சுயமரியாதையியக்கச் சூறாவளி நூல் குறித்து அவ்வப்போது கிடைத்த ஆன்றோர்களது அபிப்பிராயஙகள் சில


திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க
சுயமரியாதையியக்கச் சூறாவளி
-ஒரு சிவசேவகன்

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை
திருநெல்வேலி பேட்டை
——————————————————————————–
இந்நூல் குறித்து அவ்வப்போது கிடைத்த ஆன்றோர்களது அபிப்பிராயஙகள் சில:
——————————————————————————–
திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண பண்டார சந்நிதியவர்கள்
திருவாவடுதுறை ஆதீன கர்த்தர்
திருவாவடுதுறை மடம்
Camp-திருவிடைமருதூர்
24-3-1947
“மகாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி நமது து.இராஜரத்தின முதலியார் அவர்கட்குச் சர்வா பிஷ்டமும் சிந்தித மனோரத சித்தியும் உண்டாவதாக. தாங்கள் அன்புற்று விடுத்த ‘சுயமரியாதையிக்கச் சூறாவளி’ என்னும் நூலிலுள்ள பகுதிகள் இருபத்து நான்கனையும் நாம் நன்கு பார்வையிட்டோம். வேதத்திற் கூறப்பட்ட பஞ்சாக்கினி வித்தை, மிருதிகளிற் கூறப்பட்ட பீஜ §க்ஷத்திர வியவகாரம் முதலிய சுபக்ஷ விஷயங்களை மனத்திற் கொண்டு பூர்வ பக்ஷ¢களிடம் கேட்கும் ஆசங்கைமுறையும் நமக்கு மிக்க திருப்திகரமா யிருக்கின்றன. தாங்கள் எழுதிய பதிப்புரையில் நமது ஆதீன கவிசார்வபெளமர் கச்சியப்ப முனிவர் திருவாக்கை எடுத்தாண்டு பாரததேச முழுவதும் சைவஸ்தானமென்று குறித்திருப்பது நமக்குந் தனித்த மகிழ்ச்சியைத் தருகின்றது. தங்களை நாம் நேரிற் பார்த்து கலந்துகொள்ள விரும்புகிறபடியால், இவ்விடம் தாங்கள் கூடிய சீக்கிரம் வருகிற விவரத்திற்குத் தெரிவிக்க வேண்டியது”

——————————————————————————–
சிவஸ்ரீ வி. சிதம்பரராமலிங்க பிள்ளை அவர்கள்
ஆதீன வித்வான்,
துறைசை யாதீனம்,
திருவாவடுதுறை
24-3-1947
“அன்புள்ள ஐயா, உபய§க்ஷமம். தாங்கள் எனக்கு அன்புற்று விடுத்த ‘சுயமரியாதையியக்கச் சூறாவளி’ப் புத்தகம் கிடைத்தது, விஷயங்களைப் பார்வையிட்டு மிகுந்த மகிழ்ச்சி யடைகிறேன். நல்லூழ் வந்து தலைக்கூடுவார்க்கு அப்புத்தகம் சிவபெருமானது அருட் பிரசாதமே யென்பது எனது கருத்து. நமது சநாதன தர்ம பிரமாண நூல்களைக் கல்லாத – பொது அறிவு மாத்திரமுள்ள – சாதாரண – மக்கட்கு அந்நூல் நல்லறிவுச் சுடர்க் களஞ்சிய மாகும். அதனை ஆக்கிய ‘சிவசேவக’னுக்கு எனது ஆசி.”

——————————————————————————–
ஸ்ரீ திரு நாராயணையங்கா ரவர்கள்
‘செந்தமிழ்’
ஆசிரியர்,
மதுரைத் தமிழ்ச் சங்கம்,
மதுரை.
24-3-1947
“சிவநேசச் செல்வர், து.இராஜரத்தின முதலியாரவர்களுக்கு ஐயா, தாங்கள் அனுப்பிய ‘சுயமரியாதையியக்கச் சூறாவளி’ யை முழுதும் படித்தேன். அதனுள் அவ்வியக்கத்தின் கொள்கைகள் பலவும் அநுவதிக்கப் பட்டுப் பற்பல ஆசங்கைகளால் மறுக்கப்படுகின்றன. அநுவாதக் கொள்கைகள், இந்நாட்டில் தொன்று தொட்டு வழங்கும் சதாசாரங்களை அழித்து, துராசாரங்களை விளைத்துக் குடும்ப வாழ்க்கையைக் குலைத்து உறவு முறைகளை யுலைத்து, அன்பு, ஆர்வம், நண்பு, செல்வம், சால்பு, குடிமை, பெருமை, மேன்மை முதலிய மக்கட் பண்புகளை மாற்றி, வறுமை, தனிமை, மாறா அடிமை, முதலிய இன்னாமைக் கிலக்காக்கி உறுதிப் பொருள்களை யொழித்துப் பலகேடு விளைத்தற் குரியன. அவற்றை மறுக்கும் ஆசங்கை பலவும் நூலொடு பழகிய நுண்ணுணர்வும் ஆன்றோ ரொழுக்கமும் உலக வழக்கமும் கொண்டு எழுதப்பட்டன. அவையெல்லாம் ஆத்துமஞான மில்லாத நாத்திகர் நெஞ்சிற் புகுதல் அரிதே. ஆயினும், பொது நோக்குடைய மேன் மக்கள் நெஞ்சில் அவ்வியக்கத்தின் துராசாரத் துரால் படியாமல் துரக்கு மென்பது ஒருதலை இக்காலத்தில் இத்தகைய புத்தகங்கள் பல வெளிவரல் வேண்டும்.— அக்கடமையைத் தாங்களும் தங்கள் நண்பர் சிவசேவகரும் செய்திருப்பதற்கு ஆத்திக ரனைவரும் நன்றி பாராட்டும் கடமையுடையராவர்.”

