சைவ வைணவர்களுக்கெதிரான ஜிஹாட்- உண்மை சரித்திரம் பாகம் 2

சைவ வைணவ சந்நியாசிகள் போல் வேடமிட்டு,திரிலோசனபாலனை ஏமாற்றி,கடத்தி,கொலை செய்த முஸ்லிம்கள் :

லாகூர் போரில்,சூழ்ச்சியை கையாண்டு வெற்றி பெற்ற முஸ்லிம்கள், இந்தியாவிற்குள் இன்னும் ஆழமாக சென்றனர்.தனது தந்தைஜயபாலனை போலவே,முஸ்ளிம்களின் சூழ்ச்சியால்,ஆனந்தபாலன் வீர கதி அடைந்த வரலாற்றை,மேலே கண்டோம்.இவர்களுக்கு பிறகு,முஸ்லிம்களுக்கெதிரான போராட்டத்தை,ஆனந்தபாலனின் மகன்,திரிலோசணபாலன் தொடர்ந்தான்.சாஹியா சாம்ராஜ்யத்தின் மன்னனாக முடி சூட்டப்பட்டபோது,திரிலோசணபாலனுக்கு 17 வயதே.முன்பு, யமுனை ஆற்றங்கரையிலிருது குப்ஹா வரை பரவி இருந்த ஷாஹியா சாம்ராஜ்ஜிம் ,தற்போது சுருங்கி விட்டது. அதன் பெருமைகளெல்லாம் பழங்கதைகளாகிவிட்டன.முஸ்லிம்களுக்கெதிராக காய்களை நகர்த்தினான் திரிலோசணபாலன்.முதலில்,தனது தலை நகரத்தை,லாகூரிலிருந்து கங்க்ராவுக்கு மாற்றினான் (இன்றைய ஹிமாசல பிரதேசத்திலுள்ளது).கோட்டைகளால் காக்கப்பட்டது பாதுகாப்பாக திகழ்ந்தது கங்க்ரா.சுருங்கி விட்ட தனது சாம்ராஜ்ஜியத்தின் பலத்தை,மறுபடியும் ஒன்று சேர்த்தான் திரிலோசணபாலன்.அன்று ஹெராத்திலிருந்து ஹரித்துவார் வரை பரவி இருந்த ஷாஹியா சாம்ராஜ்ஜியம்,தற்போது அதன் முந்தைய நில பரப்பில், ஐந்தில் ஒரு பகுதியாக சுருங்கிவிட்டது.முன்பு ஷாஹியாவின் இருதயமாக திகழ்ந்த மேற்கு மாகாணம்,தற்போது,அங்கிருந்து,ஆயிரம் மைல்கள் அப்பாலுள்ள,இமயமலையின் அடிவாரத்திலுள்ள ஷிவாலிக்கிலுள்ள கல்காவிற்கு, மாற்றப்பட்டது.ஷாஹியாவின் சாம்ராஜ்ஜிய பலம் சுருங்கி விட்டதால்,இந்தியாவிற்குள் இன்னும் ஆழமாக வரும் முஸ்லிம்களை நிறுத்த முடியவில்லை.ஆனால்,திரிலோசணபாலன்,தனது பாட்டன் மற்றும் தந்தையின் வழியை பின்பற்றி, முஸ்லிம்களை பஞ்சாப் மற்றும் உபகனாஸ்தானிலிருந்தும் முஸ்லிம்களை விரட்டியடிக்க, காஷ்யப்பமேரு(காஷ்மிர்) ராஜாவுடனும் திபெத் ராஜாவுடனும் இணைந்து உடன்படிக்கையை வைத்துக்கொண்டான்.

