகாபதயே, உமாபதயே நமோ நம: என்று கடைசியாக ஸூர்யோபாஸனை, உமாபதியாகிய பரமசிவனிடத்தில் முடிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் உபக்ரம, உபஸம்ஹாரம் மத்யே பராமர்சம் என்ற தாத்பர்ய க்ராஹக ப்ரமாணத்தால் ஸூர்யோபாஸ்தி தாத்பர்ய விஷயமான தெய்வம் பரமசிவன் என்பது, மீமாம்ஸா வாக்ய ந்யாயத்தால் ஸித்தாந்தித விஷயமாகும்.

ஸகல உலகமும் ஸ்த்ரீ புருஷாத்மகம் அர்த்த நாரீச்வரரின் விபூதியாகும், பெண்கள் உமாதேவியின் விபூதி, ஆண்கள் பரமேச்வரன் விபூதி, ஸர்வப்ரபஞ்சம் – சப்தாத்மகம், வாக்காகிய சப்த்ராசிகள் தேவியின் விபூதி; அர்த்தப்ரபஞ்சம் சிவனுடைய விபூதி என்பதும் வாயவீயஸம்ஹிதையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அநுவாக தாத்பர்யத்தை யறிந்தால், ஸாவித்ரீ மந்த்ர தாத்பர்யம் நன்கு அறியப்படும் என்று அடுத்த சுலோகத்தில் சொல்லுகிறார்.

சுலோகம் 59

மா நாம பூதகிலமன்யதிமம் ப்ரதேசம்
அத்யாபிதாஸ் ததிதி மந்த்ர விதோ பவந்தி |
வாச்ய : கிமஸ்ய ஸவிதா ஸவிதுர் வரேண்ய :
கிம் : வா பவானிதி விதர்க்கபதம் ந தேஷாம் ||
பதவுரை

அந்யத் – இந்த, ஆதித்யோவா ஏஷ என்ற அநுவாகங்களைத் தவிர மற்ற அகிலம் – எல்லா வேதவாக்கியங்கள் மா நா மபூத் – வெளிப்படுத்தப்பட வேண்டாம், இமம் ப்ரதேசம் – இந்த அநுவாகத்தை அத்யாபிதா :- அர்த்தஞானத்துடன் தெரிவிக்கப்பட்டவர்கள், ததிதி மந்த்ரவித: – “தத் ஸவிதுர் வரேண்யம்” என்று 24 எழுத்து, மூன்று பாதங்கள் கொண்ட நித்யகர்மானுஷ்டான யோக்யமான மந்த்ரத்தின் உண்மையான தாத்பர்யத்தை, அஸ்ய – இந்த காயத்ரீ மந்த்ரத்துக்கு, கிம் ஸவிதா வாச்ய :- ஸூர்யன் உபாஸிக்கப்பட வேண்டியவராகத் தாத்பர்யமா, கிம் வா ஸவிதுர் வரேண்ய : பவாந் – அல்லது, சூர்யனுக்கும் அந்தர்யாமியாக வரம் அளிக்கும் தாங்கள் தாத்பர்ய விஷயமான பொருளா? இதி – என்ற, விதர்க்கபதம் ந – ஸந்தேக அவகாசமே ஏற்படாது. ஆதித்யாநுவாகத்தில் சூர்ய அந்தர்யாமியான பரம் ஜ்யோதி உபாஸ்யமாகச் சொல்லப்பட்டிருப்பதைக் கவனிப்பவர்கள், காயத்ரீ மந்த்ரத்தில், அந்த ஸூர்யாந்தர்யாமி ஜோதியே பர்க்கன் எனப்படுவர் உபாஸ்ய தேவதையாகும் என்ற நிச்சயத்தை அடைவார்கள் என்பது திண்ணம்.

சுலோகம் 60

பாஸ்வந்தமேஷ விஷயீகுருதே ந மந்த்ர :
சக்னோதி வக்தும் அதிதைவத மீச்வரம் த்வாம் |
யஸ்மாதயம் த்வயி நிரோஹதி பர்க்க சப்த :
ப்ரக்ஞா ப்ரசோதகதயா தததீயஸே த்வம் ||
ஏஷ : – இந்த, தத்ஸவிது: என்ற காயத்ரீ மந்த்ரம் பாஸ்வந்தம் ஸூர்யனை, ந விஷயீகுருதே – குறித்துச் சொல்லவில்லை. அதிதைவதம் – அந்தர் யாமி யான, ஈச்வரம் – பரமேச்வரனாகிய, த்வாம் – உம்மை, வக்தும் சக்னோதி – தெரியப்படுத்த சக்தியுள்ளதாக இருக்கிறது. யத் காயத்ர்யா: பரம் தத்வம் தேவ தேவோ மஹேச்வர: என்று ஆதித்ய புராணத்தில் ப்ரஸித்தம். லிங்க புராணம் இதை நன்கு விளக்குகிறது. யஸ்மாத் – எந்தக் காரணத்தால் அயம் பர்க்க சப்த: – இந்த காயத்ரி மந்த்ரத்திலுள்ள பர்க்க என்ற அகாராந்த சப்தம், த்வயி உம்மிடத்திலேயே, நிரோஹதி – நிரூடமாக இருக்கிறதோ, பிறரைக் குறிக்கச் சக்தியற்றதாக இருக்கிறது. ஹரஸ் ஸமர ஹரோ பர்க்க: த்ர்யம்பக: த்ரிபுராந்தக: என்ற அகாராந்த சப்தங்களின் நடுவில் பர்க்க: என்று அமரஸிம்ஹன் சிவ நாமாவாகப் படித்திருப்பது போதுமான சான்றாகும் ஸ்காந்தத்தில் ப்ருங்கியால் கூறப்படும் பசுபதி நாமாக்களில் அடங்கியது பர்க்க: என்ற சப்தம். ராவணன் ஸ்தோத்ரம் செய்யும்போதும் சம்போ பர்க்க பவ – என்று துதிக்கிறான். தத் – அந்தக் காரணத்தால், த்வம் – தாங்கள், ப்ரம்ஞா ப்ரசோதகதயா – தர்மாதர்ம புத்தியைத் தூண்டுபவராக, அதீயஸே – வேதங்களில் கூறப்படுகிறீர்.

சுலோகம் 61

ஸாந்தோயம் அந்தகரிபோ ! யதி பர்க்க சப்தோ
யத்தத் பதத்வயம் அனன்வயி லிங்க பேதாத் |
அன்வேஷயேத் உபயமந்ய தபின்னலிங்கம்
அச்ரூய மாண மஸமஞ்சஸ ஏஷ பக்ஷ : ||
இந்த காயத்ரீ மந்த்ரத்தைச் சில பெரியவர்கள் சூரிய பரமாக அர்த்தம் செய்கிறார்கள். சூரியனல்லவா நமது புத்திகளைத் தூண்டி ப்ரவ்ருத்தியை உண்டுபண்ணுகிறார் என்ற ஸந்தேகம் நீக்கப்படுகிறது.

பதவுரை

அந்தக ரிபோ – யமனை அழிப்பவரே! அயம் – இந்த, பர்க்க சப்த :- பர்க்க: என்ற பதம், ஸாந்த: யதி – ஸகாராந்தமான பர்க்கஸ் என்ற பதமாகக் கொள்ளப்பட்டால், யத்தத் பதத்வயம் – ய :, தத், என்ற (காயத்ரீ மந்த்ரத்தில் உள்ள) இரண்டு பதங்களும், லிங்க பேதாத் – புல்லிங்கம், நபும்ஸக லிங்கம் என்று லிங்கம் மாறியிருப்பதால், அனன்வயி – ஒன்றுக்கொன்று சேர்த்து அர்த்தம் பண்ணமுடியாமல் பிரிந்துபோய், அச்ரூயமாணம் – இந்த மந்த்ரத்தில் சொல்லப்படாத, அபின்னலிங்கம் – பொருத்தமான லிங்கத்தோடு கூடிய, உபயமந்யத் – வேறு இரண்டு விசேஷணத்தையும் விசேஷ்யத்தையும், அந்வேஷயேத் – ஆகாங்க்ஷித்து, அத்யாஹாரம் செய்து கொள்ளச் செய்யும். ஆதலால் ஏஷ பக்ஷ: – இந்த சூரிய பரமாக அர்த்தம் செய்யும் அந்வயபக்ஷம், அஸமஞ்சஸ :- பொருத்தமானதாகாது.

ய : ந : திய: ப்ரசோதயாத் – தஸ்ய – தேவஸ்ய ஸவிது: வரேண்யம் – யத் பர்க்க, தத்தீமஹி என்பது அவர்கள் மதப்படி அன்வயம் சொல்லவேண்டும். அப்பொழுது, ய : தத், என்று இருபதங்களுக்கு பரஸ்பரம் அன்வயம் சொல்லப்படவில்லை என்பது ஓர் தோஷம். தஸ்ய என்ற ய: என்ற சப்தத்துக்குத் தகுந்த புல்லிங்க விசேஷ்யபதமும், தத் என்ற நபும்ஸக லிங்கத்துக்குத் தகுந்த யத் என்ற விசேஷண நபும்ஸக லிங்கபதமும் இரண்டு விசேஷண, விசேஷ்ய பதங்களைச் சேர்த்துக்கொண்டு அந்வயம் சொல்ல வேண்டியிருப்பதால், அத்யாஹாரத்வயம் என்ற மற்றொரு தோஷமும் ஏற்படுவதால், இந்த அன்வயபக்ஷம் ஸமஞ்சஸமாகாது, அகாராந்த பர்க்க: என்ற பதத்தைக் கைக்கொண்டால் மந்த்ரத்திலுள்ள ய: தத் பதங்களே அத்யாஹாரத்வயம் இல்லாமல் பரஸ்பரம் அன்வயிக்கும்படி அர்த்தம் சொல்லலாம். யோ பர்க்க: ந: திய: ப்ரசோதயாத் – (தத் – தம்) தேவஸ்ய ஸவிதுர்வரேண்யம் (பர்க்கம்) தீமஹி என்பதல்லவா, ஸித்தாந்த பக்ஷத்தில் அன்வயம். இந்த பக்ஷத்தில் பரஸ்பராந்வயம் உண்டு. அத்யா ஹாரத்வய க்லேசமுமில்லை, ஆனால், தத் என்ற நபும்ஸக லிங்கம் சாந்தஸ ரீதியாகப் புல்லிங்கமென்று அங்கீகரிக்கவேண்டும் இது சிறிய தோஷம் மேலும் மைத்ராயணீய சுருதியும், தலவகார ப்ராம்மணமும், கூர்மபுராண வசனமும், சைவபுராண வசனமும், யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதியும் சாதாதப வாக்யமும் ருத்ர ஏவ பர்க்க: என்ற சுருதி வசனமும், தத் பர்க்காக்யம் கிமபி பரம்தாம என்ற ஸாம்ப ஸ்துதி வாக்யமும், ததக்ஷரம், தத்ஸவிதுர் வரேண்யம் ப்ரக்ஞாச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ – என்ற மந்த்ரோப நிஷத்துமாக – ஒன்பது பலமுள்ள ப்ரமாணங்கள் காயத்ரீ மந்த்ரத்திலுள்ள பர்க்க’. என்ற பதம் அகராந்தம் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. மேலும் தத் என்ற பதம் லிங்கம் மாறுதலால் சாந்தஸ முறைப்படி, தம் வரேண்யம் தீமஹி என்ற யாக்ஞவல்க்ய வசனம், வரேண்யம் தம் உபாஸ் மஹே என்ற சாதாதபவாக்யம், தம் பர்க்காக்யம் அஹம் பஜாமி என்ற சைவ புராண வசனங்கள் தெரிவிக்கின்றன. தத் என்ற நபும்ஸக லிங்கத்துக்கு தகுந்தபடி தத் அக்ஷரம் தத் பரமம் தாம தத்பரம் தத்வம் விசேஷ்ய பதம் கொடுத்து, அர்த்தம் கூறப்பட்டுள்ளது. மந்த்ரோப நிஷத், ஸாம்பஸ்துதி, கூர்ம புராணங்களில். ஆதலால் பர்க்க’. என்பது அகாரந்தம்தான் ஸமஞ்ஜஸம். ஸகாரந்தமல்ல என்பது அறியத் தகுந்தது. அகாராந்த பர்க்க: பதம் பரமசிவனிடம் நிரூடமானது. காயத்ரீ பரமேச்வரனைத்தான் குறிக்கும், சூர்யனை அல்ல. சூர்ய அந்தர்யாமியான பரமசிவனை என்பதை ஆதித்ய அநுவாகமும் கூறுகிறது.

சுலோகம் 62

சப்தஸ்ம்ருதிர் ஹ்யஸுநிவா கஞிவா பதாந்தே
யுக்தம் வதத்யுபயதா ஸ்வரமாத் யுதாத்தம் |
வ்யத்யஸ்த காரகமவைமி பதம் கஞந்தம்
மைத்ராயண ச்ருதி பராஹத ஸாந்த பாவம் ||
ஸ்வரம் ஆதியுதாத்தமாக பர்க்க சப்தம் காணப்படுவது, அஸுந் ப்ரத்யயம் வைத்து, ப்ரஸ்ஜ்தாதுவிலிருந்து பாபங்களை வறுத்து நாசம் செய்கிறவர் என்ற வ்யுத்பத்தியிலும், கஞ்ப்ரத்யயம் வைத்து ஷ தாதுவிலிருந்து வ்யுத்பத்தி அகாரந்தமாகச் செய்வதிலும், பொருத்தமாகவே இருக்கிறது. ஏனெனில் அஸுந்நித் எனப்படும் கஞ்ஞித் எனப்படும் இரண்டு ப்ரத்யயங்களிலும் ஆதியுதாத்தம் பாணினி வ்யாகரணத்தில் ஞ்ணித் யாதிர்நித்யம் என விதிக்கப்பட்டிருக்கிறது என்கிறது இந்த சுலோகம்.

பதவுரை

அஸுநிவா கஞிவா பதாந்தே – ப்ரஸ்ஜ் என்ற தாதுவின் முடிவில், அஸுந் ப்ரத்யயம் வைத்தாலும், கஞ் ப்ரத்யயம் வைத்தாலும், சப்தஸ்ம்ருதி:- வ்யாகரண சாஸ்திரமாகிய ஆதியுதாத்த ஸ்வரம் விதிக்கும் ஞ்ணித்யாதிர் நித்யம் என்ற பாணினி ஸூத்ரம், ஆத்யுதாத்தம் ஸ்வரம் – முதல் உயிரெழுத்து உதாத்த ஸ்வரத்தோடு கூடியிருப்பதை, உபயதா – இரண்டு ப்ரத்யயத்திலும் யுக்தம் வததி – பொருந்தும் என்று சொல்லுகிறது மைத்ராயணச்ருதி, பராஹதஸாந்தபாவம் – யோஸ்ய பர்க்காக்ய: என்றல்லவா மைத்ராயணச்ருதி, ஸகாரந்தமாகில் பர்க்க ஆக்ய: என்று மைத்ராயணச்ருதி இருக்கவேண்டும் என்ற காரணத்தால், மைத்ராயண சுருதியில் விலக்கப்பட்ட ஸகாராந்த பக்ஷத்தையுடைய கஞந்தம் பதம் – அகாரந்தமான கஞ் ப்ரத்யயம் வைத்த, வ்யத்யஸ்த காரகமவைமி – கர்த்தா என்ற அர்த்தத்தில் கஞ் ப்ரத்யயம் வராது என்று வ்யாகரண சட்டமிருந்தாலும் – சாந்தஸமாகக் கர்த்தரீ மாறி கஞ் ப்ரத்யயம் வந்திருப்பதாகத் தீர்மானிக்கிறேன். இல்லாவிடில் கீழ் சொன்ன ப்ரமாணங்கள் எப்படி கஞந்த்ரமான அகாரந்தபதத்தைக் கூறமுடியும்? ஆதலால் அந்யதானுபபத்தி ப்ரமாணத்தால், கர்த்தரி கஞ் ப்ரத்யயம் சாந்தஸம் என்பது திண்ணம்.