——————————————————————————–
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகள்
கும்பகோணம் முகாம்
உத்தர மேரூர்
16-4-1947
தமிழ் நாட்டின் இன்றைய நிலைமையில் மக்களுக்கு இன்றியமையாததும் விலை மதிப்புக்கடாங்காததுமான ஒரு நூலுண்டெனில், அது உத்திர மேரூர் சிவசேவகனின் “சூறாவளி” நூலே.

——————————————————————————–
சிவக்கவிமணி கே.சுப்பிரமணிய முதலியாரவர்கள் B.A.,F.M.U.
பெரிய புராண உரையாசிரியர்,
சேக்கிழார் நிலயம்,
கோயம்புத்தூர்.
27-12-1947
“சுயமரியாதையிக்கச் சூறாவளி” என்ற நூல் வரப் பெற்றுப் படித்து இன்புற்றேன். சுயமரியாதைப் பெயர் பூண்ட ஒரு கூட்டத்தினர் பயிருக்குக் களை போலத் தோன்றிக் கடவுள் நம்பிக்கை, பெரியோர் முது மொழி பேணுதல், ஆன்ற நல்லொழுக்கம் முதலியவற்றைக் கெடுத்துச் சிறார்களையும் பள்ளிப் பிள்ளைகளையும் கேடுறுத்தி வருகின்றனர். அவர்களது பேச்சுக்களும் எழுத்துக்களும் பாமர ஜனங்களுள் மயக்கத்தை விளைக்கின்றன. இந்த களைப்பூண்டுகளின் தன்மையினை உள்ளவாறு எடுத்துக்காட்டு முகத்தால் மக்கள் கேடுறா வண்ணம் செய்தற்கு எழுந்தது இந்நூல். இது காலத்துக்குக் கேற்ற பெருந் தொண்டாகும். இதனைச் செய்தவர் உத்தரமேரூர் ‘சிவசேவகன்’ என்பார். இதனூள் அக்கூட்டத்தாரது கொள்கைகளை 24 வகைகளாக வகுத்து ஒவ்வொன்றிலும் அவரது கொள்கைகளை அநுவதித்துத் தலைப்பெய்து பின் அதனை மறுக்கும் வினாக்களை நிகழ்த்தி அவறுக்கு விடை சொல்லாவாகவே அக்கொள்கைகள் மறுக்கப்பட்டமை காட்டியுள்ளார். இக்கேள்விகளின் மூலம் அவர்களது கொள்கைகளின் அசம்பாவிதங்கள் யாவரும் தெரிந்து கொள்ளும்படி இச்சூறாவளி அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் இதனைத் தற்புகழுக்கோ அன்றி வேறு ஊதியமோ கருதியியற்றினா ரல்லர். உலக மக்களின் நலம் கருதியே ஆக்கியுள்ளார். இவர்கள் இது போலவே பல நல்ல நூல்களை இயற்றி உலகுக்கு உதவி நீடு வாழ்வா ராக”

——————————————————————————–
திரு. திருவாசகம் கே.எம். பாலசுப்பிரமணியம்¢’ எ
27-12-1947
“நயம் அறியாது நம் சமயத்தைத் தாக்கி நலிவுறுத்தும் கூட்டத்தினர்க்கு—இடியே றன்னச் ‘சுயமரியாதை யியக்கச் சூறாவளி’ எனும் நூலைக் கண்டு மகிழ்ந்தேன். ‘தட்டிப் பேச ஆளில்லை யெனின் தம்பி சண்டப் பிரசண்டன்’ என்னும் பழமொழிக் கேற்பத் திரியும் தாந்தோன்றிகளுக்குத் தகுந்ததோர் விடைக்களஞ்சியமும், வினாச் சுரங்கமும் ஆகும் இந்நூல். இதன் ஆசிரியர் திரு. ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை அவர்களின் அறிவு செறிந்த ஆண்மைத் தொண்டை, சைவப்பற்றைப் பாராட்டுகிறேன்.”