சபுக்தகினின் மகன்,கஜினி முகமது,திரிலோசணின் இந்த முயற்சிகளை ஆரம்பக் காலத்திலேயே சிதைத்துவிட வேண்டுமென எண்ணினான்.சந்நியாசிகளைப் போல் வேடமிட்டிருந்த தனது வீரர்களை திரிலோசணபாலனிடம் அனுப்பினான்.இந்த, சந்நியாசிகளை போல் வெடமணிந்திருந்த முஸ்லிம் வீரர்கள், கங்க்ராவை அடைந்து,தாங்கள் குப்ஹாவிலிருந்து வந்ததாகவும்,குப்ஹாவை ஆண்ட ராஜ பரம்பரையில் உதித்த இந்த திரிலோசணுக்கு ஒரு கடிதத்தை கொடுக்க வந்ததாகவும் கூறி,கோட்டை காவலை கடந்தார்கள். திரிலோசணுடன் தனியாக இருக்கும் போது,அவனை இந்த முஸ்லிம் வீரர்கள் சுற்றி வளைத்து,அவன் தலையை கொய்ந்து எடுத்துக்கொண்டு சென்றார்கள்.அவனின் தலையில்லா உடலின் மேல் ஒரு கடிதத்தை வைத்துவிட்டு சென்றார்கள். ” அல்லாவின் வீரர்களை தடுப்பவர்களை,இஸ்லாம் அழித்துவிடும்” என்பதே அக்கடிதத்தின் கருத்து.சில நாட்கள் கழித்து,முஸ்லிம் படையினர்,கங்கரா கோட்டையை கைபற்றி,முந்தைய பெரிய ஷாஹியா சாம்ராஜ்ஜத்தின் பலனாக குவிந்திருந்த விலைமதிப்புயர்ந்த சொத்துக்களையும் பொருட்களையும் கொள்ளையடித்தனர். இந்த சம்பவம் கிபி 1020இல் நடந்தது.சில நூற்றாண்டு கழித்து,ஷாஹியா (இந்து -ஷாஹிக்கள்) சாம்ராஜ்ஜமென்று ஒன்று இருந்ததா என்று மக்கள் சந்தேகப்படும் அளவிற்கு,ஷாஹியா சாம்ராஜ்ஜியம் மூன்று தலைமுறைகளாக முஸ்லிம்களுக்கெதிராக போராடி,40 ஆண்டுகளுக்குள் முழுமையாக அழிந்து போனது. 3ஆம் நூற்றாண்டில் குஷாணர்களின் காலத்திலிருந்து, இந்தியாவின் வட மேற்கு எல்லைக்கு காவலாக இருந்த ஷாஹியா சாம்ராஜ்ஜியத்தின் பெயர்,கால போக்கில் மண்ணோடு மண்ணாக போனது.இன்று,ஷாஹியா சாம்ராஜ்ஜியத்தின் நினைவுச் சின்னமாக இருப்பது, சுவர்கள் முழுவதும் சுற்றி,வெள்ளி காசுகளால் பொரிக்கப்பட்ட கங்க்ரா கோட்டையே.

ஷாஹியா சாம்ராஜ்ஜியத்தின் மிச்சமுள்ள வீரர்கள், சோர்வுற்று,மன தளர்ந்து,இமையமலைக்குச் சென்று,அங்கு ஆடு மேய்ப்பவர்களாகினர்.இவர்கள் கடிக்கள் என்று அழைக்கப்படலாயினர். இந்த ஆடுமேய்க்கும் தொழிலை கடிக்கள் இன்று செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக,திரிலோசணின் இறப்பிற்கு பிறகு,பஞ்சாபையும் ஆப்கானிஸ்தானையும் ஆண்ட இந்து ராஜ்யம் ஒரு முடிவுக்கு வந்தது.800 ஆண்குகளுக்கு அப்புறம்,பஞ்சாபை,18ஆம் நூற்றாண்கில்,மஹாராஜ ரஞ்சித் சிங்க என்ற சீக்கிய மன்னர் ஆட்சி புரிந்தார்.800 ஆண்டுகள் இடைவேளையில், ஆப்கானிஸ்தான்,பாக்தூனிஸ்தான் மற்றும் மேற்கு பஞ்சாபை சேர்ந்த பெரும்பான்மையான இந்துக்கள்,வாளால் முனையில்,வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டனர்.ஆதனால் தான், ஆப்கானிஸ்தான்,மேற்கு பஞ்சாப்பில் இன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர்.

சோம நாதபுரத்தை கொள்ளையடித்த கொள்ளையன் கஜினி முகமது :