சுலோகம் 63

மைத்ராயண ச்ருதிரஸெள த்திதிப்ரக்ருத்ய
பர்க்கம் பவந்த மபிதாய விசிந்த நீயம் |
ருத்ரஸ்ய பர்க்கபத கோசரதாம் ப்ருவாணா
ஸாந்தம் ப்ரதிக்ஷிபதி பர்க்கபதம் புராரே ||
அஸெள மைத்ராயணச்ருதி :- இந்த மைத்ராயண ச்ருதியானது, ததிதி – தத் ஸவிதுர்வரேண்யம் என்ற காயத்ரீ மந்த்ரத்தை, ப்ரக்ருத்ய – வ்யாக்யானம் செய்யத் தொடங்கி, பர்க்கம் பவந்தம் – அகாராந்த பர்க்கபத நிரூடார்த்தமாகிய தங்களை, விசிந்த நீயம் அபிதாய – விசிந்தயாமி என்ற பதத்தால், உபாஸிக்கப் படவேண்டியவராகச் சொல்லி, பர்க்கர் யார் என்ற கேள்வி ஏற்பட, ஏஷருத்ரோ பர்க்காக்யோ ப்ரம்மவாதின: என்ற அடுத்த வாக்யத்தில் சொல்லப்பட்ட ருத்ரஸ்ய – ருத்ரனாகிய உமக்கு, பர்க்கபதகோசரதாம் – பர்க்க பதத்தின் அர்த்தமாக, ப்ருவாணா – சொல்லொக்கொண்டு, பர்க்கசப்தம் – பர்க்க பதத்தை, ஸாந்தம் ப்ரதிக்க்ஷிபதி – ஸகாரந்தமல்ல என்று விலக்குகிறது. ஸகாரந்தமாகில், மைத்ராயணச்ருதி பர்க்க ஆக்ய என்று இருக்க வேண்டும். தலவகார ச்ருதியும் ஸகரந்த பர்க்கஸ் சப்தமல்ல என்று தெளிவாகச் சொல்லுகிறது.

சுலோகம் 64

ஸாந்தம் பதம் ததபி நைவ ததாதி வக்தும்
யத் ப்ராம்மணந் தலவகாரிண ஆமனந்தி |
ப்ரச்னோத்தர க்ரம நிரூபித பூர்வபாதம்
பாதம் த்வீதீயமபி பர்க்கமயம் ப்ரவீதி ||
பதவுரை

தலவகாரிண :- தலவகார ப்ராம்மணத்தைச் சேர்ந்த ரிஷிகள், க: ஸவிதா என்று ப்ரச்னத்தை ஆரம்பித்து, பர்க்க மயம் என்பது இரண்டாவது பாதம் எனச் சொல்வதால், யத் ப்ராம்மணமாமனந்தி – எந்த ப்ராம்மணத்தைச் சொல்லுகிறார்களோ, ததபி – அந்த ப்ராம்மணமும், ஸாந்தம் பதம் வக்தும் நைவ ததாதி – ஸகாராந்தமாகச் சொல்ல, அவகாசம் கொடுக்கவே இல்லை. ப்ரச்னோத்தரக்ரம் நிரூபித பூர்வ பாதம் – யார் ஸவிதா என்று கேள்வி கேட்டுக்கொண்டு, ஏஷப்ரதம: பாதம் என்று முதல் பாதத்தை நிரூபித்துவிட்டு, த்விதீயம் பாதமபி – காயத்ரீ மந்த்ரத்தின் இரண்டாவது பாதத்தையும், பர்க்கமயம் ப்ரவீதி பர்க்க பதம் அடங்கியது என்று விவரிக்கிறது. ஸகாராந்தமாகில் பர்க்கோ மயம் என்று தலவகார ப்ராம்மணமிருக்க வேண்டும்.

சுலோகம் 65

பர்க்க : ப்ரசோதயதி யோ தியமஸ்மதீயாம்
தம் தீமஹீதி கடனா விநிமாய லிங்கம் |
வாச்யஸ்ய பர்க்க ! பவத : ஸ்வதாபிதானம்
பர்க்காக்ய மித்யபி ச ஸாம்பவசோனுரோத : ||
பதவுரை

ய: பர்க்க :- எந்த பர்க்கன், அஸ்மதீயாம் தியம் – நமது புத்தியை, ப்ரசோதயதி – தூண்டுகிறாரோ, தம் தீமஹி – அந்த பர்க்கனை த்யானம் செய்கிறோம், இதி என்று, லிங்கம் விநிமாய – நபும்ஸக லிங்கத்தைச் சாந்த ஸமென்று புல்லிங்கமாக மாற்றிக்கொண்டு, கடனா – க்ரியையில் விசேஷ்ய கர்மகாரமாக அன்வயப் படுத்தப்பட்டிருக்கிறது அப்படியாகில் பர்க்க – ஹே பரமேச்வரா! வாச்யஸ்ய – பர்க்க பதத்தால், நிரூட சக்தியால் ப்ரதி பாதிக்கப்படுகிற பவத: உங்களுக்கு ஸ்வபதாபிதானம் – ருத்ரன் தான் பர்க்கன் என்ற சொந்தப் பதத்தால் விளக்கப்படுவதும், பர்க்காக்யமித்யபி – தத் பர்க்காக்யம் கிமபி பரமம் தாம என்ற, ஸாம்ப வசோனுரோதஸ்ய – ஸாம்ப ஸ்துதிவாக்யத்தின் ஒற்றுமையும் ஏற்படுகிறது.

சுலோகம் 66

த்வாமேவ மந்த்ரோப நிஷத் ப்ரவீதி
ததித்ய்ருசோஸ்யா : ப்ரதிபாத்யமர்த்தம் |
ததக்ஷரம் தத் ஸவிதுர்வரேண்யம்
பிரக்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ ||
பதவுரை

ததக்ஷரம் தத் ஸவிதுர்வரேண்யம் – உபாஸிக்கப்படுவது அக்ஷரமெனப்படும், அது ஸூர்யனுக்கும் உபாஸ்யம், தஸ்மாத் புராணீ ப்ரக்ஞா ப்ரஸ்ருதா – அவரிடமிருந்து அநாதியாக புத்திகள் தூண்டப்பட்டு உண்டாகின்றன என்ற மந்த்ரோபநிஷத்தானது, அஸ்யா:- இந்த, ததித்ய்ருச :- தத்ஸவிதுர் வரேண்யம் என்ற காயத்ரீ ரிக் மந்த்ரத்துக்கு, ப்ரதிபாத்ய மர்த்தம் – தாதிர்ஷ விஷயமான பொருளாக, த்வாமேவ ப்ரவீதி – உம்மைத்தான் சொல்லுகிறது.

சுலோகம் 67

பார்ககோபி ஸந் ஸவித்ரு சப்த ஸமந்வயேன
ஸாவித்ரதாமபி விகாஹத ஏவ மந்த்ர : |
தத் தத் பதா ந்வய வசேன மஹேச மந்த்ராந்
தத் தேவதாநபி ஹி மந்தர வித : படந்தி ||
பதவுரை

ஏஷ மந்த்ர:- தத் ஸவிதுர் வரேண்யம் என்ற இந்த மந்த்ரம், பார்க்கோபிஸந் – பர்க்கன் என்ற தேவதையை ப்ரதிபாதிப்பதால், பார்க்கம் என்று சொல்ல வேண்டியதாக இருந்தாலும், ஸவித்ருசப்த ஸமன்வயேன் – ஸவிது; என்ற பதம வாக்யத்தில் ஸம்பந்தப்பட்டிருப்பதால், ஸாவித்ரதாமபி விகாஹத எவ – ஸவித்ரு தேவதாகம் என்று அர்த்தம் கொடுக்கும் ஸாவித்ர என்ற பதத்தால் கூறப்படும் தன்மையையும் அடைய முடியும், மஹேச ஹே பரமேச்வரா, மந்த்ரவித :- மந்த்ரங்களின் தத்வமறிந்த ரிஷிகள், தத் தத் பதாந்வய வசேன – அந்த அந்த பதங்கள் அடங்கியிருப்பதைக் கொண்டும், மந்த்ராந் மந்த்ரங்களை, தத் தேவதானபி – அந்த அந்த தேவதாகம் என்ற பதத்தால் கூறக் கூடியவைகளாக, படந்தி – சொல்லுகிறார்கள்.

சுலோகம் 68

அப்யர்க்க தைவதவதீம் ருசமாம நாம :
சப்தேன விச்வஇதி சங்கர ! வைச்வதேவீம் |
பித்ர்யாஞ்ச மர்த்தஇதி புஷ்யபதேன பெளஷ்ணீம்
ஏதாத்ருசானி கதிநாம நிதர்சனானி ||
ஒரு ரிக் அனேக தேவதையின் வாச்யபதம் அடங்கியிருப்பதால், பல தேவதாகமாக, அந்த அந்த பதங்களால் கூறப்படுவதைக் காட்டுகிறார்.

பதவுரை

அர்க்க தைவதவதீம் அபி – மந்த்ரத்தின் அர்த்தப்படி தேவதை சொல்லப்பட வேண்டும் என்ற நிருக்த விதிப்படி, சூர்ய தேவதாகமாகக் கருதப்பட்ட போதிலும் ருசம் விச்வோ தேவஸ்ய நேதுர் மர்த்த : வ்ருணீத ஸக்யம் என்ற ரிக் மந்த்ரத்தை, சங்கர ஏ பரமேச்வரா, விச்வ இதி ச்ப்தேன விச்வ பதம் வந்திருப்பதால், வைச்வ தேவீம் – வைச்வ தேவீ ரிக் என்றும், மர்த்த இதி சப்தேன – மர்த்த என்ற பதம் அந்த மந்த்ரத்தின் நடுவில் ஸம்பந்தப்பட்டிருப்பதால் பித்ர்யாம் ச – பித்ரு தேவதாக ரிக் என்றும், புஷ்யபதேன – புஷ்யஸே என்ற பதம் வந்திருப்பதால், பெளஷ்ணீம் – புஷ்ய தேவதாகமானது என்றும் ஆமநாம: – நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். யஜுர்வேத ப்ராம்மணவாக்யமும் இப்படிச் சொல்லுகிறது. ஸாவா ஏ ஷாரிக் ஸர்வ தேவத்யா என்று விவரண முடிவில் கூறுகிறது ஏதாத்ருசாநி – இப் பேர்ப்பட்ட, நிதர்சனானி – உதாஹரணங்கள், கதிநாம – பல ஸம்பவிக்கக் கூடியவை ப்ரஸித்தமாக இருக்கின்றன.

சுலோகம் 69

ஏஷா கதி : ச்ருதிகிராமிதி நிர்ணயேன
தத் தத் க்ரஹார்ச்சன விதெள முனயஸ் ஸ்மரந்தி |
மந்த்ரேண சங்கர ! சனே ! சமுபக்ரமேண
புத்யஸ்வ சப்த ஸஹிதேன புதஸ்ய பூஜாம் ||
இந்த அபிப்ராயத்தை மனதில் கொண்டு, கல்ப்ப ஸூத்ரத்தில் மந்த்ரங்கள் பத அந்வயத்தால் அந்தப் பெயரால் குறிப்பிடப்பட்டு வேறு அர்த்தத்தில் கூறும்படி விநியோகிக்கப்படுகின்றன.

பதவுரை

ச்ருதி கிராம் – வேத வாக்யங்களுக்கு, ஏஷாகதி : – இது தான் முறை, இதி என்று, நிர்ணயேன் – தீர்மானத்தை வைத்துக் கொண்டு, முனய:- கல்ப்ப ஸூத்ரக்காரர்கள் தத் தத் க்ரஹார்ச்சன விதெள – அந்தந்த நவக்ரஹங்களில் ஒரு க்ரஹத்தை ஆராதிக்கும் கர்மாவில், சங்கர – பரமசிவனே சமுபக்ரமேண மந்த்ரேண – சம் என்று ஆரம்பிக்கும் மந்த்ரமாகிய சந்நோ தேவிரபிஷ்டயே என்பதால், சனே: பூஜாம் – சனி க்ரஹத்தின் பூஜையையும், புத்யஸ்வ என்ற பதம் அடங்கிய மந்த்ரத்தால், புதஸ்ய பூஜாம் ச – புத க்ரஹத்தின் ஆராதனத்தையும் ஸ்மரந்தி – விதிமுகமாகத் தெரியப்படுத்துகிறார்கள்.

சுலோகம் 70

ஆம்நாயம் ரிக் யஜுஷ ஸாம விதம் விசிந்த்ய
ஸாரம் ஸமுத் த்ருதவதா பரமேஷ்டினாபி |
மந்த்ரஸ் த்ரிபாதய மத்ருஷ்ட விதாந்தரேண
த்ருஷ்ட : சராசர குரோ ! மனுனா யதோக்தம் ||
ஈச்வரனைத் தெரியப்படுத்தக் கூடிய வேத மந்த்ரங்கள் பல இருந்தபோதிலும் காயத்ரீ மந்த்ரப்ரதிபாத்யன் பரமேச்வரன் என்ற நான்காவது லக்ஷணம் கூறியதின் காரணம் சொல்லுகிறார்.

பதவுரை

இந்த காயத்ரீ மூன்று வேதங்களின் மூன்று பாதங்களாக அமைக்கப்பட்டிருப்பதால், வேதத்ரய ஸாரமான, நித்யானுஷ்டேயமான ஸர்வஜன ஸாதாரணமான, மந்த்ரம்.

ஹே சராசர குரோ – அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்துக்கும் ப்ரேரகனே டிக் யஜுஷ ஸாமவிதம் – ரிக், யஜுஸ், ஸாமம் என்ற பிரிவுகளுள்ள, ஆம்னாயம் – வேதத்தை, விசிந்த்ய – நன்கு பரிசோதித்து, அத்ருஷ்ட விதாந்தரேண – புதிதான வேறு முறைப்படி, ஸாரம் – அந்த அந்த ஸார பாகத்தை, ஸமுத் த்ருதவதா – எடுத்து, பரமேஷ்டினாபி – ப்ரம்ம தேவராலேயே, த்ரிபாத் – எடுத்து, பரமேஷ்டினாபி – ப்ரம்ம தேவராலேயே, த்ரிபாத் மூன்று பாதங்கள் உள்ள, அயம் மந்த்ர: இந்த காயத்ரீ மந்த்ரம், த்ருஷ்ட: கண்டு பிடித்து, ஜனங்களுக்கு க்ஷேமார்த்தமாகக் கொடுக்கப்பட்டது. யதோக்தம் மனுனா யத்வை கிஞ்சன மனு ரவதத் தத் பேஷஜம் என்று மனுவாக்யமனைத்தும் மருந்தாகக் கருதப்படும். ஆதி ஸ்ம்ருதி கர்த்தாவாகிய மனுவால் சொல்லப் பட்ட விஷயம் இது.

த்ரிப்ய ஏவ து வேதேப்ய : பாதம் பாதம் அதூதுஹத் |
த தித்ய ருசோஸ்யா: ஸாவித்ர்யா: பரமேஷ்டீ ப்ரஜாபதி: ||
மூன்று வேதங்களிலிருந்து, ஆதி கர்த்தாவான ப்ரம்ம தேவர், ஒவ்வொரு பாதமாக, தேனுவிடமிருந்து ஸாரமானப் பாலை கறப்பது போல், கறந்து முப்பாதம் கொண்ட, இந்த 24 அக்ஷரங்கள் அடங்கிய, தத் ஸவிதுர்வரேண்யம் என்ற ரிக் மந்த்ரத்தை ஜனங்கள் க்ஷேமத்திற்காகக் கொடுத்தார்.

வேதங்கள் மூன்றுதான். அதர்வண வேதம் ர்க் மந்த்ரங்களால் ஆகியது. மூன்று வேதத்தில் அடங்கியது. ஆதலால் மூன்று வேதங்களின் ஸாரம் தான் எடுக்கப்பட்டது. இந்த காயத்ரி மந்த்ரத்தை ஜபிக்காதவன், வேறு எந்த வைதீக கார்யத்திற்கும் தகுந்தவனல்லன் என்பது விதி. ஆதலால் மந்த்ர ஸாரமான காயத்ரீ ப்ரதிபாத்யன் வேதத்ரய ப்ரதிபாத்யன் பரமேச்வரன் தான் என்பது கைமுதிக ந்யாயத்தால் எளிதில் கிடைக்குமென்று காரணம் கொண்டே இந்த காயத்ரீ அர்த்தம் விசாரிக்கப்பட்டது. வேத த்ரய தாத்பர்ய விஷயீ பூதன் பரமேச்வரன் ஒருவனே என்பது பிண்டிதமான கருத்தாகும்.