——————————————————————————–
திரு.கிருபானந்தவாரியவர்கள்
ஆசிரியர்,
‘திருப்புகழமிர்தம்’
சங்கரநயினார்கோவில்
16-7-1948
நேரிசை வெண்பா
“ஈறாஞ் சுயமரியாதை யியக்கத்தின்
சூறா வளியென்னுந் தூய நூல் – வீறாய்ச்
சிவசே வகனென்னுஞ் செம்மலினி தீந்தான்
தவசே வடிவாகத் தான்”

——————————————————————————–
திரு. ஜி.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் M.A.B.L.
தமிழ்த்துறை யாராய்ச்சிப் பேராசிரியர்,
அண்ணாமலை பல்கலைக் கழகம்,
அண்ணாமலை நகர்.
3-8-1953
“பகுத்தறிவின் பெயரால் நாடு பாழ்பட்டு அறியாமை விஞ்சிச் செருக்குத் தலையெடுத்துக் களிக்கும் இந்நாளில், “சுயமரியாதையிக்கச் சூறாவளி” என்னும் இந்நூல் யாவரும் படித்து அறிய வேண்டிய தொன்றாகும். அது சூறாவளியாய் நாத்திகத்தைச் சுழித்தெறியும்; ஆனால் தென்றலாய்க் குளிர்ந்து தென்றமிழ் நெறியினை நின்றுலவச் செய்யும். இக்காலத்து நம் நாட்டு இளைஞர்களுக்கு எழக்கூடிய பலவகை ஐயங்களையும் தக்க தடை விடைகளால் தீர்த்து வைக்கும் நோக்குடனேயே நல்ல முறையில் அது இயற்றப்பட்டிருக்கிறது. அதனை இயற்றித் தந்த பெருமை திரு.ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை அவர்களைச் சேர்ந்ததாகும். அவர்கள் உண்மையிலேயே ஒரு நல்ல சிவசேவகர். திருநீற்று நெறியினை வளர்க்கும் சைவ சீலமுடையவர்கள். பல இடங்களுக்கும் சென்று சித்தாந்த சொற்பொழிவுகள் ஆற்றியும், பாடங்கள் கற்றுக்கொடுத்தும் அவர்கள் சிவநெறி வளர்ச்சிக்குச் சிறந்த தொண்டாற்றி வருகிறார்கள். இப்பொழுது சங்கரநயினார்கோவில் சைவ சித்தாந்த சபையில் துணைத்தலைவராய்ப் பொறுப்பேற்றுச் சைவமும் தமிழும் ஓங்கி வளர அரும் பாடுபட்டு வருகிறார்கள். ‘அளப்பில் கீதஞ்சொன்னார்க்கடிகள் தாம் அருளுமாறே” என்பதற்கிணங்க கோமதியம்மையின் திருவருள் ஒன்றே அவர்களை இப்பொழுது தாங்கி வருகிறது. அவர்கள் பண்பாட்டின் உயர்வினையும், கசடற்ற கல்வி காட்டியினையும், சலியாத சமயப் பற்றினையும், அறிவின் அகலத்தையும் அவர்களோடு பழகினவர்கள் நன்கு அறிவார்கள். அவர்களை விழித்துக் கண்டு பாராட்டி போற்ற வேண்டியது சைவ வுலகத்தின் கடமையாகும்.”

——————————————————————————–
——————————————————————————–
——————————————————————————–
சுயமரியாதையியக்கச் சூறாவளி
சுயமரியாதையியக்க குழாத்தினர்காள்!
‘சுயமரியதை யியக்கச் சூறாவளி’ யென்னும் இந்நூலில் உம் இயக்கக் கொள்கைகள் சிலவற்றை யாம் வரிசையாக அநுவதித்துக் கொண்டு அவற்றுள் ஒவ்வொன்றையும் பலவாறு ஆசங்கித்துள்ளேம். நீவிர் அவ்வாசங்கைகளை முறையே அநுவதித்துக் கொண்டு ஒவ்வொன்றற்குஞ் சமாதானங் கூறுவீராக. அறிவுடை யுலகிற்கு அவ்வியக்கம் இயையுமாறு அச்சமாதானங்கள் அறிவும் முரணாமையும் அளவி வெளிப்படுக. சமாதானங்கள் தோன்றாதொழியினும், அறியாமை, அழுக்காறு, வெகுளி, நிந்தை, பராமுகம் முதலியனவே செறிந்த சமாதானப் போலிகள் தோன்றினும் உம் சுயமரியாதை யியக்கம் எம் சூறாவளியின் முன் சிறுபுன் துரும்பாயிடுதல் சத்தியம்.

1. நாத்திகம்
2. பகுத்தறிவு
3. பொதுவுடைமை
4. சுதந்திரம்
5. சகோதரபாவம்
6. சாதி
7. தீண்டாமை
8. இருபாலாரின் சமத்துவம்
9. கர்ப்பத்தடை
10. மகளுக்குச் சொத்துரிமை
11. மனைவிக்குச் சொத்துரிமை
12. சுவீகாரம்
13. காதல் மணம்
14. அறுதலி மணம்
15. பல மணம்
16. கலப்பு மணம்
17. ஒருகுல மணம்
18. முது மணம்
19. இள மணம்
20. சுயமரியாதை யியக்க மணம்
21. மண முறை
22. கற்பு
23. கலியாணம்
24. போக்கியம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s