ஷாஹியாக்களின் தோல்வியால்,இந்தியாவை கொள்ளையடிப்பது முஸ்லிம்களுக்கு சுலபமான காரியமாக ஆகியது.கஜினி முகமது இந்தியாவை பல தடவை தாக்கி கொள்ளையடித்தான். ஒவ்வொரு,ஆண்டும் சோமநாதர் கோவிலையும், பலிதனா,தானேஸ்வரம்,மதுரா,கான்னாவுஜ் மற்றும் கஜுராஜோவிலுள்ள புனித ஸ்தலங்களை முகமது கஜினி கொள்ளையடித்த துயர சமபவங்களை நினைவுக்கூர்ந்து,இன்றும் இந்துக்கள் இரத்தக் கண்ணீர் விடுகிறார்கள். கஜினியின் இந்த தாக்குதல்களின் முக்கிய நோக்கம், இந்தியாவில் குவிந்திருந்த செல்வங்கலை கொள்ளையடிப்பதும் இந்துக்களை ,பக்தாத் (baghdad), மற்றும் பிற இஸ்லாமிய நகரங்களிலுள்ள சந்தைகளில்,அடிமைகளாக விற்பததுமே ஆகும். கைதிகளாக கஜினியால் பிடிக்கப்பட்ட இந்துக்கள், இமயமலையின் மேற்கிற்கு,நடந்தே கொண்டு செல்லப்பட்டனர். பல இந்துக்களின்,தங்களின் எஜமானர்களின் கொடுமைகளை சகிக்க முடியாமல், பயணத்தின் போதே இறந்தனர்.இந்துக்களின் பெரிய அளவில் இப்படி மடிந்ததை நினைவுக் கூறவே,மேற்கு இமயமலை தொடர்ச்சிகளை “ஹிந்து குஷ்” ,அதாவது இந்துக்களை கொன்றவர்கள் ,என்று அழைத்தனர். ‘ குஷ்’ என்றால் பாரசீக மொழியில் ‘கொல்லுதல்’ என்று அர்த்தம்.

கிபி 1033இல்,பஹ்ரைக் போரில்(battale of bahraic) ,முதன்முறையாக,முஸ்லிம்களுக்கு ஓர் உறுதியான பெரும் பதிலடியை கொடுத்த இந்துக்கள் :

பஹ்ரைக்கில் (இன்றைய உத்தர பிரதேசத்திலுள்ளது),கிபி 1033இல்,இந்துக்கள் முஸ்லிம்களுக்கெதிராக ஒரு மாபெரும் வெற்றியை பதிவு செய்தனர்.இந்த முறை,கஜினி முகமதின் மகன்,மாசூட் கஜினி,இந்தியாவை ஆக்கிரமிக்க ஒரு மாபெரும் படையுடன் வந்தான்.ஆனால்,தனது தந்தை போல்,ஒவ்வொரு ஆண்டும்,கொள்ளையடித்து,இந்தியாவை தற்காலிகமாக ஆக்கிரமிக்காமல்,இந்தியா முழுவதையும் ஆக்கிரமித்து,ஒரு நிலையான முஸ்லிம் ஆட்சியை கொண்டு வர எண்ணினான்.இந்த எண்ணத்துடன்,தனது பெரும் படையை திரட்டிக் கொண்டு,இந்தியாவிற்குள் ஆழமாக புகுந்து,கங்கை பள்ளத்தாக்கை அடைந்து,பஹ்ரைக்கில்(இன்றைய தெற்கு உத்திர பிரதேசம்) முகாமிட்டிருந்தான். அங்கிருந்து,இந்து ராஜாக்களுக்கு ஓலைகளை அனுப்பினான்.” சரணடைந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பதே அவ்வோலைகளின் கருத்து.இந்து போர் தர்மப்படி,இந்து ராஜாக்கள் . மாசூட் கஜினிக்கு ஒரு ஓலையை அனுப்பி,இந்த நிலம் தங்களுடையாதலால்,மாசூட் கஜினி தன்னுடைய படைடுயுடன் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டுமென நயமாக கூறினார்கள்.ஆனால்,மாசூட் கஜினியோ,அவர்களுக்கு ,பதிலளிக்கும் விதமாக ஓர் ஓலையை அனுப்பி,எல்லா நிலமும் ,குஹ்டாவினுடையது (பாரசீகத்தில் அல்லாவை குறிக்கிறது) ஆதலால், அவ்விடத்தை விட்டு வெளியேற முடியாதென்றும், குஹ்டாவையும் இஸ்லாத்தையும் அறியாதவர்களை இஸ்லாத்துக்கு மாற்றுவது தன்னுடைய புனித கடமையென்றும் கூறினான்.இந்த அந்நியாய பேச்சின் விளைவாக,இந்து படையினர்,முஸ்லிம்களை போரில் சந்தித்தனர்.இந்த பஹ்ரைக் போரில்,இந்துக்கள் படிப்படியாக முஸ்லிம்களை அழித்தனர்.இதைக் கண்ட ,மாசூட் கஜினி,இந்தியா முழுவதையும் ஆக்கிரமித்து நிலையான ஒரு முஸ்லிம் ஆட்சியை கொண்டுவர எண்ணிய,தன்னுடைய பகல் கனவு ,அதன் முடிவை சந்திக்கும் நிலையிலிருப்பதை கண்டு வருத்தமடைந்தான். இந்த கோரமான போர்,கிபி 1033இல்,ஜூன் மாதத்தில் நடந்தது.. இந்த போரில்,இரு தரப்பினரும் யாரையும் அகதிகளாகவோ,கைதிகளாகவோ எடுக்காமல், கொல்வது அல்லது மடிவது என்ற கொள்கையை கடைபிடித்தனர்.இந்த போரில்,முஸ்லிம் படை முழுவதும் அழிய,இந்து படையில் பலர் வீர மரணம் அடைந்தனர்.