சுலோகம் 71

க்ருண்ணாது காமமனலஸ் ஸகலம் ஹ்விஸ்தே
ராஞோபலிம் ஹரது பாகதுக : ப்ரஜாப்ய : |
பார்த்தேன சங்கர ! நிவேதித மம்புஜாக்ஷே
நைசம் ஹவிஸ்புடமத்ருச்யத பாதயோஸ்தே ||
இவ்விதம் 15 சுலோகங்களால் காயத்ரீ மந்த்ரார்த்த ப்ரதிபாத்யன் பரமேச்வரன் என்று நாலாவது லக்ஷணத்தை முகவுரையுடன் நன்கு நிருபித்து விட்டுப் பிறகு உத்தேசக்ரமப்படி செய்யவேண்டிய பரமசிவன் க்ரதுசேஷீ என்ற ஐந்தாவது லக்ஷணத்தை 12 சுலோகங்களால் நன்கு விளக்குகிறார்.

பதவுரை

அனல :- அக்னி பகவான், காமம் – இஷ்டப்படி, ஸகலம் – எல்லா விதமான, ஹவி :- ஹவிஸ்ஸை, க்ருண்ணாது – நேரில் பெற்றுக் கொள்ளட்டும் அந்த ஸோமரஸம், நெய் பால் தயிர் என்ற கவ்யம் பொரி, புரோடாசம், தான்ய ஹவிஸ் முதலிய அனைத்தும் தே – உமக்குத் தான் (சொந்தமானது) பாகதுத: – வரி வசூலிக்கும் அதிகாரி, பலிம் – வரியை, ப்ராஜாப்ய: – ஜனங்களிடமிருந்து, ஹரது – வசூலிக்கட்டும், ஆயினும் அந்த வரிப்பணம், ராகஞ: ஸ்வம் – அரசனுக்குச் சேரவேண்டிய சொந்தப்பணம், வசூலித்தவனுக்குச் சொந்தமாகாது. அவன் ஏற்றுக் கொள்ளக்கூடாது. வசூலான வரிப்பணத்தை அரசனிடம் செலுத்தி, வசூலித்ததற்கு உள்ள கூலியைத்தான் பெற்றுக் கொள்ளலாம். அவ்விதமே அக்னி பெற்றுக் கொள்ளும் ஹவிர்பாகமனைத்தும் பரமசிவனுக்குச் சேர வேண்டியது என்று கொள்ள வேண்டியது. சங்கர – ஸுகத்தைத் தரும் பரம் பொருளே! பார்த்தேன – அர்ஜுனனால், அம்புஜாக்ஷே – தாமரைக் க்ண்ணனாகிய நாராயணனுக்கு (கிருஷ்ணனுக்கு) நிவேதிதம் – ஸமர்ப்பிக்கப்பட்ட நைசம் ஹவி:- இரவில் தரப்பட்ட நைச ஹவிஸ்ஸானது, தே – உம்முடைய பாதயோ:- காலடிகளில் – ஸ்புடம் – தெளிவாக, ப்ரத்யக்ஷமாக, அத்ருச்யத – காணப்பட்டதல்லவா?

இந்த இதிஹாஸம், ஹவிஸ் அனைத்தும் உம்மைச் சேர்ந்தது என்பதற்குச் சான்றாகும். துரோணபர்வாவில் ஹவிர் நிவேதன க்ரியைக்கு வாஸுதேவன் அதிகரணகாரகம்; பரமேச்வரன் ஸம்ப்ரதான காரகம் என்று விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது.

மகா பாரதத்தில் கிருஷணன் ஸகாயத்தால் பாண்டவர்களுக்கு ஸகல கார்யங்களும் கைக்கூடி வந்தன என்று சொல்லப்பட்டிருப்பது ப்ரஸித்தம், எப்படி பரமசிவனுக்கு ஹவிஸ் அர்ப்பணம் செய்யப்படுவதாகக்கூற முடியும் என்ற சங்கைக்கு இடமில்லை. பாண்டவர்களுக்கும், அவர்களுக்கு ஸகாயமான கிருஷ்ணனுக்கும் பரமேச்வரன் அனுக்ரஹத்தால் தாம் ஸகல கார்யங்களும் பரமேச்வரன் அனுக்ரஹத்தால்தான் ஸகல கார்யங்களும் நிறைவேறின என்பதுதான் மகா பாரதத்தின் உண்மையான கருத்தாகும். அப்படியே அச்வமேத பர்வாவில் பீமஸேனன் தர்மபுத்திரரைப் பார்த்துக் கூறுவது – யாகத்திற்கு எல்லா த்ரவ்யங்களையும் பரமசிவன் அருளால் ஸம்பாதித்துவர முடியும்; முன்பு காட்டில் வசிக்கும் போது பாசுபதாஸ்த்ரம் கொடுத்தருளினார். அவர் அனுக்ரஹத்தால்தான் நமக்கு ராஜ்யம் திரும்பக் கிடைத்தது. ஜயத்ரதவத ப்ரதிக்ஞையை அவர்தாம் நிறைவேற்றி வைத்தார் என்று பலவிதமாக சிவன் மகிமையை வர்ணிப்பது தெளிவு. அனுசாஸன் பர்வாவிலும், கிருஷ்ணனைப்பார்த்து, ஈசுவரன் “நான் உன்னிடம் த்ருப்தி கொண்டுள்ளேன், வேண்டிய வரங்களைப் பெற்று கொள்ளலாம்” என்று சொன்னதாக விளக்கப்பட்டிருக்கிறது. துரோணபர்வாவில் அர்ஜுனன் தனக்கு சிவப்ரஸாதம் கிருஷ்ணன் அனுக்ரஹத்தால் கிடைத்ததாகச் சொல்லுகிறான். நன்கு பரிசீலனை செய்தால், மகாபாரதம் முழுதும், பரமேச்வரன் மகிமைதான் தாத்பர்ய விஷயமானது என்பது தெளிவாகிறது. சாந்தி பர்வாவில் பிரம்ம, விஷ்ணு, ருத்ரர்கள், இந்த்ராதி தேவர்கள் எல்லாம் பரமேச்வரனைப் பூஜித்துத் தங்கள் கஷ்டங்களை நீக்கிக் கொண்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆத்யம் புருஷ மீசானம் என்று பரமசிவனில் ஆரம்பமாகி, சாந்தி பர்வாவில், நாராயணனுக்கு அந்தர்யாமி பரமசிவன் என்று விளக்கப் பட்டிருப்பதால் உபக்ரம, உபஸம்ஹாரமத்யே பராமர்சம் என்ற ந்யாயப்படி பாரதம் பரமசிவ ப்ரதி பாதகமாகும்.

இந்த்ராதி தேவதைகளுக்கு அந்த அந்தப் பெயரைச் சொல்லி, ஸ்வாஹா காரவ ஷட்காரங்களால் ஹவிஸ்ஸைக் கொடுப்பதாகவும், யஜமானனுக்குப் பயன் தருவதாகவும், வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டிருந்த போதிலும், அந்த தேவர்கள் அனைவரும் பரமேச்வரன் விபூதியானதால், சேஷியான பரமசிவன் தான், ஹவிர்தானத்திற்கு ஸம்ப்ரதான மென்றும், அவர்தான் ஹவிஸ்ஸைப் புஜிப்பதாகவும், பயன் அளிப்பதாகவும் தாத்பர்யம் கொள்ள வேண்டும். சரீரத்தைக் குறிக்கும் பதங்கள் சரீரத்துடன் நிற்காமல் சரீர அதிஷ்டாத்ரு பர்யந்தம் தெரிவிக்கும் என்பது, நான் பெருமன், நான் குட்டை, என்ற வாக்கியங்களில் பிரஸித்தம், அவ்விதமே, ஜீவாத்மா வாசகமான இந்த்ராதி பதங்கள், அவர்களைச் சரீரமாகக் கொண்ட, அந்தர்யாமியான, சேஷியான பரமசிவனைக் குறிப்பது வாக்யந்யாய ப்ரஸித்தமே. கர்ப்பிணியான தாய் கர்ப்பம் வளர்வதற்காக பிறரால் கொடுக்கப்பட்ட, மசக்கை என்று சொல்லப்படும் ப்ரியமான ஆகாரங்களைக் கொண்டு, தான் திருப்தியடைகிறாள், தன் கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் திருப்தி உண்டுபண்ணுகிறாள். அந்த ஆகாரம் கொடுத்த வரையும் இஷ்டபலன் நிறைவேறும்படி செய்து சந்தோஷப் படுத்துகிறாள். அவ்விதமே ஹவிர்பாகம் பெற்றுக்கொள்வதால், நேரில் பெற்றுக்கொள்ளும் இந்த்ராதி தேவர்கள் திருப்தியடைந்து, அந்தர்யாமியான பரமசிவனும் திருப்தியடைந்து ஹவிர்பாகம் கொடுக்கும் யஜமானனும் விரும்பிய பயனை அடைகிறான். அதேபோல் ஹவிர்பாகம் அனைத்தும் அந்தர்யாமியாகிய பரமசிவனுக்குத்தான் என்பது வெளியாகும். கூர்ம புராணவசனம் இக்கருத்தை விளக்குகிறது.

மகா பாரதத்திலும் சரீரமில்லாத கடவுள் தேவர்கள் சரீரத்தை சரீரமாகக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாரதத்தில் நியோகாத்யாயத்தில் பரமசிவன் கூறுவதாவது – அக்னி என் அந்தர்யமன சக்தியான நியோகத்தால் ஹவ்ய கவ்யங்களைப் பெற்றுக்கொள்ளுகிறான் பாகம் செய்கிறான். அப்படியே இந்திராதி ஸகல தேவர்களும் அவர்கள் கார்யங்களைச் செய்கிறார்கள் என்ற உண்மையை அறியுங்கள் என்பது நாம நாமைவ நாம மே என்ற சுருதியில் – நாம நாம எல்லா இந்திரன் முதலிய பெயர்களும் மே ஏவ நாம – என்னுடைய பெயராகவே கொள்ள வேண்டும்; ஹரிவம்சத்திலும் இந்த சுருதியின் அர்த்தம் இவ்விதம் விளக்கப்பட்டிருக்கிறது.

ரிக்வேத ஸுத்ரகாரர் பகவான் ஆச்வலாயன மகரிஷி சொல்வதையும் கவனிக்க. ஸர்வாணி ஹவா ஏதஸ்ய நாம தேயானி – உலகில் எவ்வளவு பதங்கள் உச்சரிக்கப்படுகின்றனவோ அவை அனைத்தும் இந்தப் பரமசிவன் பெயர்கள் ஆனதால், அவரைத்தான் குறிக்கும். ஸர்வாஸ்ஸேனா: ஏதஸ்ய ஹவா – எல்லா அரசர்களின் ஸேனைகளும் இந்த த்ரிபுரஸம்ஹாரம் செய்தவரின் ஸேனைகள் தான். அரசர்களும் இந்த்ராதி தேவர்களும் ருத்ராம்சம் என்பது தாத்பர்யம், ஸர்வாண்யுச்ச்ரயாணி ஏதஸ்யவா – உலகிலுள்ள உயர்ந்த பொருள்களனைத்தும் இந்த சிவபெருமான் அம்சமேயாகும். அல்லது உயரமான மலை முதலிய இடங்களில் இவர் வசிப்பதால் அவை இவருடையவை. எல்லா சப்தங்களும் பரமசிவனைத்தான் குறிக்கும். வாயவீய ஸம்ஹிதையில் சப்த மனைத்தும் தேவி ஸ்வரூபமென்றும். அர்த்தமனைத்தும் சிவஸ்வரூப மென்றும், உமாமகேச்வராள் வாக், அர்த்தங்களாகச் சொல்லப்படுகிறார்கள்.

சுலோகம் 72

ஸோமம் த்வதர்ததம் அனுசுஸ்ரீஉம ஸூயமானம்
ஆலம் பனம் பசுபதே ! நியதம் பசூனாம் |
கவ்யம் ச தே கவி ஸதேவ ததத்வரேஷு
சண்டேச்வரேண ஸஹ நாகஸதாம் விவாத : ||

இவ்விதம் ப்ரதிக்ஞை செய்யப்பட்ட விஷயம் ஸகல ஹவிஸ்ஸுக்கும் சேஷீ பரமசிவன் என்பது விளக்கப்படுகிறது.
பதவுரை

ஸூயமானம் – இடித்துப் பிழியப்படுகிற ஸோமம் – ஸோமரஸத்தை, த்வதர்த்தம் – உம்மைச் சேர்ந்த்தாக, அனுசுச்ரும – மந்த்ரங்களால் தெரிந்து கொள்ளுகிறோம். அயம் ஸோமம் கபர்தினே, க்ருதம் ந பவதே மது என்பது, பிழியப்படும் ஸோமக் கொடியைக் குறித்துச் சொல்லப்படும் மந்த்ரம், பசுபதே – ஜீவராசிகளான பசுக்களை காக்கும் கருணா மூர்த்தியே! பசூனாம் ஆலம் பனம் – பசுபந்தங்களில் ஆடுகளையூப ஸ்தம்பத்தில் கட்டுவதும், நியதம் – தீர்மானமாக, த்வ தர்த்தம் அனுசுச்ரும – உமக்காகத்தான் என்பதை மந்த்ரங்களாலும், பசுபதி என்ற அஸாதாரணமான உமது நாமத்தாலும் தெளிவாக அறிகிறோம்.

இமம் பசும் பசுபதே தே அத்ய பத்னாமி அக்னே ஸுக்ருதஸ்ய மத்யே |
அனுமந்யஸ்வஸுயஜா யஜாம ஜுஷ்டம் தேவானாமிதம் அஸ்து ஹவ்யம் ||
பசுபதே : பசவோ விரூபா:- பலவிதமான பசுக்கள் எல்லாம், பசுபதியான ருத்ரனைச் சேர்ந்தன என்பதை மற்றொரு மந்த்ரம் சொல்லுகிறது. கவி ஸத் – பசுவிடமிருந்து கிடைக்கும் சிறந்த ஹவிஸ்ஸான, கவ்யம் ச – தயிர், பால், நெய் முதலியதும், தே ஏவ அனுசுஸ்ரீஉம – உம்முடையது தான் என்றும் அறிகிறோம், ரெளத்ரம் கவி – என்றல்லவா சுருதி? தத் – ஆகையால், அத்வரேஷு – மூன்று விதமான ஹவிஸ் கொடுக்கப்படும் யாகங்களில், சண்டேச்வரேண ஸஹ – சண்டிகேச்வரரோடுகூட, நாகஸதாம் – தேவர்களுக்கு, விவாத : விவாதம் ஏற்படுகிறது.

சுலோகம் 73

உத்பத்தித : சிவ ! க்ருஹீத ஸம்ந்வயாஸ்தே
ஸோம : பசுர்கவி ச ஸந்தி ஹவீம்ஷிதானி |
தேவா : பசெள ஹவிஷி பாகமனுஞயா தே
க்ருண்ணந்தி தத்வத் இதரேஷ்வபி கல்ப்பநீயம் ||
ஹவிஸ் தயாரிக்கும் ஆரம்ப காலத்திலேயே, பரமசிவன் ஸம்பந்தப்பட்டவைகள் என்பது ஸித்த விஷயமாதலால், உம்முடைய உத்தரவின் பேரில்தான் இந்திரன் முதலிய தேவர்கள் ஹவிஸ்ஸைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள்.

பதவுரை

சிவ – பரமேச்வரா! ஸோம:- ஸோமரஸம், பசு:- ஆடு என்ற வபாஹவிஸ், கவி ச ஸந்தி ஹவீம்ஷி – பசுவிடமிருந்து கிடைக்கும் சிறந்த பால், தயிர், நெய், என்ற ஹவிஸ் ஸுக்கள் எல்லாம்; உத்பத்தித; – தயாரிக்கும் க்ஷணம் முதல், தே க்ருஹீத ஸமன்வயா:- உம்முடைய ஸம்பந்தம் பெற்றவைகள். அத :- ஆதலால், தேவா :- தேவர்கள், பசெள ஹவிஷி வபா என்ற பசு ஹவிஸ் விஷயத்தில், தே அனுஞயா – உம்முடைய அனுமதியின் பேரில், அனுமன்யஸ்வ, தேவானாம், இதம் ஜுஷ்டமஸ்து – உத்தரவு கொடுங்கள், தேவர்கள் இதை, உம்முடைய சொந்தமான பாகத்தை ஸேவிக்கட்டும்,என்று பிரார்த்திப்பதால், பாகம் கிருண்ணந்தி – தங்கள் பாகத்தைப் பெற்றுக் கொல்ளுகிறார்கள் இவ்விதம் வபா என்ற பசு ஹவிஸ் ஸித்தமாக விருப்பதால், தத்வத் – அதைப்போல, இதரேஷ்வபி – மற்றஸோம ரஸம், தயிர், பால், நெய், ஹவிஸ்ஸுகளிலும், உமது உத்தரவின் மேல்தான், உமது பாகமாகிய அவைகளை, இந்த்ராதி தேவர்கள் பெற்றுக் கொள்ளுகிறார்களென்று கல்ப்ப நீயம் – கல்ப்பித்துத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். தத்ஸாமான்யாத் இதரேஷு ததாத்வம் என்பது ந்யாயம். பானை சோற்றுக்கு பருக்கை பதம் என்பதும், ஸ்தாலீபுலாகந்யாயம் உலகம் அறிந்ததே. அணிமாதி அஷ்டயோக ஸித்திபெற்ற தேவர்கள் ஓரே ஸமயத்தில் செய்யப்படும், பல தேசங்களிலுள்ள பல யாகங்களுக்கும் போய் ஹவிர்பாகம் பெற்றூக் கொள்ள முடியுமாதலால், சப்தம்தான் தேவதை, அர்த்தம் தேவதையல்ல என்ற கொள்கைக்கு அவசியமே யில்லை. கண்ணுக்குத் தெரியாத ஸ்வர்க்காதி விசேஷங்களைப்போல, இந்த்ராதி தேவர்களின் ஸ்வரூபம், உபாஸனாதி விதிகளில் கானப்படுவதால், அவசியம் ஏற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாகும். அவர்கள் பரமசிவன் அனுமதியால் பெற்றுக் கொள்ளுகிறார்கள் என்பதே தீர்மானம்.

சுலோகம் 74

கர்மைகமேவ ந பரம் பசுபந்தனம் தே
கர்த்தவ்ய மாஹுருபலப்ய தவாப்யனுஞாம் |
ஸர்வேஷுகர்மஸு பவத் ப்ரஸவேன பும்ஸாம்
ஆரம்பணம் ப்ரபத மந்த்ர விதோ க்ருணந்தி ||
ஸர்வகர்மா ஆரம்பத்தில் ஜபிக்கப்பட வேண்டிய, ஸாம வேதத்தில் உள்ள ப்ரபத மந்த்ரத்தின் அர்த்தத்தைக் கவனித்தால், எல்லா கர்மாக்களும், தங்கள் அனுமதியின் பேரில்தான் செய்யப்பட வேண்டும் என்பது தெளிவாகும் என்கிறார்.

பதவுரை

பரம் பசுபந்தன மேக மேவ கர்மா – சிறந்த பசு பந்தனம் என்ற ஒரு கர்மாதான், தே – உம்முடைது, ஆதலால் தவ – உம்முடைய அனுக்ஞாம் – உத்தரவை – உபலப்ய அடைந்து, கர்த்தவ்யம் – செய்யப்பட வேண்டுமென்று ந ஆஹு:- சொல்லவில்லை. ஆனால் ஸர்வேஷு – கர்மஸு – எல்லா கர்மாக்களிலும், பும்ஸாம் ஆரம்பணம் – மனிதர்கள் ஆரம்பிப்பதை பவத் ப்ரஸவேன – உமது அனுமதியைப் பெற்று, கர்த்தவ்யம் – செய்யப்பட வேண்டியதாக, ப்ரபத மந்த்ர வித:- ப்ரபத மந்த்ரத்தின் அர்த்த மறிந்தவர்கள், க்ருணந்தி – சொல்லுகிறார்கள்.

எல்லாக் கர்மாக்களின் முதலில் ஜபிக்கப்பட வேண்டிய ப்ரபத மந்த்ரம் ஸாமவேதத்தில் காணப்படுகிறது. அது தப: ச தேஜ: ச என்று ஆரம்பித்து, ப்ரம்மண : புத்ராய நம: என்று முடிகிறது. அங்கு, விரூபா க்ஷோஸி – தாங்கள் முக்கண்னராக இருக்கிறீர் என்று ஆரம்பித்து, த்வாம் – ப்ரபத்யே – உம்மைச் சரணமடைகிறேன். த்வயா ப்ரஸூத:- உம்முடைய உத்தரவின்பேரில், இதம் கர்ம – இந்தக் கார்யத்தை, கரிஷ்யாமி – செய்யப் போகிறேன்; தன்மே ஸம்ருத்யதாம் – அந்தக் கார்யம் நன்கு நிறைவேறி, பயன் தரட்டும். தன்ம உபபத்யதாம் – அது எனக்கு உகந்த தாக, அனுகுணமாக ஆகட்டும். என்று வேண்டப்படுகிறது. ஆகவே, இந்த ப்ரபத மந்த்ரத்தின் அர்த்தத்திலிருந்து, எல்லாக் கார்யங்களும் பரமேச்வரன் அனுமதியால் செய்யப்படுகின்றன. எல்லா ஸங்கல்ப்பங்களும் பரமேச்வர ப்ரீத்யர்த்தம் என்றும், சிவசம்போ ராக்ஞையா ப்ரவர்த்த மானஸ்ய என்றும் செய்யப்படுவது, ப்ரத்யக்ஷமாக அனுபவத்தில் இருந்து வருகிறது.

சுலோகம் 75

ஸங்கல்ப்பத : ப்ரப்ருதி யக்ஞதனும் விபஜ்ய
தேவாந் ப்ரஜாபதி முகான்ப்ரதி தர்சயந்த : |
ஸோமாஹுதிம் ஹுதவஹார்ச்சிஷி ஹூயமானாம்
அத்வர்யவஸ் தவ க்ருணந்தி கிரீச ! பாகம் ||
ஸோமரஸம் தயாரிக்கும் ஸமயத்திலேயே பரமசிவ ஸம்பந்தமுள்ளது என்பதை அயம் ஸோம:கபர்தினே க்ருதம் ந பவதே மது, – என்ற மந்த்ரம் தெரியப்படுத்துவதுபோல, அந்த ஸோமரஸம் ஸோம காலத்திலும் ஈச்வர ஸம்பந்த முடையது என்பதை விளக்குகிறார்.

பதவுரை

ஸங்கல்ப்பத:- ப்ரப்ருதி – அக்னிஷ்டோமேன யக்ஷ்யே – என்று ஸங்கல்ப்பம் செய்வது முதல், யக்ஞதநும் – யாககர்மாவின் சரீரத்தை, விபஜ்ய – பிரித்து ப்ரஜாபதிமுகான் தேவான் – அந்த அந்த பாகம் அந்த அந்த தேவதாஸ்வரூபம் என்ற வாக்கியங்களால், ப்ரஜாபதி முதலிய தேவர்களை, ப்ரதிதர்யந்த:- நேரில் ஸாக்ஷாத்கரித்துக் காட்டுகின்ற, அத்வர்யவ :- யஜுர் வேத மறிந்தவர்கள், ஹுதவஹார்ச்சிஷி – அக்னி முகமான ஜ்வாலையில், ஹூயமானாம் – ஹோமம் செய்யப்படுகிற, ஸோமாஹுதிம் –ஸோமரஸம் என்ற ஹவிஸ்ஸை, கிரீச – ஹேகைலாஸபதியே, வேதப்ரதிபாத்ய புருஷனே! தவ பாகம் – உம்முடைய அம்சமாக, க்ருணந்தி – சொல்லுகிறார்கள்.

ப்ரஜாபதிர் நமஸுந்தோச்சதே என்றபடி, யக்ஞத்து மந்த்ரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகளில் ருத்ர ஆஹுத: என்ற சுருதியில் கூறப்பட்டிருப்பதால், ஹோமம் செய்யப்படும் நிலையிலுள்ள ஹவிஸ்ஸுக்கு, ஸோமரஸத்துக்கு ஈச்வரன் தாத்பர்யம் கூறப்படுவதால், ஸோமஹவிஸ், உத்பத்தி காலத்தில் போல் ஹோமகாலத்திலும் ருத்ரபாகம் தான்.

சுலோகம் 76

ஸர்வம் தனம் தனபதே : உபபுக்தசிஷ்டம்
யத்தேவதாதிநி ஸமாச்ரித ப்ருத்யவர்க்கை : |
யக்ஞேச ! யக்யபரி சிஷ்டமபி த்வதீயம்
மந்திக்ரஹவ்யதிகரே பவதா யதோக்தம் : ||
யக்ஞத்திலுள்ள மூன்று விதமான ஹவிஸ்ஸுகள் ஈச்வரனுக்குச் சொந்த்மானவை என்பதுபோல, யக்யஞ்களில் புஜிக்கப்பட்ட பிறகு, சிஷ்டமான பாகமும் பரமேச்வரனைச் சேர்ந்தது என்று விளக்கப்படுகிறது.

பதவுரை

தேவதாதிதி ஸமாச்ரித ப்ருத்யவர்கை :- யஜமானன் அனுமதியின் பேரில் இந்திராதி தேவதைகள், அதிதிகள் அண்டின வேலைக்காரர்கள் இவர்களால் உபபுக்த சிஷ்டம் – அனுபவிக்கப்பட்டு மிகுதியான யத்ஸர்வம் தனம் – யாதொரு எல்லாப்பணமும், யதா தன பதே: ஸ்வம் – எப்படிப் பணத்தின், யஜமானனுக்கே சொந்தமோ அப்படியே, யக்ஞேச – யாகத்துக்குத் தலைவரே! யக்ஞ பரிசிஷ்டமபி தனம் – யக்ஞத்தில் உமது அனுமதியின் பேரில் இந்த்ராதி தேவர்களாலும், ருத்விக்குகளாலும் அனுபவிக்கப்பட்டு மீதியான ஹவிஸ் முதலிய, பதார்த்தங்கள், த்வதீயம் – உம்மைச் சேர்ந்தவை உமக்கே சொந்தமானது என்று மந்திரக்ரஹவ்யதிகரே – மந்தி என்று வ்யவஹரிக்கப்படும் ஓர் க்ரஹபாத்திரத்தின் விருத்தாந்த ஸமயத்தில், பவதா – உம்மாலேயே, யதா உக்தம் – சொல்லப்பட்டிருக்கிறதல்லவா?

விசேஷவுரை

யஜுர் வேதத்தில் ஈச்வர வாக்யரூபமான வேதவாக்யம் காணப்படுகிறது. ஆதலால் வேதம் சொன்னால் ஈச்வரன் சொன்னார் என்றே கொள்ள வேண்டும். யத் யக்ஞவாஸ்தெள ஹீயதே மமவை தத் யக்ஞசாலையில் அனுபவிக்கப்பட்ட பிறகு மிகுதியாக எவை இருக்கிறதோ அவையனைத்தும் என்னுடையது என்றும், அவ்விதமே, பஹ்ருச ப்ராம்மணத்தில் மம வா இதம், மமவை வாஸ்துஹம்.

எல்லாம் என்னுடையது, அப்படியே,அநுபவித்த பிறகு யக்ஞபூமி என்ற ப்ரதேசத்தில் இருக்கிறதெல்லாம் என்னுடையதுதான் என்றும், யக்ஞசிஷ்டம் ருத்ரனைச் சேர்ந்ததாகச் சொல்லப்படுவது காண்க, ஆதலால் ஆரம்பம் முதல், ஸங்கல்ப்பம் முதல், ஹவிஸ் தயாரிக்கும் காலத்திலும், ஹோமம் செய்யும் காலத்திலும், மற்றவர்கள் அனுபவிக்கும் காலத்திலும், பிறகு மிகுந்திருக்கும் காலத்திலும் ஸர்வகாலத்திலும் ஸர்வஹவிஸ்ஸுக்கும் உண்மையான சொந்தக்காரர் ஸாக்ஷாத் பரமேச்வரன். அவர் அனுமதியின் பேரில் மற்றவர்கள் பெற்றுக் கொள்ளுகிறார்கள்; புஜிக்கிறார்கள், அந்த ஸமயத்திலும் அவர்கள் உள்ளே அந்தர்யாமியாகப் பரமேச்வரன் வீற்றிருக்கிறார். ஆதலால் ஸர்வயக்ஞசேஷீ பரமசிவன் என்பது சுருதிப்ரமாண ஸித்தமாகும். இதையறியாமல் மேலாக இந்த்ரராதி தேவர்கள் சொந்தக்காரர்கள் என்ற தவறுதலான அறிவால், தக்ஷன் செய்த யாகம், ஸர்வசேஷியான ஈச்வரன் இல்லாதலால் அழிக்கப்பட்டு, அனைவருக்கும், யஜமானனுக்கும் தேவர்களுக்கும், ப்ருகு முதலான ரித்விக்குகளான முனிவர்களுக்கும் யாக கர்மாவிற்கும் கெடுதல் ஏற்பட்டது. கண்கூடாகத் தகராரில்லாமல் இன்றைக்கும் பாகவதாதி வைஷ்ணவக்ரந்தங்களிலும் வைஷ்ணவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமாக ப்ரஸித்தியடைந்திருக்கிறது.

வாயவீய ஸம்ஹிதையில் பரமேச்வரன் அத்வரராஜன் என்று விளக்கி முடிவில்.

நைவேச்வர பஹிஷ் க்ருதம் கர்மகுர்யாத் கதாசன என்று, பரமேச்வரனை நீக்கி ஒரு கர்மாவும், ஒரு போதும் செய்யக் கூடாதென்று விதிக்கப்பட்டிருக்கிறது. வ்ருதா யக்ஞோ வ்ருதா ஹோமோ சிவநிந்தாரதஸ்ய து – சிவத்வேஷத்துடன் செய்யும் யக்ஞம், ஹோமம் வீணாவதோடு, அனர்த்தங்களையும் கொடுகும் என்பதும் தெளிவு, ஆதித்யபுராணத்திலும் சிவனில்லாமல் யக்ஞம் செய்யாதே என்று பிரம்மா தன் புத்ரனான தக்ஷனைத்தடுத்ததாகவும்,

சம்போரவஞா யத்ராஸ்தே ஸ்தாதவ்யம் நைவ ஸூரிபி: என்றபடி சிவநிந்தை நடக்குமிடத்திலிருக்கக்கூடாதென்று, தக்ஷன் யஜ்ஞசாலையிலிருந்து, ப்ரம்மதேவர் வெளிச்சென்றதாகவும், ததிசி முனிவர் பிறகு தக்ஷனுக்கு சிவப்ரபாவம் உரைத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது.

அவ்விதமே ப்ரம்மாண்ட புராணத்திலும் உத்தரபாகத்தில் ஹயக்ரீவ அகஸ்தய ஸம்வாத ப்ரகரணத்தில் சக்ரபாணியான விஷ்ணுவிற்கும் வீரபத்ரருக்கும் நடந்த யுத்தம் முதலில் வர்ணிக்கப்பட்டு முடிவில் வீரபத்ரர் சக்ராயுதத்தை விழுங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது பிறகு விஷ்ணு வீரபத்ரரைப் புகழ்ந்ததாகவும், தக்ஷனுக்கு நல்ல தண்டனை ஏற்பட்டதென்று மெச்சினதாகவும், ‘தேவி த்ரோஹ பாபத்துடன் ஈச்வர த்ரோஹ பாபத்தையும் பெற்றான். எனக்கே சக்ராயுதம் இழக்கும் கதியென்றால், அவனை யார் காப்பாற்றுவார், நான் பரமேச்வரனை அர்ச்சித்து, தபஸ் பலத்தால் மற்றொரு சக்ராயுதம் பெற்றுக் கொள்ளுகிறேன்” என்று விஷ்ணு சொன்னதாகவும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. கூர்ம புராணத்திலும், எல்லா யக்ஞஸம்பாரங்களையும் கங்கை ப்ரவாகத்தில் எறிந்தாரென்றும் பகன கண்களை அனாயாஸமாகக் கரஞ்சத்தின் நுனியால் குத்திக் குளறிப் பிடுங்கினாரென்றும் சொல்லப்பட்டிருக்கிறது, அவ்வாறே பிரம்மாண்ட புராணத்திலும் ததீச முனிவர் உபதேசத்தையும் கேளாமல் தக்ஷன் யாகம் செய்ததாகவும் தேவியின் தூண்டுதலால் வீரபத்ரர் ஸ்ருஷ்டிக்கப்பட்டு யக்ஞத்தை அழித்ததாகவும், மான் உருவமெடுத்து ஓடின, யாக கர்மாவை தொடர்ந்து சென்று அழித்ததாகவும், பிறகு பிரம்ம தேவரால் துதிக்கப்பட்டு சிவனருளால், தலை வெட்டப்பட்ட விஷ்ணுவும், யாக கர்மாவும், மற்ற தேவர்களும், முனிவர்களும், மறுபடி பழைய உருவங்களை யடைந்ததாகவும்; சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு தக்ஷன் தன் தவற்றை உணர்ந்து ஈச்வரனை ஸ்தோத்திரம் பண்ணி பிரார்த்திக்கிறான் ஆசுதோஷியின் ஈச்வரன் அவனை மன்னித்துக் கல்ப்பத்தின் முடிவில் அவனுக்கு கணத்தலைவன் பதவியையும் அனுக்ரஹித்தார்.