ஆனால்,இந்த போரில் கவனிக்கத் தக்க ஒரு விஷயமென்னவென்றால்,இப்போருக்கு 160 பிறகு, பிரித்திவி ராஜனால் கடைபிடிக்கப்பட்ட,பகைவனை மனிக்கும் மன்ப்பான்மை,இந்த போரில் கடைபிடிக்கப்படவில்லை. இந்த போர்,கிபி 1033,ஜூன் 14இல் முடிந்தது.இந்த போரின் இறுதியில்,முஸ்லிம் படை முழுவதும் அதன் தளபதியும் மாண்டனர்.இப்படையின் தளபதி,காஜி மியான் மசூட்டை (மாசூட் கஜினி) நினைவுக் கூற,பஹ்ரைக்கில் அவனுக்கு ஒரு சமாதி நிறுவப்பட்டது.இந்த கயவனை,இன்று முஸ்லிம்கள் காஜியாகவும் (வீரன்) புனிதனாகவும் கொண்டாடுகிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும்,இந்த கல்லறைக்கு, இஸ்லாமிய கூட்டு பிராத்தனை நடத்தப்படுகிறது.ஆனால்,இந்த கயவனை எதிர்த்து போராடி,இந்தியாவுக்காக தங்களின் உயிரை தியாகம் செய்த இந்துக்களை யாரும் நினைவுக் கூறுவதில்லை.இந்துக்களில் சில மூடர்களும்,இந்த கயவனின் கல்லறை வணங்கி,பல வரங்களை கேட்கிறார்கள்.

இந்துக்களை சித்திரவதை செய்த முகமது கௌரி(கோரி) /முகமது-இப்னு-சாம், இஸ்லாத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்ட இந்துக்களின் வம்சத்தவன் :

கஜினியிலுள்ள கஜ்னாவிட்டுக்களின்(ghaznavid) ஆட்சியை கவிழ்த்து விட்டு,ஆப்கானிஸ்தானிலுள்ள கோரி என்ற இடத்தின் தலைவன்,ஆட்சி புரிந்த போது, இந்தியாவின் மீது,இன்னொரு முகமதிய தாக்குதல்,கிபி 1187 இல் நடந்தது. இந்த கௌரிக்கள் அல்லது முஸ்லிம்களால் கோரி என்று அழைக்கப்படுபவர்கள், முன்பு மாடு மேய்பவர்களாகவும்,ஷாஹியா சாம்ராஜ்ஜியட்தின் குடிமக்களாகவும் இருந்தனர்.ஆனால்,ஆப்கானிஸ்தானை ஆண்ட,ஷாஹியா ராஜ்ஜியத்தை,கிபி 980இல் அழித்த கஜ்னாவிட்டுக்கள் (முகமது கஜினியின் பரம்பரை) ,ஷாஹியா ராஜ்ஜியத்தின் குடிமக்களையும் வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மதம் மாற்றினர்.ஆனால்,200 ஆண்டுகள் கழித்து,கிபி 1187இல்,இஸ்லாத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்ட இந்த இந்துக்கள்,மற்ற இதர முஸ்லிம்களை போலவே சிந்திக்கவும் செயல்படவுமிருந்தனர்,தங்களின் பூர்வ சமயத்தையும் கலாச்சாரத்தையும் மறந்தனர்.ஆனால்,இவர்களின் அடைப் பெயர்களான “கௌரி”,இவர்களின் பூர்வ காலத்து தொழிலை நமக்கு புலப்படுத்துகிறது,அதாவது மாடு மேய்க்கும் தொழில்.(கௌரி என்ற சொல் “கௌ” என்று மாட்டை சுட்டிக் காட்டும் சம்ஸ்கிருத சொல்லிலிருந்து வந்தது).

கஜ்னாவிட்டுக்களின் ஆட்சியை கவிழ்த்து, தங்களை அவர்கள் சித்திரவதை செய்ததற்காக பழி வாங்கி தீர்த்துக் கொண்டனர் இந்த கௌரிக்கள்.ஆனால்,ஆப்கானிஸ்தானில் கௌரி/கோரி ராஜ்யத்தை நிருவியவுடன்,இந்த கௌரிக்கள்,தங்களின் மூதாதையர்களின் சமயத்தையும் கலாச்சாரத்தையும் மறந்து, மற்ற இதர முஸ்லிம்களைப் போல் , இந்துக்களை காட்டுமிராண்டித்தனமாக வதை செய்பவர்களாக உருவெடுத்தனர்.

கிபி 1187இல்,முகமது கோரி படு தோல்வியடைந்து ஓடச் செய்த அனஹில்வதத்தை ஆண்ட சோலங்கிகள் :

பஞ்சாபின் கஜ்னாவிட் ஆளுனனை தோற்கடித்து விட்ட பிறகு,இந்தியாவை ஆக்கிரமிக்க முகமது கோரி திட்டமிட்டான்.ஆனால் அவனின் இக்கனவுக்கு முட்டுக்கட்டைகளாக மூன்று பெரும் இந்து ராஜ்யங்கள் திகழ்ந்தன- குஜராத்திலுள்ள ஆனஹில்வதத்தை ஆண்டுக்கொண்டிருந்த சோலங்கிகள் (சாலுக்கியர்கள்), தில்லி,அஜ்மீர்,சம்பாரை ஆண்டுக் கொண்டிருந்த சாமணர்கள் (சௌஹர்கள்) மற்றும் கன்னௌஜ்ஜை (உத்திர பிரதேசம்) ஆண்டுக் கொண்டிருந்த ரதொட்டுக்கள் (கஹட்வள்ளர்கள்).

சிந்து மாகாணத்தை ஆண்டுக் கொண்டிருந்த முஸ்லிம் ஆளுநனுடம் உடன்படிக்கை வைத்துக் கொண்டு,கிபி 1187இல்,குஜராத்தின் மீது முகமது கோரி தாக்குதல் நடத்தினான்.ஆனால், அனஹில்வதத்தை ஆண்டுக் கொண்டிருந்த சோலங்ககிகள்(சாலுக்கியர்கள்) அவனை,அற்புத மலையின் அடிவாரத்தில் நடந்த போரில் தோர்கடித்து,அவனை தார் பாலைவனம் வழியாக ஓடுமாறு துரத்தி விட்டனர்.இதன் வழி, குஜராத்தின் சோலங்கிகள்,முஸ்லிம் தாக்குதலை முறியடித்த இந்துக்களின் வீரத்திற்கு மறுபடியும் மெருகூட்டினர். ஆயோதியில்,பாபர் என்ற இஸ்லாமிய தீவிரவாதி,அங்குள்ள ராமன் கோவிலை உடைத்தான்.இந்த விவகாரம் தான் இன்று ராம ஜன்மபூமி என்ற பெரும் விவகாரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.பாபரால் தொடக்கிவைக்கப்பட்ட சாம்ராஜ்ஜியத்தின் மன்னர்கள் ,பல சைவ வைணவ கோவில்களை இடித்துள்ளனர்.உதாரணத்துக்கு,வாரணாசி(காசி), அயோத்தியா,மதுரா மற்றும் பல புனித ஸ்தலங்களிலுள்ள கோவில்களை உடைத்த ஔரங்கசகேப்..இந்த பாபரின் சந்ததியினர்தான்,தங்களிடம் சரணடைந்த இந்து வீரர்களை காட்டுமிராண்டித் தனமாக கொன்றவர்கள்.உதாரணத்துக்கு, சித்தோட்டை ஆண்டுக் கொண்டிருந்த அக்பரிடம் சரணடைந்த 30 000 ராஜபுத்திரர்களை (ராஜ்புத்) ,அக்பர் கொன்று குவித்தான். இந்த காட்டுமிராண்டி அக்பரைத் தான் இன்றைய இந்து விரோத,முகமதிய கைப்பிள்ளையான இந்திய திரையுலகம் மிதவாத முஸ்லிமாகவும்,நற்பண்புடையவனாகவும் வீரனாகவும் சித்தரிக்கிறது.

Advertisements

One thought on “சைவ வைணவர்களுக்கெதிரான ஜிஹாட்- உண்மை சரித்திரம் பாகம் 2

  1. அரேபிய கடையர்களிடமிருந்து பழைய சரித்திரத்தில் இருந்து நாம் சரியான பாடம் கற்கவில்லை .ரம்சான் கொண்டாட்டங்களில் இந்துக்கள் கலந்து கொள்வது மானங் கெட்டதனம் ஆகும். அரேபிய புத்தகம்குரானும் அரேபியர் முகம்மதுவும் குறைந்தது 1கோடி இந்துக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதற்கு காரணம். என்பதை அறிந்து இந்துக்கள் வாழ வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s