மகா பாரதத்திலும் :- பூமி நடுங்கினது, ஸமுத்ரம் கலங்கியது; மலைகள் பிளக்கப்பட்டன; திக்குகள் மயங்கின; உலகத்தை இருள் சூழ்ந்தது. சங்கரனைப் பார்த்துப் பல்லைக் காட்டிச் சிரித்துக் கொண்டு புரோடாசத்தைப்புஜித்த பூஷாவின் பற்கள் உடைக்கப்பட்டன. (இன்றைக்கும் அப்புஷ தேவதை மாவைச் சருவாகச் செய்து கொடுத்தால் பாகம் பெற்றுப் புசிக்க முடியும், பல் இழந்ததால் அன்னம் கூட சாப்பிட இயலாது போனான்). பிறகு எல்லாரும் எல்லா பாகமும் பரமேச்வரனைச் சேர்ந்ததாக ஏற்படுத்தினதால், பிழைத்து முன் போல் அவரவர் ரூபங்களையும் பெற்றார்கள்.

ஆதலால் ஈச்வரனை நீக்கி செய்ய நினைத்த தக்ஷயஜ்ஞத்தின் கதியைப் படித்து அறிந்தவனும், ஸகலயக்ஞ ஹவுஸ்ஸும், யக்ஞபுக்த சிஷ்டமும் பரமேச்வரனுக்கே சொந்தம் என்று சுருதி ஸம்ருதி புராணங்களால், அறிந்தவனும் அந்வயவ்ய திரேக ந்யாயத்தால், ஈச்வரன் தான் யக்ஞசேஷீ என்ற உண்மையை அறிவான்.

சுலோகம் 77

கவ்யேன ஸோம ஹவிஷா சருபி : ச பக்வை :
ஸாத்யாந் த்ரிஸப்த முனயா விபஜந்தி யக்ஞாந் |
ஸர்வேஷு தேஷ்வபி பவாநவிசேஷதஸ்த்வாம்
ராஜானம் அத்வரவிதெள வயம் ஆமநாம : ||
பதவுரை

21 யாகங்களுக்கும் பரமேச்வரன் தான் சேஷீ. கவ்யேன – நெய், பால், தயிர்களால், ஸாத்யான் – செய்யப்படும் ஒளபாஸனம் முதலாகிய, ஸ்தாலீ பாகம் ஆக்ரயனம் அஷ்டகா, பிண்டபிதிர்யன்ஞம், மாஸி சிராத்தம் சைத்ரீ, என்ற சூலகவம் என்ற ஈசானபலி, ஆச்வயுஜீ என்ற ஏழு பாகயக்ஞங்களையும்; ஸோம ஹவிஷா ஸாத்யான் – ஸேரமரஸத்தால் செய்யப்பட வேண்டிய அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்தியம், ஷோட சீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம், என்ற ஏழுவிதமான ஸோமஸம்ஸ்தை யக்ஞங்களையும், பக்வை: சருபி: ஸாத்யன் – அக்னியில் பாகம் செய்யப்பட்ட ஹவிஸ்ஸால் செய்யப்படவேண்டிய ஏழு ஹவிர் யக்ஞங்களையும் – (ஆதானம் அக்னிஹோத்ரம், தர்சபூர்ணமாஸம் இஷ்டி, ஆக்ரேயனேஷ்டி, சாதுர்மாஸ்யம், நிரூடபசுபந்தம், ஸெளத்ராமணி) முனய:- ஸூத்ரகாரர்களான ரிஷிகள், த்ரிஸப் தான் – மூவேழு – 21 யக்ஞங்களை, விபஜந்தி – பிரித்துக் கூறியிருக்கிறார்கள். தேஷுஸர்வேஷு அபி – அவைகள் எல்லாவற்றிலுய் பவாந் – தாங்கள், ஸ்வாமி யஜமானனாக இருக்கிறீர்.

‘த்ரிஸப்த யத் குஹ்யாணி த்வே உத்’ இருபத்தோர் யாகங்களும், த்வே உத் – த்வய்யேவ – உமக்கே செய்யப்படுகின்றன என்று சுருதிகள் உத்க்கோஷிக்கின்றன. வயம் – நாங்கள், அவிசேஷத: – பிரித்துச் சொல்லாமல், பொதுவாக, த்வாம் – உம்மையே, அத்வரவிதெள ராஜானம் – யக்ஞங்களுக்கெல்லாம் தலைவன் என்று ஆமநாம :-

ஆவோ ராஜானம் அத்வரஸ்ய ருத்ரம்
காதபதிம், மேதபதிம்

என்ற சுருதிகளைக் கொண்டு பொதுவாகச் சொல்லுகிறோம்.
சுலோகம் 78

அக்னிம் ப்ரகாசயது சங்கர ருத்ரவந்தம்
மந்த்ரஸ் த்வமக்ன இதி வா ததநந்தரோ வா |
ராஜன்வதீ க்ஷிதிரிதீவ விசேஷணஸ்ய
நாலம் ப்ரதீப மபநேதும் இமெள ப்ரகர்ஷம் ||

அக்னயே ருத்ரவதே புரோடா சமஷ்டா கபாலம் நிர்வபேத் –
என்ற யக்ஞத்தில் அக்னிக்கு விசேஷணமாக ருத்ரனைக் கொடுத்திருப்பது, ருத்ரனுக்கு அபஹர்ஷத்தைக் காட்டாது என்று விளக்குகிறார்.

பதவுரை

சங்கர – பரமேச்வரா! த்வமக்ன இதி மந்த்ரோவா – த்வமக்னே என்ற மந்த்ரமும், ததநந்தரோவா – அதற்கடுத்த ஆவோராஜானம் என்ற மந்த்ரமும், யாஜ்யா புரோனுவாக்யா மந்த்ரங்களாகிய இவ்விரண்டும், ருத்ரவத் அக்னி தேவதையுள்ள யாகத்தில் விநியோகிக்கப்பட்டிருப்பதால், ருத்ரவந்தம் அக்னிம் ப்ரகாசயது – ருத்ரவத் அக்னி தேவதையை வெளிப்படுத்தட்டும் ஆயினும், ராஜன்வத் க்ஷிதிரிதீவ – நல்லராஜாவையுடைய பூமி என்ற வாக்யம் போல, அங்கு பூமி விசேஷ்யமாக விருந்தாலும், ராஜா விசேஷணமாகவிருந்தாலும் ராஜா தான் சிறந்தவன் என்பது வெளிப்படுவது போல இமெள – இவ்விரு மந்த்ரங்கள், விசேஷணஸ்ய – அக்னி விசேஷணமான ருத்ரனுக்கு உள்ள, ப்ரகர்ஷம் – மேன்மையை, ப்ரதீபம் – எதிரடையாக, அபநேதும் – நீக்குவதற்கு விசேஷணமானதால் ருத்ரன் அக்னிக்கு கீழ்ப்பட்டவன் என்று சொல்வதற்கு நாலம் – சக்தியுள்ளவைகள் அல்ல.

சுலோகம் 79

யா ரோஹிணீ பவதி தேவ ! ததா த்வதீயா
தஸ்யாம் த்வேதேக விஷயெள விஷமாக்ஷ ! த்ருஷ்டெள |
மந்த்ரா விமெள ததிஹ யக்ஞபதித்வ மீச
ஸ்பஷ்டம் த்வதேகவிஷயம் ப்ரதியாந்திதீரா : ||
ரெளத்ரீம் ரோஹிணீம் ஆலபேத என்ற யாகத்தில் இவ்விரு மந்த்ரங்களும், யாஜ்யா புரோநுவாக்யா மந்த்ரங்களாக விநியோகிக்கப்பட்டு, இதர ஸம்பந்தமில்லாமல் சிவனையே வெளிப்படுத்துகிறபடியால், இம் மந்த்ரங்கள் ஈச்வர ப்ரகாசமாகத்தான கொள்ள வேண்டும்.

பதவுரை

விஷமாக்ஷ – முக்கண்ணனே! யா த்வதீயா ரோஹிணீ பவதி – யாதொரு, உமக்கு மாத்திரம் ரோஹிணீ என்ற ஹவிஸ் கொடுக்கப்படுகிறதோ, ததா – அப்பொழுது, தேவ – கடவுளே தஸ்யாம் – அந்த ரோஹிணீ ஹவிஸ்ஸில் இமெள மந்த்ரெள – இந்த இரண்டு மந்த்ரங்கள், த்வதேக விஷயெள த்ருஷ்டெள, உம்மை மட்டும் வெளிப்படுத்தும் மந்த்ரங்களாக காணப்படுகின்றன. தத் – ஆகையால், ஈச – பரமேச்வரனே! இஹ – இங்கு தீரா:- பெரியோர்கள் புத்திமான்கள், யக்ஞபதித்வம் – யாகத் தலைமையை ஸ்பஷ்டம் – தெளிவாக, த்வதேக விஷயம் – உம்மை மட்டும் சேர்ந்ததாக, ப்ரதியாந்தி – அறிகிறார்கள்.

ப்ருது முதலிய 16 அரசர்கள், சிவனுக்கு யாகம் செய்து ஸ்வர்க்கம் சேர்ந்த்தாகவும், ராமாயணத்தில் அச்வமேத யாகத்தில் ஈசனை நமஸ்கரித்ததாகவும் கூறப்பட்டிருப்பது காண்க.

சுலோகம் 80

பித்ரா குமாரமிவ ப்ருத்ய மிவேச்வரேண
சிஷ்யம் கிரீச ! குருணேவ குணாதிகேன |
அக்னிம் த்வயா க்ருதவிசேஷண மூசிவாம் ஸெள
மந்த்ராவிமெள கமயத : பரமம் ப்ரகர்ஷம் ||

ருத்ரவதக்னி யாகத்தில் ருத்ரனை விசேஷணமாகக் கூறுவது மேன்மையைத்தான் தெரிவிக்கிறது.
பதவுரை

பித்ரா குமாரமிவ – தந்தையுடன் கூடிய பிள்ளை என்பதைப் போலவும், ஈச்வரேண ப்ருத்யமிவ – யஜமானனுடன் கூடிய வேலைக்காரன் என்பதைப் போலவும், குருணா சிஷ்யமிவ – ஆசார்யருடன் கூடிய மாணாக்கன் என்பது போலவும், கிரீச – வார்த்தையின் உண்மையறிந்த கடவுளே! குணாதிகேன த்வயா – குணம் நிரம்பிய உம்மால், க்ருதவிசேஷணம் – அடைமொழி கொடுக்கப்பட்டது, அக்னிம் – அக்னியை, ஊசிவாம்ஸொ – சொல்லுகிற இமெள மந்த்ரெள – இவ்விரண்டு மந்த்ரங்கள், பரமம் ப்ரகாஷம் – சிறந்த மகிமையை, கமயத :- அறிவிக்கின்றன. குறிக்கும் வாக்ய கத ப்ராதான்யம் வேறு; வஸ்து கத ப்ராதான்யம் வேறு என்ற ந்யாயம் இங்கு கொள்ள வேண்டும். அக்னிக்கே ருத்ரபத ப்ரயோகத்தால் தான் ஆங்காங்கு துதி காணப்படுகிறதென்றால், ருத்ரனுக்குக் தான் சொந்த மகிமை அதிகம் என்பதில் ஸந்தேகம் இல்லை.

சுலோகம் 81

ரிக் ஸம்ஹிதா வததி மேதபதிம் பவந்தம்
ராஜானம் அத்வரவிதே : அயமாஹ மந்த்ர : |
த்வத் ஷூக்த மந்த்ர கணமண்டன மெளலி ரத்னம்
ரூபேண ச த்வதபிதான க்ருஹீத சக்தி : ||
ரிக்ஸம்ஹிதா – ரிக்வேதம், காதபதிம், மேதபதிம் என்ற மந்த்ரம், பவந்தம் – தங்களை, மேதபடிம் வததி – யக்ஞத்திற்கு அதிபதி யென்று சொல்லுகிறது, அப்படியே அயம் மந்த்ரம் – ஆவோராஜானம் என்ற மந்த்ரம், அத்வரவிதே : ராஜானம் ஆஹ – யாகத்தலைவனாக உம்மைச் சொல்லுகிறது, த்வத்ஸூக்த மந்த்ர கண மண்டன மெளளி ரத்னம் – உம்முடையதான ருத்ர ஸூக்தத்தில் அலங்காரமான, சிரோமணியான இந்த மந்த்ரம் யஜுர் வேதத்தில், இமாருத்ராயேதி ஸூக்தக் கடைசியில் படிக்கப்பட்டிருப்பதாலும், ரூபேண ச – அர்த்த ஸ்வரூபத்தை யோசிப்பதாலும், த்வதபிதான க்ருஹீத சக்தி: – உம்மைச் சொல்லித் தெரியப்படுத்துவதில் ஸாமர்த்தியம் பெற்றது என்பது திண்ணம் அக்னி தேவதாகமாக ஸெளனகர் சொல்லியிருந்தாலும், யஜுர் வேத பாடத்தாலும், அர்த்தப்ரகாசன ஸாமர்த்யத்தாலும், ஆவோராஜானம் என்பது ருத்ரனைத் தான் குறிக்கும் மந்த்ரமாகும் என்பது தாத்பர்யம்.

சுலோகம் 82

த்வத்கம் புரா மரணதஸ் ஸ்தனயித்னு கல்ப்பாத்
ஆகாரணம் பரம காருணிக ப்ருவாண : |
மந்த்ரோயமாவ இதி யாவத் உபக்ரமாயா :
மூலம் மஹேச ! விதிதம் சிவதர்ம ஸூக்தே : ||
பதவுரை

பரமகாருணிக – விஷமுண்டும், த்ரிபுரமெரித்தும் உலகம் காத்த கருணைக்கடலே! மஹேச – பரமேச்வரனே! ஆவ இதி அயம் மந்த்ர :- ஆவோராஜானம் என்ற இந்த மந்த்ரம், ஸ்தனயித்னு கல்ப்பாத் – இடி போன்ற, மரணத: புரா – மரணம் கிழத்தனம், இந்த்ரிய சக்தி யிழத்தல் முதலிய நாசத்துக்கு முன், த்வத்கமாகாரணம் – உம்மைக் கூப்பிடுவதை ப்ருவாண:- சொல்வதால், யாவதுப க்ரமாயா :- யாவத் என்ற சப்தத்தில் ஆரம்பிக்கப்படுகிற, சிவதர்ம ஸூகதே :- சிவதர்ம வசனத்துக்கு,

யாவந் ந யாதி மரணம் யாவந் நாக்ரமதே ஜரா |
யாவந் நேந்த்ரிய வைகல்யம் தாவத் பூஜய சங்கரம் ||

என்ற வாக்யத்துக்கு மூலம் – ஆதாரபூத, வேதமந்த்ரமாக விதிதம் – அறியப்படுகிறது.
சிவதர்ம ஸூக்தத்திற்கு மூல பூதமான, ஆவோராஜானம் என்ற சுருதி, ஸ்ம்ருதிப்படி சங்கர பூஜையைத்தான் தெரிவிக்கும், அக்னியைத் தெரிவிக்க முடியாது என்பது கருத்து.

ச்ருதேரிவார்த்தம் ஸ்ம்ருதிரன்வ கச்சத் என்ற மகாகவி காளிதாஸர் வசனப்படியும், ஸ்மருத்யாதிகரண ஜைமினிய ந்யாயப்படியும், ஆவோ ராஜானம் என்ற மந்த்ரம் சிவ தர்ம வசனத்துக்கு மூலமானதால், இரண்டும் ஏக அர்த்தமாக வேண்டும். ஆதலால் ருத்ர ப்ரதி பாதகம் தான் என்பது நிச்சயம்.

இவ்விதம் ஐந்து லக்ஷணங்களால் பரமேச்வரனுடைஅய பரத்வம் ஸ்தாபிக்கப்பட்டது.

சுலோகம் 83

பீமோஸி சங்கர ! ம்ருகோ நு நிதர்சனம் தே
தேஜோபி ருச்சலித ஸூர்யஸஹஸ்ர கல்ப்பை : |
அக்ரோதனஸ் ஸ்மிதமுகோபி நிஜானுபாவாத்
ஆபாததஸ்தனுப்ருதாம் ந்ருபதிர் பயாய ||
பதவுரை

சங்கர – ஸுகத்தைத் தரும் தெய்வமே! உச்சலித ஸூர்ய ஸமஸ்ர கல்ப்பை :- உதயமான ஆயிரம் ஸூர்யனுக்கு ஸமானமான, தேஜோபி: – ஒளிகளால் பீமோஸி – அனைவரும் பயப்படும்படி இருக்கிறீர். ஒர் ஸூர்யனே தன் ஒளியால் ஹிதம் செய்பவனாயினும் உஷ்ணத்தால் கொளுத்தி பயப்படச் செய்கிறான். ஆயிரம் ஸூர்யனுக்கு ஸமமான ஒளியுள்ள, சங்கரனாகிய தாங்கள் ஜனங்களை பயமுறுத்துவதால் பீமனல்ல; தங்களுடைய ஒளி யாரும் ஸகிக்கமுடியாமல் இருப்பது பற்றி – பீமன் பயப்படக் காரணமாக இருப்பது உமது ஒளியைத் தாங்க ஜனங்களுக்குச் சக்தியில்லாதது தான், அவ்விதமே பாணினீ ஸுத்ரம் பீமா தயோ அபாதனே என்று சொல்லுகிறது தே – உமக்கு ம்ருகோநு – ஸிம்மம் அல்லவா, நிதர்சனம் – திருஷ்டாந்தமாக ருத்ரத்தில் சொல்லப்படுகிறது. அக்ரோதன – கோபிக்கும் ஸ்வபாவமே இல்லாத, ஸ்மித முகோபி – புன்சிரிப்புள்ள முகத்துடன் கூடியிருந்த போதிலும், ந்ருபதி: – அரசன் நிஜானு பாவாத் – அரசனுக்குரிய தேஜஸ்ஸின் பலத்தால், தநுப்ருதாம் – ஜனங்களுக்கு ஆபாதத :- மேலாக, வெளிப்படையாக, பயாய பவதி – பயத்துக்கும் காரணமாக ஆகிறனல்லவா?

ஸ்துஹி ச்ருதம் – என்ற ருத்ர மந்த்ரத்தின் தாதபர்யமாவது ச்ருதம் – வேதாந்தங்களின் ப்ரஸித்தமான, கர்த்த ஸதம் ஹ்ருத்ய குகையில் பள்ளத்திலிருக்கும், யுவானம் – அழிவில்லாமல் மாறுபாடு இல்லாமல், என்றைக்கும் யுவாவான, ம்ருகம் ந – ஸிம்மம் போல, பீமம் – தேஜோ பலத்தில் பிறர் பயப்படக் காரணமான, உக்ரம் – பிறரால் அவமதிக்கத்தகாத உபஹர்த்தும் பாபங்களை அழிக்கும் ஸதாசிவனை ஓ மனமே, ஸ்துஹி – துதிப்யாக.

மகா கவி காளிதாஸர் தன் சாகுந்தல நாடகத்தில் ரிஷி சிஷ்யர்கள் துஷ்யந்த ராஜன் அருகில் செல்லும் போது, தங்கள் அனுபவத்தால், மகாராஜா தேஜஸ்ஸை விளக்குவதாக வர்ணிக்கும் ச்லோகங்களில் இரண்டு இக்கருத்தை வெளிப்படுத்தும், வாசல் காவல்காரன் உத்தரவு கொடுத்து உள்ளே போகிறேன். கஞ்சுகி, அரசன் பக்கத்தில் பழகுகிறவன் என்னை அரசன்பால் அழைத்துப் போகிறான்; ஆயினும் அரசன் இயற்கையான ஒளியால் கண் பார்வைகளைத் திருப்பி என்னை வெளியே தள்ளுவது போல், வார்த்தையால் தடுக்காமலே, தேஜோ பலத்தால் தடுப்பது போல் எனக்கு உணர்ச்சி ஏற்படுகிறது என்கிறார் சாரத்வதன். மற்றொரு சிஷ்யர் சார்ங்கரவன் கூறுவது – அரசன் மதுப்பழக்கமுள்ளவனல்ல. அழகில்லாமல் குரூரமான உருவம் படைத்தவனல்ல, ஆயினும் அரசன் பக்கத்தில் செல்லும் போது, ஒரு வித அச்சம் ஏற்படுகிறது; அதே அரசன் பல தடவை பார்க்கப்பட்ட போதிலும், அவ்வப்போது ஸமுத்ர ராஜன் போல, புதுப் புது தோற்றமளிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

சுலோகம் 84

அப்யுத்யதம் கிரிச வஜ்ரமதீமஹே த்வாம்
த்வத் பிப்யத : பவன பானு க்ருசானு சக்ரா: |
ம்ருத்யு :ச தத்தத் அதிகார ப்ருதஸ்ததான்யே
ப்ரம்ஹத்வ லக்ஷண மயம் பயஹேதுபாவ : ||
பதவுரை

கிரிச – வேதாந்த ப்ரதி பாத்ய ப்ரம்மமே! த்வாம் – உம்மை, அப்யுத்யதம் – உயரத்தூக்கப்பட்ட, வஜ்ரம் – வஜ்ராயுதம் போல, (பய ஹேதுவாக) அதீமஹே – கடோப நிஷத்திலிருந்து அறிகிறோம். பவன பானு க்ருசானுசக்ரா :- வாயு, சூர்யன், அக்னி, இந்திரன் நால்வர்களும் ம்ருத்யு: ச யமதர்ம ராஜனும், ததா – அவ்விதமே, அன்யே – மற்ற, தத்தத் அதிகார பூத :- அந்த அந்த அதிகாரத்ஹ்டில் அமர்ந்திருக்கும் புருஷர்கள் அனைவர்களும், த்வத் – உம்மிடமிருந்து, பிப்யத: பயப்படுகிறவர்களாக, பவந்தி – இருக்கிறார்கள். அயம் – இந்த, பயஹேது பாவ: பயப்படக் காரனமாக இருப்பது, ப்ரம்ஹத்வ லக்ஷணம் ப்ரம்மத்தின் லக்ஷணமாக வேதாந்தங்களில், தைத்ரீய முதலிய இடங்களில் கூறப்பட்டிருக்கிறது.

ஏகமேவாத்விதீயம் ப்ரம்மா
ஏக ஏவ ருத்ரோ ந த்வீதியாய தஸ்தே
இந்த இரண்டு ச்ருதிகளின் அர்த்த பர்யாலோசனையில், ப்ரம்ம சப்தமும், ருத்ர சப்தமும் ஸமானார்த்தகம் என்பது வெளியாகிறது. ஆதலால் ருத்ர சப்தவாச்யனான ஸதாசிவன் தான் ப்ரம்மம் என்பது வெளியாகிறது.

சுலோகம் 85

கோரா சிவாச பகவந் உபயீ தனுஸ்தே
கோரா பிஷஜ்யதி பவார்த்த முபாஸ்யமானா |
அன்யா பிஷக் ஜனக்ருதாம் ருஜ மீக்ஷமாணா
த்ருஷ்ட்யா ததாதி சிவதா மசிவாத்மனோ பி ||
பதவுரை

பகவந் – பகவானே! தே – உமக்கு கோரா – பயங்கரமானது, சிவாச – சாந்தமானது என்ற உபயீதநு :- இரண்டுவிதமான உருவங்கள் இருக்கின்றன. அவைகளுள், கோர – பயங்கரமான உருவம், உபாஸ்யமானா ஸதி – வாக்கால் துதிக்கப்பட்டு, உடலால் வணங்கப்பட்டு, மனதால் த்யானம் செய்யப்பட்டதாக பவார்த்தம் – ஸம்ஸாரரோக க்ரஸ்தனை, பிஷஜ்யதி – வைத்யம் செய்து, ஸம்ஸாரரோகத்தை நீக்குகிறது, அன்யா – மற்றொன்றாகிய சாந்த உருவம் பிஷக் ஜனக்ருதாம் ருஜம் – வைத்யம் பண்ணுவதாகிய துதி, நமஸ்காரம், த்யானம், செய்விப்பதால் ஏறபடும் துக்கத்தை, ஈக்ஷமாணா பார்த்துக் கொண்டு அதை ஸகிக்காமல், அந்தக் கஷ்டம் கூடக் கொடுக்காமல் வைத்யம் செய்யக் கருதி, த்ருஷ்ட்யா – அழகான தன் சந்திரசேகர மூர்த்தி தர்சனத்தாலேயே, அசிவாத்மனோபி – பாபம் செய்தவனுக்கும் சிவதாம் – மங்கள உருவத்தை, ஈச தாதாத்ம்யத்தை, ததாதி – கொடுக்கிறது.

சுலோகம் 86

கோராந்நமோ விததத : சமயந்தி ருத்ரை :
ஆர்த்தா ஹி கோரமுபயாந்தி சிகித்ஸிதாரம் |
ப்ரீணந்தி சங்கர சிவாம் சமகானுவாகை :
ஹோமஸ்ய யத்தவ பவந்த்யுபயேபி மந்த்ரா : ||
பதவுரை

யத் – எந்தக் காரணத்தால், தவ ஹோமஸ்ய – உம்முடைய ருத்ர ஏகாதசினி முதலிய ஹோமத்துக்கு, உபயேபி மந்த்ரா : – இரண்டு விதமான நமகம், சமகம் என்ற பிரிவுள்ள மந்த்ரங்கள் பவந்தி – விநியோகப் படுத்தப்படுகின்றனவோ, தத் – அந்தக் காராணத்தால், ருத்ரை :- ருத்ரமந்த்ரங்களால், நமக அநுவாகங்கள் பதினொன்றால், நம :- நமஸ்காரத்தை, விததத :- செய்கிறவர்கள், கோராம் – பயங்கரமான உமது உருவத்தை, சமயந்தி – அடங்கச்செய்கிறார்கள் (சாந்தமாகச் செய்கிறார்கள்) ஹி ஏனென்றால், ஆர்த்தா :- ரோகிகள், கோரம் – மருந்து கொடுப்பதால் பயத்தைத் தரும், சிகித்ஸிதாரம் – வைத்யனை, உபயாந்தி – அடைகிறார்கள், சங்கர – ஸுகத்தைத் தருகிறவரே! சமுகாநுவாகை: – சமக மந்த்ரங்களைச் சொல்லி, ஹோமம் செய்வதால், சிவாம் – உமது மங்கள உருவத்தை, ப்ரீணந்தி – ஸந்தோஷப் படுத்துகிறார்கள்.

தாத்பர்யம்

வைத்யன் ரோகிக்கு மருந்து கொடுத்து, பத்தியம் வைக்கும் போது பயம் அளிப்பவனாகவும், பிறகு வ்யாதி தீர்ந்ததும் புஷ்டிக்கு நல்ல லேகியங்கள், பழரஸம் அளிக்கும் போது, மங்களகரமாகவும் இருப்பது போல, பரமேச்வரன் ஸம்ஸார ரோகம் நீங்க, மனோ வாக், காயங்களால், த்யாநிக்கவும், துதிக்கவும், நமஸ்கரிக்கவும் தூண்டிவிட்டு பயமளித்து, பிறகு அம்மூன்று கர்மாவாகிய மருந்தால் ஸம்ஸார ரோகம் நீக்கி, புஷ்டியளிப்பதற்காக அம்ருதத்வத்தைக் கொடுக்கும் போது மங்கள ஸ்வரூபியாக இருக்கிறார் என்பது தாத்பர்யம். பிரம்மாண்டபுராணத்தில் பரமேச்வரனுக்கு கோரமான தநுக்கள் சூரியன், விஷ்ணு, அக்னி முதலியவை. சிவமான (அகோர), தநுக்கள் ஜலம், சந்திரன், ப்ரம்ம ஸ்வரூபம், முதலியவை எனக்கூறப்பட்டிருப்பதும் ஆதாரமாகும்.

சுலோகம் 87

விஷ்ணு ப்ரஜாபதி புரந்தர பூர்வகேஷு
வாஜாதி துல்ய மிதரேஷ்வபி தைவதேஷு |
ஆசம்ஸிதேஷு சமகா : பரிசிஷ்யமானம்
தாதார மீச்வர !பவந்த மசப்த மாஹு : ||
பதவுரை

விஷ்ணு ப்ரஜாபதி புரந்தர பூர்வகேஷு – விஷ்ணு ப்ரம்மா, இந்திரன் முதலிய, இதரேஷு தைவதேஷ்வபி – மற்ற தேவதைகளும், வாஜாதி துல்யம் – அன்னம் முதலியவை போல வேண்டிக்கொள்ளப்படும், கர்மகாரகனாகச் சொல்லப்பட்டிருக்கும் பொழுது, ஈச்வர – பரமசிவனே! சமகா :- சமக மந்த்ரங்கள், பரிசிஷ்யமான – மிச்சப்படுகிற, வேண்டிக்கொள்ளப்பட்ட வஸ்துக்களில் சேர்க்கப்படாத, பவந்தம் – தங்களை, அசப்தம் தாதா – கொடுப்பவர் என்ற பதமில்லாமலேயே, பரிசேஷ்யந்யாயத்தால், தாதாரம் ஆஹு:- 361 பயன்களையும், கொடுக்கிற தைவம் என்ற சொல்லுகின்றன.

வேண்டப்படும் வஸ்துக்களில், அன்னம்போல, ப்ரம்மா, இந்திரன் விஷ்ணுவின் பதவிகளும் சேர்க்கப்பட்டு. எல்லாம் கொடுபடுபொருள்கள்; சிவ : ச மே – என்று சமகத்தில் இல்லாததால், அவர் மற்ற எல்லாவற்றையும் கொடுக்கும் தாதா என்று ஏற்படுகிறது.

சுலோகம் 88

யுக்தம் நமானயிது மீச்வர ! ஸந்நிதெள தே
தேவாந்தராணி மஹதாமிவ மர்த்ய மாத்ரம் |
அந்தர்த்தி மத்வரவிதெள ததபேக்ஷமாணா :
த்வத்கர்மஸீம்னி பரிஷேசன மாசரந்தி ||
பதவுரை

ஈச்வர – ஸகல தேவதைகளுக்கும் தலைவரே! மகதாம் – பூஜிக்கத்தகுந்த பெரியோர்களுக்கு, ஸந்நிதெள – எதிரில், மர்த்ய மாத்ரமிவ – ஸாதாரண மனிதனிப்போல, தே – உம்முடைய ஸந்நிதெள – எதிரில், தேவாந்த ராணி – மற்ற சில்லரை தேவதைகளை மானயிதும் – பூஜிப்ப்து ந யுக்தம் – தகுதியற்றது என்று கருதி, தத் – அந்தக் காரணத் தால் அத்வரவிதெள : யாகம் முதலிய பூஜாகாலத்தில், அந்த்தர்தி மபேக்ஷமாணா :- உமது மறைவை விரும்பினவர்கள். த்வத்கர்மஸீம்னி – உம்மைப் பூஜித்த கார்யம் முடிந்ததும் பரிஷேசனம் ருத்ரதேவன் மறைந்தருள வேண்டுமென்ற நோக்கத்துடன் தீர்த்தத்தால் நனைத்தலை, ஆசரந்தி – செய்கிறார்கள்.

அப: பரிஷிஞ்சதி ருத்ரஸ்யாந்தர் ஹித்யை – என்ற சுருதி இந்த அர்த்தத்தை விளக்குகிறது. ருத்ர பூஜைக்குப் பிறகு, அப உபஸ்ப்ருச்ய என்று தீர்த்தத்தைத் தொட்டு நனைத்து விட்டு மற்றவர்களுக்குப் பூஜை செய்வது, அவர் பெரியவர், அவர் ஸந்நிதியில் சிறியவர் பூஜை தகுதியற்றதால் அவரை அனுப்பிவிட்டு, அவர் மறைந்தபின் சிறியவர்களைப் பூஜை செய்யவேண்டுமென்ற நோக்கத்துடன், அவர் மறைவிற்கு அறிகுறியாக, அப உபஸ்ப்ருச்ய செய்ய வேண்டுமென்பது தாத்பர்யம்.

சுலோகம் 89

ஆத்மாந்தராணி பசவ : பரதந்த்ரபாவாத்
ஸ்வாதந்த்ர்யத : பசுபதே ! பதிரீச்வர த்வம் |
ஆத்மானம் ஒளபநிஷதா : ப்ரவதந்த்யனீசம்
ஈசம் பவந்த முபயோ ருபயம் ஸ்வபாவ : ||
பதவுரை

ஆத்மாந்தராணி – பரமசிவனைத்தவிர மற்ற இதர ஆத்மாக்கள், பரதந்த்ரபாவாத் – பிறருக்கு அதீனமாக இருப்பதால் பசவ:- பசுக்களாவார்கள், ஈச்வர – ஹே பரமேச்வரா! பசு பதே – பசுக்களான ஸகல ஜீவர்களுக்கும் தலைவரே! த்வம் – நீர், ஸ்வாதந்த்ர்யத :- பராதீனமாக இல்லாததால், ஸ்வதந்த்ரமாக இருப்பதால், பதி :- பசுபதி யாகிறீர், வாயவீயஸம்ஹிதை, ஆதித்யபுராணம், மகாபாரதம், லிங்கபுராணம் முதலியவைகளில் இவ்விஷயம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, ஒளபநிஷதா :- உபநிஷத்தெரிந்தவர்கள், ஆத்மானம் – ஜீவனை, அனீசம் – ஸ்வாதந்த்ர்யம் அற்றவனென்றும், பவந்தம் – தங்களை, ஈசம் – ஸ்வதந்த்ரமாயிருப்பவரென்றும், ப்ரவதந்தி – சொல்லுகின்றார்கள். உபயோ :- இருவர்களுக்கும், உபயம் – அவ்விரண்டும், ஸ்வபாவ :- இயற்கையாக அமைந்த குணமாகும், அதர்வசிரஸ் அதர்வ சிகை, ச்வேதாச்வதரம் வாயவீய ஸம்ஹிதை முதலிய க்ரந்தங்களில் ஜீவன் இயற்கையாகவே பரதந்த்ரன், பரமேசரன் – இயற்கையாகவே ஸ்வதந்த்ரன், பசுபதி என்ற விஷயம் தெளிவாக்கப்பட்டிருக்கிறது பசுபதி பாவம் வரம் பெற்றதால் ஏற்பட்டதாக சுருதியில் சொல்லப்படுவது, ஸ்துதிக்காக அர்த்த்வாதமாகும், ஸ்வார்த்தம் தாத்யர்ய விஷயமாக விவக்ஷிதமாகாது.

ஸர்வலோக மஹேச்வரம் மாம் ஞாத்வா சாந்தி மிருச்சதி என்ற கீதாவாக்யத்தில், மாம் என்பது, கிருஷ்ணனுக்கும் உபதேசம் செய்த, வக்தாவாகிய பரமசிவனைக் குறிக்குமே யல்லாது, அர்ஜுனனுக்கு உபதேசம் செய்த ப்ரவக்தாவாகிய கிருஷ்ணனைக் குறிக்காது, கிருஷ்ணனும் பசுபதி பரதந்த்ரன் ப்ரவக்தா மாம் பதார்த்தமானல், கீதை வாசிப்பவர்கள் பாடம் சொல்பவர்கள் கூட மாம் பதார்த்தமாகி அவர்களும் ஈச்வரர்களாகவும், உபாஸிக்கப்பட வேண்டியவர்களாகவும் ஆகி விடுவார்களல்லவா? கூர்ம புராணத்திலும், ச்வேதாச்வதர உபநிஷத்திலும், பாரதம் சாந்தி பர்வாவிலும் எல்லா வித்தைகளையும் பரமசிவன் தான், வக்தா ஆகமாட்டான் என்பது கூறப்பட்டிருக்கிறது. உதயனாசார்யார் ந்யாயகுஸுமாஞ்ஜலி என்ற தன் புஸ்தகத்தில் அஸ்மத் சப்தத்துக்கு வக்தா தான் அர்த்தம் ப்ரவக்தா அர்த்தமாகா தென்பதைத் தர்க்க சாஸ்திர முறையில் ஸ்தாபித்திருக்கிறார்.

வ்ருஷ்ணீனாம் வாஸு தேவோஸ்மி – என்ற கிருஷ்ணன் பாண்டவரக்ளுக்குள் அர்ஜுனன் போல விபூதி கோஷ்டியில் சேர்த்துக் கூறப்பட்டிருப்பதால், விபூதிமான் வாஸுதேவனாக இருக்க முடியாது, ஆனதுபற்றி கீதையில் சொல்லப்பட்ட விபூதி அவ்வளவும் மஹேச்வரனைச் சேர்ந்ததால் கீதையிலுள்ள மாம் சப்தார்த்தமாகப் பரமசிவனைத்தான் கொள்ளவேண்டும்.

ஸ்வதஸ் ஸித்தம் பதித்வம் மே யுஷ்மாகம் பசுதாபி ச என்ற புராண வசனமும், பசுபதயே நம: என்ற ச்ருதியாலும் ஈச்வரனுக்கு பசுபதித்வம் இயற்கை என்பது திண்ணம்.

சுலோகம் 90

ஸம்ப்ராப்த ஏவ ஸதி சங்கர பாசுபத்யே
கஸ்மை வரேண்ய வரணம் க்ருபணோசிதம் தே |
வித்யர்த்தமத்யயன் சோதனயாக்ருஹீதா
ஜல்ப்பந்தி யத்கிமபி வந்திவதர்த்தவாதா : ||
பதவுரை

வரேண்ய – பிறருக்கு வரன்களை அளிப்பவரே! சங்கர – ஸுகத்தைக் கொடுப்பவரே! பாசுபத்யே – பசுக்களுக்குத் தலைவராயிருப்பது கஸ்மை – எதற்காக? அத்யயன சோதனயாக்ரு ஹீதா – (ஸ்வாத்யாயோத்யேதவ்ய:) குல பரம்பராப்ராப்த சாகையை அர்த்தத்துடன் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விதியால் உட்படுத்தப்பட்ட அர்த்தவாதா:- அர்த்தவாத பாகங்கள். வித்யர்த்தம் – அந்த விதியில் ப்ரவ்ருத் – தியை உபநீதர்களுக்கு உண்டு பண்ணுவதற்காக, வந்திவத் – அரசனை ஸ்துதிபாட கர்கள் துதிப்பது போல, யத்கிமபி – இருக்கும் குணங்களாலோ, இல்லாத குணங்களாலோ, ஜலப்பந்தி – ஸ்தோத்ரம் செய்கின்றன. ஆதலால் அர்த்த வாதங்களுக்கு ஸ்வார்த்த தாத்பர்யம் இல்லாததால், பசுபதித்வம் வரப்ராப்த என்பது உண்மையல்ல; இயற்கை என்பதுதான் உண்மை.

உத்தரமீமாம்ஸா சாஸ்திரப்படியும் விரோதமில்லாத அர்த்த வாதம்தான் பூதார்த்தவாதம், அந்த அர்த்தம் தான் க்ராஹ்யம், ஆதலால் இந்திராதி தேவர்களுக்கு சரீரம், ஆயுதம், வீர்யம் உண்டு என்று ஸித்தாந்தமானதால், பசுபதித்வம் வரமாக அடையப்பட்டதாகச் சொல்லும் அர்த்தவாதம் பசுபதயே நம; என்ற நித்ய ஸித்த, பசுபதித்வ, போதக, ப்ரத்யக்ஷ, சுருதிக்கு விருத்தமாதலால் பூதார்த்தவாத மாகாது, குணவாதமாகி – ஸ்துதியில்தான் தாத்பர்யமுள்ளதாகும்.

சுலோகம் 91

நாநாபதானவசனாதபி வாரணீய :
த்வத்பாசுபத்ய வரண ப்ரதிலம்பவாத : |
லப்தும் வரீதுமதவா கதமேக ஏவ
வாரான் பஹுனபி மஹேச்வர ! சக்ய தேர்த்த : ||
பதவுரை

த்வத் பாசுபத்ய வரணப்ரதிலம்பவாத :- தாங்கள் பசுபதியாக இருக்க வேண்டும் என்று வரம்கேட்டு, அதைப் பெற்றுக் கொண்டதாகச் சொல்லும் அர்த்தவாத வாக்யம், நானாபதான வசனாதபி – விஷ்ணு முதலிய மற்ற தேவதைகளால் செய்ய முடியாத த்ரிபுரஸம்ஹாரம், காமதகனம், விஷபக்ஷணம், காலஸம்ஹாரம், அந்தக, ஜலந்தராசுரஸம்ஹாரம், தக்ஷயக்ஞபங்கம், பிரம்மாவை சிக்ஷித்தது, முதலிய பல அரிய வீரச் செயல்கள் புரிந்ததிலிருந்தும், வாரணீயம்:- பரிஹாரம் சொல்லப் படவேண்டும், ஸ்வார்த்த தாத்பர்யகமில்லை என்று தள்ளப்பட வேண்டும். அதவா – அப்படியில்லாவிடில் மஹேச்வர – ஸ்வதஸ்ஸித்த ஈச்வரத்வமுள்ளவரே! ஏக ஏவ அர்த்த :- ஒரே பசுபதித்வ விஷயமானது, பஹூன் வாரானபி – பலதடவை, வரீதும் – வரமாகக் கேட்பதற்கும், அதவா லப்தும் – அப்படியே அடைவதற்கும், கதம் – எப்படி, சக்யதே – முடியும்? த்ரிபுரஸம் ஹாரத்திலும், பிரம்மா சிரஸ்ஸைக் கிள்ளின சரித்திரத்திலும், வேடவேஷம் பூண்ட சரிதத்திலும் பல தடவை பசுபதித்வ வரம் சொல்லப்பட்டிருப்பது எப்படிப் பொருந்தும்? ஸ்வதஸ் ஸித்தம் என்பதை பலவாறாகத் துதிப்பதுதான் பொருத்தம்.

சுலோகம் 92

அங்கைஸ் ஸ்திரேபிரிதி ரூபமனச்வரம் தே
பூரீணி தாநி ச புஜங்கமமால பாரிந் |
மந்த்ரேண சாந்தரிதி யுஷ்மதுபஸாகானாம்
ஆர்க்வைதிகா யதசனம் ததமோக மாஹு : ||
பதவுரை

புஜங்கமமால பாரிந் – பாம்புமாலைகளையணிந்த கடவுளே, ஸ்திரேபிரங்கைரிதி – ஸ்திரேபிரங்கை: என்ற சுருதியால், தே – உம்முடைய, அனச்வரம் ரூபம் – அழிவில்லாத உருவத்தையும் தாநிச பூரிணி இதி – அந்த உருவங்களும் ஏராளமானவை என்றும், ஆர்க்வைதிகா : ரிக்வேத மறிந்தவர்கள், ஆஹு:- சொல்லுகிறார்கள். தங்கமயமான அழிவில்லாத, அழுக்கற்ற நிர்மலமான அங்கங்களால் ஈச்வரன், பல உருவங்கள் உள்ளவராகவும், பல நிறமுள்ளவராகவும், பிறரால் அவமதிக்க முடியாதவராகவும் விளங்குகிறார். என்பதாக, ஸ்திரே பிரங்கை: என்ற ரிக்வேத மந்த்ரத்தின் பொருள். யதசனம் – பக்ஷ்ய, போஜ்ய லேஹ்ய, சோஷ்ய, என்று நான்கு விதமாக ப்ரஸித்தியடைந்த ஆஹாரம் யாதொன்று உண்டோ தத் – அதை, அந்த ரிதி மந்த்ரேண – அந்தரிச்சந்தி என்ற மந்த்ரத்தால் யுஷ்மதுபாஸகானாம் – உம்மை உபாஸிக்கும் பக்தர்களுக்கு, அமோக மாஹு:- ஏரானமாக வேண்டியது கிடைக்குமென்று, ரிக்வேத மறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். புத்தி பூர்வகமாக எவர்கள் ஹ்ருதயாகாசத்தில், எல்லாவற்றையும் விட சிறந்த பரம் பொருளாகிய, பரமசிவனை உபாஸிக்கிறார்களோ, அவர்கள் தாம் நாக்கால் நாலுவிதமான அன்னத்தை அருந்தி ஸுகமடைவார்கள் என்பது, அந்தரிச்சந்தி என்ற ரிக்வேத மந்த்ரத்தின் அர்த்தமாகிறது. ஹ்ருதயாந்தருபாஸனைக்குப் பிறகு, வெளியிலும் பரமசிவனை உபாஸிக்க வேண்டும், என்று சிவதர்ம ஸூக்த வசனம் இருக்கிறது, அதாவது வரம் ப்ராண பரித்யாக :- உயிரை விடுவதும் நலம் ; அபிவாசிரஸ்: சேதனம் வரம் – தலையறுபடுவதும் நலம், பகவந்தம் த்ரிலோசனம் – முக்கண்ணக்கடவுளை, அநப்யர்ச்ய – பூஜை செய்யாமல், ந து புஞ்ஜீயாத் – ஒரு நாளும் சாப்பிடக்கூடாது, என்ற சிவதர்ம ஸுக்தி இந்த அந்தரிச்சந்தி என்ற மந்த்ரத்தின் மூலமாகவே ஏற்பட்டது, ஆதலால் ப்ரதிதினம் முக்கண்ண ஈச்வர பூஜை செய்த பிறகு தான் சாப்பிட வேண்டும்.

சுலோகம் 93

பாவோபபந்ந மனஸாம் த்வதுபாஸகானாம்
பும்ஸாம் அமோக மசனம் பகவந் ப்ருவாண : |
மந்த்ரோயம் அந்தரிதி ந : ப்ரதி பாதிமூலம்
ப்ராக் புக்தம் அர்ச்சன விதே : அநுவாஸரம் தே ||
பதவுரை

பகவந் – ஹே பகவானே! பாவோபபந்ந மனஸாம் – உள் அந்தரங்கத்துடன் கூடிய மனதையுடைய, த்வதுபாஸகானாம் – உம்மை உபாஸிக்கும், பும்ஸாம் – ஜனங்களுக்கு, அமோக மசனம் – வேண்டிய ஆகாரங்கள் ஏராளமாகக் கிடைக்குமென்று ப்ருவாண: – சொல்லுகின்ற அயம் அந்தரிதி மந்த்ர :- அந்தரிச்சந்தி என்ற ரிக்வேத மந்த்ரத்தின் பொருள் அநுவாஸரம் – தினந்தோறும், ப்ராக்புக்தம் – சாப்பிடுவதற்கு முன்பு தே – உம்முடைய, அர்ச்சனவிதே :- பூஜை செய்யப்பட வேண்டும் என்ற சிவதர்ம ஸூக்தி விதிக்கு, (வரம் ப்ராண பரித்யாக: ) மூலம் – மூலபூத ச்ருதி என்று ந :- எங்களுக்கு ப்ரதி பாதி – தோன்றுகிறது. ஸ்ம்ருத்யதிகரண ந்யாயப்படி, சுருதியை மூலமாகக் கொண்ட ஸ்ம்ருதியல்லவா க்ராஹ்யம். ஆதலால் சிவதர்மஸூக்தி, அந்தரிச்சந்தி சுருதி மூலமானதால் க்ராஹ்யம் என்பது தாத்பர்யம்.

சுலோகம் 94

நரத ! த்வயா பித்ருமதோ மருதஸ்துவாநா :
த்வாம் ஆமனந்தி பரதம் நடனாபியோகாத் |
வைசேஷிகே ஸதி கலு வ்யபதேசஹேதெள
ஸாதாரணேன பரணேன ந கச்சிதர்த்த : ||
பதவுரை

நாத – பரமேச்வரா! த்வயா – உம்மால், பித்ருமத :- தந்தையுள்ளவர்களாக மருத :- தேவர்களை, ஸ்துவாநா :- துதிக்கிற ரிக் வேதிகள், நடனாபியோகாத் – நடனத்தில் கை தேர்ந்தவர்களானதால், த்வாம் – உம்மை, பரதம் – பரதன் என்று, ஆமனந்தி – சொல்லுகிறார்கள், யாகங்களில் ஒன்று கூடி சேர்ந்திருப்பவர்களும், யாகத்துக்காகப் புறப்பட்டுச் செல்லும் போது பலவர்ணமுள்ள ஆயுதங்களால் ப்ரகாசிப்பவர்களும் நகைகளில் ப்ரியமுள்ளவர்களும், பரதன் பிள்ளைகளுமாகிய (நடராஜாவாகிய உமது பிள்ளைகளாகிய) தேவர்கள் இந்த யாகத்துக்கு வந்து போத்ர சமஸம் என்ற பாத்ரத்தில் வைக்கப்பட்டுள்ள ஸோமரஸத்தை சூரர்களான, ப்ரகாசிக்கிற தேவர்கள் அனைவரும் பானம் செய்து, திருப்தியடைய வேண்டும்மென்பது யக்ஞை: ஸம்மிச்லா: என்ற மந்த்ரட்த்தின் முக்யதாத்பர்யார்த்தமாகும். நர்த்தகனைச் சொல்லும் பரத பதம் நடராஜ மூர்த்தியான உம்மைத்தானே குறிக்கும்? அக்னே மஹாம் அஸி ப்ராஹ்மண பாரத – என்று அக்னியை, பரத பதத்தால் குறிக்கப்பட்டிருப்பதும் ஹவிர்பரணம் என்ற விசேஷமான கார்யத்தை அக்னி செய்வதால் தான், வைசேஷிகே – வ்யபதேச ஹேதெள – விசேஷமான பெயரின் காரணமிருக்கும் போது, ஸாதாரணேன பரணேன – பொதுவான தாங்குதல் என்ற காரணத்தால், ந கச்சிதர்த்த : கலு – ஒரு பெயர் வந்திருப்பதாகச் சொல்வது சரியல்லவன்றோ.

சுலோகம் 95

ஹிம்ஸா ப்ரதீதிரபிமான பதைகதேசாத்
சப்தாத பேரிதி பயேன ஸமுத்வபந்தி |
காமாந்தக த்ரிபுர தக்ஷமகாதிபங்க
விக்யாத விக்ரமதயா கதிதோஸி வீர : ||
பதவுரை

அபிமானபதைகதேசாத் – அபிபமானபதத்தின் முன் பாகமாகிய, அபேரிதிசப்தாத் – அபி என்ற சப்தத்திலிருந்து, ஹிம்ஸா ப்ரதீதிரிதி பயேன – ஹிம்ஸா என்ற அர்த்தம் தோன்றும் என்கிற பயத்தினால், அபிநோ வீரோ அர்வதி க்ஷமேத என்ற மந்த்ரத்தில் அபி சப்தத்தை, ஸமுத்வபந்தி – எடுத்துவிட்டு அதற்கு பதிலாக, த்வம் நோ வீர : என்று, த்வம் ந : என்ற பதத்தை, அபிந: என்ற பதத்துக்குப்பதிலாக சேர்த்து சொல்லும்படி, ஆவா போத்வாபத்தைக் கூறுகிறார்கள். ஆதே பித: என்ற மந்த்ரத்திலுள்ள வீர சப்தம் உமக்கே பொருந்தும் ஏனெனில், காமாந்தக – மன்மதன், யமன், த்ரிபுர தக்ஷ மகாதி – த்ரிபுர அஸுரர்கள், தக்ஷ யாகம் முதலியவைனை, பங்க – அழித்ததால், விக்யாத விக்ரமதயா – ப்ரஸித்தமான பராக்ரமம் உடையவராதலால், த்வம் – நீர். வீர : கதிதோஸி – வீரன் என்று உண்மையாகச் சொல்லப்படுகிறீர்.

அந்தக ஜலந்தராதி ஸம்ஹாரமும் இங்கு வீர பத வ்ருத்தி நிமித்தமாகக் கொள்ளப்பட வேண்டும். ரகாரம் ஆரம்பிக்கும், ரத்னம், ரதம் என்ற பதங்களைக் கேட்டாலே, ராமர் பதம் ஞாபகம் வருவதால் பயமாக இருப்பதாக மாரீசன் ராவணனிடம் சொல்லுகிறான், அவ்விதம் அபி என்ற பதம் அபி மம்ஸ்த என்ற ஹிம்ஸா வாசக பதத்தின் ஆரம்ப ஏக தேசமானதால், ஹிம்ஸையை ஞாபகப்படுத்தும் என்று சுருதி ஆபத்பாந்தவரான, வீரனான உம்மைத் துதிக்கும் மந்த்ரத்தில், அபி பதத்தை எடுத்துவிட்டு, அபி நோ வீர என்பதற்கு பதிலாக த்வம் நோ வீர என்றல்லவா உச்சரிக்கும்படி ப்ராம்மணம் கூறுகிறது.

சுலோகம் 96

ஹிம்ஸாபிதாத்ரு பதஸந்நிதினா ஜ்வரார்த்தம்
ருத்ரேதி நாம பரிசங்க்ய பராவபந்த : |
மந்த்ரே யதான இதி மங்களவாசி த்ருஷ்டம்
தேவேச ! ருத்ரிய பதம் புனராவபந்தி ||
பதவுரை

ஹிம்ஸா பிதாத்ரு பத ஸந்நிதினா-ஹிம்ஸையைக் குறிக்கும் அபி என்ற பதத்துக்குப் பக்கத்திலிருப்பதால், ருத்ரேதி நாம – ருத்ர என்ற பதத்தை, ஜ்வரார்த்தம் – ஜ்வரம் என்ற அர்த்தத்தை ஒரு ஸமயம் கொடுத்து விடலாமென்று. பரிசங்கிய ஸந்தே ஹித்து, பராவபந்த:- அப்பதத்தை நீக்கி வேறு பதம் சொல்லச் செய்கிறவர்களாய், தேவேச – தேவதைகளுக்குத் தலைவரே! யதான இதி மந்த்ரே – யதா நோ அதிதி: கரத் என்ற மந்த்ரத்தில் மங்கள வாசித்ருஷ்டம் – மங்களம் என்ற அர்த்தத்தைச் சொல்வதாக அநுபவிக்கப்பட்ட, ருத்ரிய பதம் ருத்ரிய என்ற பதத்தை, புன, ருத்ரபதத்துக்குப் பதிலாக ஆவபந்தி – அதை எடுத்து விட்டு, ருத்ரிய பதத்தைப்போட்டு ஷ மந்த்ரத்தை உச்சரிக்க வேண்டுமென்று ப்ராம்மணம் கூறுகிறது.

தேவர்களுக்குத் தந்தையான பரமசிவனே! உமக்கு ஸுகமுண்டாக வேண்டும். எங்களுடைய சூரியன் உபாஸனையை நீக்க வேண்டாம். தாங்கள் எங்கள் குற்றத்தைப் பொறுத்து, எங்கள் குதிரை முதலிய இஷ்டமான வஸ்துக்களை அழிக்காமல் காக்க வேண்டும் என்பது ஆதே பத: என்ற மந்த்ரத்தின் அர்த்தமாகும். உங்கள் உத்தரவால் நாங்கள் புத்ர பெளத்ர, ப்ரபெளத்ர பரம்பரையாக ஸந்ததி வளர்ச்சியுடன் ப்ரகாசிக்க வேண்டும் என்றும் வேண்டப்படுகிறது. ருத்ர சப்தத்துக்கு பதில் ருத்ரிய என்ற மங்கள வாசக பதத்தையும் அபி நோ வீர என்பதற்கு பதிலாக, த்வம் நோ வீர என்ற பதங்களையும் போட்டு, ஆதே பித: மந்த்ரத்தை உச்சரிக்கும்படி ப்ராம்மணம் கூறுகிறது.

சுலோகம் 97

சாகாஸு சங்கர ! ஸஹஸ்ர தயீஷு ஸாம்நாம்
ஆம்னாயதே தவ ந கேவல மானுபாவ : |
ஸர்வாத்மனாம் அதிபதே : அவிசேஷதஸ்தே
தேவ வ்ரதாதிஷு கணா : கதிதானுபாவா : ||
பதவுரை

சங்கர – ஸுகத்தைத் தருபவரே! ஸஹஸ்ரதயீஷு – ஆயிரம் பிரிவுள்ள, ஸாம்னாம் சாகாஸு – ஸாம வேதத்தின் சாகைகளில், தவ கேவலமானுபாவ: நாம்னாயதே – உம்முடைய மகிமை மட்டும் சொல்லப்படவில்லை. அவி சேஷத: ஸர்வாத்மனாம் அதிபதே :- குறிப்பிட்டு சிலரைச் சொல்லாததால், ஸகல சராசரங்களுக்கும், தலைவரான, தே – உம்முடைய, கணா:- ப்ரமத கணங்களும், தேவ வ்ரதாதிஷு – தேவ வ்ரதம் முதலிய ஸந்தர்ப்பங்களில், கதி தானுபாவா: – விவரிக்கப்பட்ட மகிமையை உடையவர்களாக இருக்கிறார்கள். ஸாம வேதத்தில் உம்முடையவும், உமது கணங்களுடையவும் மகிமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. நீங்கள் ஸர்வாதிபதியாகக் கூறப்பட்டிருக்கிறீர் என்பது கருத்து. மகாபாரதத்திலும், லிங்க புராணத்திலும் ருத்ர கணங்களின் மகிமை விவரிக்கம்பட்டிருக்கிறது. நந்தி கேசர் ப்ரமதகணத் தலைவர். அவர் உத்பத்தி, விவாகம் சரிதம் முதலியவை புராணங்களில் நன்கு கூறப்பட்டிருக்கின்றன. ஸாம விதான ப்ராம்மணத்தில், ஈச குமாரர்களான விநாயகர், ஸுப்ரமண்யர் மகிமை சொல்லப்பட்டிருக்கிறது.

சுலோகம் 98

ஸ்கந்தம் விநாயக முபாவபி தே குமாரெள
ஸர்வைர்குணை : பிதரமேவ நிதர்சயந்தெள |
ஸாமோபகாய முபகாயம் ருசாம் கணேஷு
ஸம்ப்ரீணயந்தி சிவ ! ஸாமவிதெள யதோக்தம் ||
பதவுரை

சிவ – பரமேச்வரா! ஸர்வை: குணை:- எல்லா குணங்களாலும், பிதரமேவ – தந்தையாகிய உம்மையே, நிதர்சயத்தெள அனுஸரித்து விளங்குகிற, ஸ்கந்தம் – ஸுப்ரமண்யர், விநாயகர் – விநாயகர் இதி – என்ற, உபாவபி குமாரெள – உம்முடைய இரண்டு பிள்ளைகளையும், ஸாமோபகாயம் – ஸாமாவை கானம் செய்து. ஸாமோபகாயம் – திரும்பத்திரும்ப கானம் செய்து ருசாம் கணேஷு – ரிக்கின் கூட்டங்களில், ஸாமவிதெள யதோக்தம் – ஸாம விதான ப்ராம்மணத்தில் சொல்லியபடி ஸம்ப்ரீணயந்தி – ஸந்தோஷப்படுத்துகிறார்கள்.

உம்மையும் உமது கணங்களையும் ஸந்தோஷப்படுத்துவது போல், உமது குணங்களையும் மகிமைகளையும் பரிபூர்ணமாக கொண்ட புத்ரர்களான ஸ்கந்த, விநாயகர்களை ஸாமவேதிகள் ரிக்குடன் ஸாமாவைச் சேர்த்து, கானம் செய்து ஸந்தோஷ படுத்துகிறார்கள். அந்த முறை ஸாமவிதான ப்ராம்மணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது லிங்க புராணம், ராமாயணம், பாரதம் முதலியவைகளில் விநாயகர் உற்பத்தி, ஸ்கந்த உற்பத்தி கூறப்பட்டிருப்பது தெளிவு. பரமசிவன் கூட விக்னநிவாரணத்துக்கு விநாயகரை உபாஸித்து ஸகல கார்யங்களையும் செய்ய வேண்டுமென்ற விதியை அனுஸரித்து, த்ரிபுர ஸம்ஹாரத்துக்குப் புறப்படுமுன், விநாயக பூஜை செய்ததாகப் புராணம் கூறுகிறது.

சுலோகம் 99

ப்ரம்மா திகம் ஸகலமந்யதபோஹ்ய பும்ஸாம்
த்யாதவ்ய மேக மபிதாய சிவம் கரம் த்வாம் |
வக்தவ்ய மந்யதனபேக்ஷ்ய விமோக்ஷஹேதும்
ஆதர்வண : பரிஸமாப்திமுவாச வேத : ||
பதவுரை

ஆதர்வண: வேத :- அதர்வ வேதமானது, அந்யத் – மற்ற ப்ரம்மாதிகம் – பிரம்மா முதலிய ஸகலம் – எல்லா தேவ கணங்களையும், அபோஹ்ய – விட்டு விட்டு, பும்ஸாம் – ஜனங்களுக்கு – த்யாதவ்யம் – த்யானிக்கப்பட வேண்டியவராகவும், சிவம் கரம் – மங்களத்தை கொடுப்பவராகவும், த்வாம் – உம்மை, ஏகம் – ஒருவரையே, வக்தவ்யமந்யத் – சொல்லவேண்டிய மற்றெல்லாவற்றையும், அனபேக்ஷ்ய – ஸகாயமாக எதிர்பாராமலேயே, விமோக்ஷ ஹேதும் – மோக்ஷத்திற்குக் காரணமாகச் சொல்லிவிட்டு பரிஸமாப்திம் உவாச – இத்துடன் முடிவு என்றும் சொல்லி யிருக்கிறது. (ஸமாப்தா அதர்வ சிகா என்று முடிவு)

ஈச்வர த்யானம் ஒன்றே முக்திக்குக் காரணம் வேறு த்யானம் சொல்லவேண்டிய அவசிய மில்லையென்று முடிவடைந்துவிட்டது அதர்வவேதம். ஸ்காந்தம், காளிகாகண்டம் மற்ற புராணங்களிலும். அதர்வசிகை உபநிஷத்தின் அர்த்தம் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

சுலோகம் 100

யாமாமநந்தி தவ சங்கர ! தர்மதாராந்
அத்வர்யவஸ் ஸஹஜ ஸித்ததயா ஸ்வஸாரம் |
ஆதர்வணா யதுபஸ்ருஷ்டதயா பவந்தம்
த்யாதவ்ய மாஹுரபஹாய பிதாமஹாதீந் ||
பதவுரை

சங்கர – ஸுகத்தைக் கொடுக்கும் கடவுளே! தவ – உம்முடைய, தர்மதரரான் – தர்மபத்தினியான பார்வதியை அத்வர்யவ :- யஜுர்வேதிகள், ஸஹஜஸித்ததயா – இயற்கையாக அமைந்திருப்பதால், யாம் ஸ்வஸாரம் – ஸ்வஸா என்ற பதத்தால் கூறுகின்றனரோ – (இயற்கையாக அமைந்திருப்பதால். விட்டுப்பிரியாமல் இருப்பதால், அக்னினியும் சூடு சக்திபோல), பார்வதிதேவி, ஸ்வஸா என்று – தங்கை என்ற அர்த்தம் கொடுக்கும் பதத்தால். யஜுர்வேதத்தில் கூறப்படுகிறாள் – ஸஹஸ்வஸ்ரா அம்பிகயா – என்பது யஜுர்வேதம் ப்ரதி பூருஷம் ஏககபாலம் என்ற அநுவாகத்தில் ஹேருத்ரா! ஆகு என்ற வராகம், உமக்கு ஹவிர்பாகமான பசுவாகும்; அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இது ருத்ர பாகம் தங்கையான, ஸ்வத்ஸ்ஸித்த சக்தியான, விட்டுப்பிரியாத பார்வதி தேவியுடன் இந்த வராஹம் என்ற பசுபாகத்தைப் பெற்றுக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்பது யஜுர்வேத மந்திரத்தின் கருத்து.

ஆதர்வணா :- அதர்வ வேதிகள், யதுபஸ்ருஷ்டதயா – அந்தப் பார்வதியுடன் கூடியிருப்பதால் பிதாமகாதீனபஹாய – பிரம்மா முதலியவர்களை விட்டுவிட்டு, பவந்தம் – தங்களையே, த்யாதவ்யம் – முக்திக்காக த்யானம் செய்ய வேண்டுமென்று, ஆஹு :- சொல்லுகிறார்கள், தேவா யத்யக்ஞம் தந்வானா: என்று வேதத்தில் கூறப்பட்டிருப்பது இந்த ரகஸ்யம்.

வராக அவதாரம் பூண்ட புருஷனை யாகம் செய்ய யத்னித்த தேவர்கள் பசுவாக யூபத்தில் கட்டிப்ரோக்ஷித்தார்கள். அந்தப் பசுவால் ஸர்வேச்வரனை ஸாத்யர்களும் முனிவர்களும் ஆராதித்தார்கள் என்று கூறப்பட்டிருப்பது வேத ரகஸ்யம். ஆதலால் அத்வரராஜன் சிவன் என்பது ஸித்தம்.

அபித்வா சூரணோ நும: என்ற ஸாமகானாதாரமான ரிக், சராசரமான இந்த உலகத்துக்கு ஈசன் ஈசன சக்தியுடன் கூடியிருப்பதால் அந்வர்த்தமாகச் சொல்லப்படுகிறான், என்று நன்கு கூறுகிறது சக்தியில்லாமல் அணுவும் அசையாதன்றோ, ஆதலால், ஈசானசக்தியான உமாதேவியால், சங்கரன் மஹேசன் ஆகிறான் என்பது அபித்வா ரிக்கின் உட்கருத்தாகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s