அபிரகாமிய காமுகர்கள்-பாகம் 1 ( போப்பாண்டவர்களின் காமக் களியாட்டங்கள் )

போப்பாண்டவர்களின் அயோக்கியத்தனங்கள்

சைவம்,வைணவம் போன்ற,நான்மறையை அடிப்படையாகக் கொண்ட சமயங்கள்தான் உலகிலேயே மிகவும் தாக்கப்படும் சமயங்களாக இருந்து வருகின்றன.இந்த தாக்குதல்கள் நேற்றோ இன்றோ வந்ததல்ல,பல்லாயிர வருஷங்களாக நடந்து வருகின்றன..கிமு 1800 அளவிலேயே,வைதீக சமயங்களை பௌத்தமும் சமணமும் தாக்கின…அதன் விளைவு,இன்று இந்தியாவில் இவ்விரு சமயங்களும் அழிந்து போன.அது நிற்க. சைவத்தையும் வைணவத்தையும், திராவிட நாஸ்திகர்கள்,முகமதியர்கள் மற்றும் கிருத்துவர்கள் பல சூழ்ச்சிகளால் தாக்குகின்றனர்.தாத்தாச்சாரியாரின் புளுகு மூட்டைகளான “எங்கே போகிறது இந்து மதம்”,”சடங்குகளின் கதை” போன்ற நூல்களை இந்த அவைதீக சமயங்கள் ஆதாரமாகக் கொண்டு,நம் சமயங்களை தாக்குகின்றனர்.அது மட்டுமின்றி, ஈவேரா ,அண்ணா,வீரமணி போன்ற சமய அறிவில்லாத,போலி பகுத்தறிவாதிகளின் நூல்களைக் கொண்டும் நம் சமயங்களை தாக்கி கேலி செய்கின்றனர்.தற்போழுது ஒரு புதிய வழிமுறையையும் அவைதீக சமய குண்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.அது தான் ,’சாமியார்கள்’ மற்றும் ‘அர்ச்சகர்களின்’ காம லீலைகள்.உதாரணத்திற்கு,ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள்,நித்தியானந்தா,பிரேமானந்தா மற்றும் அர்ச்சகன் தேவ நாதன். முதலில் சாமியார்களைப் பார்ப்போம்.ஜயேந்திர சரஸ்வதி என்பவர் 2000 வருஷங்களுக்கு மேலாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அத்துவைத மடமான,காஞ்சி மடத்து பீடாதிபதி.இவரை,சுவர்ணமல்யா மற்றும் அணுராதா ரமணன் செய்த புகார் காரணமாக போலிசார்கள் கைது செய்தனர்.அன்றிலிருந்து,இவரை சுட்டிக் காட்டி,நமது சமயத்தை,காம லீலைகளின் ராஜ்யமென அவைதீக குண்டர்கள் கெலி செய்கின்றனர்.ஆனால்,போலிசார் செய்த விசாரனையில்,அணுராதா மற்றும் சுவர்ணமல்யா போன்ற வேசிகள்,முக்கிய புள்ளிகலிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு,அவர் மேல் பொய் வழக்கு பதிந்ததாக தெரிய வந்துள்ளது.யார் அவர்களுக்கு பணத்தை கொடுத்தது,மற்றும்,அப்புகாரின் பொய்மையை பற்றி நாம் வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்.ஆக,ஜயேந்திர சரஸ்வதி எந்த பாலியல் வன்முறையையும் செய்யவில்லை,இந்த காம லீலை பட்டியலிலிருந்து அவரை,இனி விலக்கி விடுவோம்.அடுத்தது,நித்தியானந்தாவை பார்ப்போம். இவர் முதலில் யார்,இவர் எந்த சமயத்தை சார்ந்தவர்,இதெல்லாவற்றையும்விட இவர் சாமியாரா ? இவரை சுட்டிக் காட்டி,நம் சமயங்களை தாக்கும் அவைதிகளுக்கு சில் கேள்விகள்,இவர் எந்த சமயத்தவர்,சைவமா,வைணவமா அல்லது அத்துவைதமா ?சைவமென்றால்,சைவ சித்தாந்தமா,காஷ்மிர் சைவமா அல்லது வீர சைவமா ? வைணவமென்றால்,இவர் விஷிட்டாத்வைதத்தை பின்பற்றுபவரா அல்லது துவைதத்தையா ? அல்லது இவர் அத்துவைதியா ?இவர் நான்மறையையும் அவருடைய சமய நூற்கள்,சாத்திரங்களை கரைத்துக் குடித்தவரா ? இவரை எந்த சைவ,வைணவ ,அத்துவைத பீடங்களாவது அங்கீகரித்துள்ளதா ? உண்மையென்னவென்றால்,இவர் சைவரோ,வைணவரோ அல்லது அத்துவைதியோ அல்லர்,இவர் போதிப்பது தியானத்தை,இவர் எந்த சமய பீடத்தையும் சார்ந்தவரல்லர்,மாறாக இவரே தனியாக ஒரு பீடத்தை ஆரம்பித்தார்,அதுதான் தியான பீடம்.வெறும் தியானத்தை செய்துக் கொண்டிருந்தால்,இறைவனை அடைய முடியாது. ,மொத்தத்தில்,நித்தியானந்தா,ஒரு சாமியாரல்லர்.,இவர் வெறும் தியான குரு மட்டுமே,ஆதலால் இவரை நாம் சாமியார் பட்டியலிலிருந்து விளக்கிவிடுவோம்,ஏனெனில் இவர் அடிப்படையிலேயே சாமியாரல்லர்,அது மட்டுமின்றி,இவர் எந்த சமய பீடத்துடனும் தொடர்பு வைத்துகொள்ளவுமில்லை,இவர் ஒரு தனி நபர்,ஆதலால் இவர் செய்யும் குற்றம்,சமயத்தை சாரா..அடுத்தது,தேவ நாதன் அர்ச்சகன்.இவன்,கருவறையில் காம லீலைகளை புரிந்ததால்,இவனைக் கொண்டு,நம்மூர் மூடர்கள்,நம் சமயங்களை சாடுகின்றனர்.இவன் செய்த பாவத்திற்கு,சிவ பெருமான் நிச்சயம் தண்டனையளிப்பான்.அது மட்டுமின்றி,இவன் ஒரு சாதாரண அர்ச்சகன்,இவன் செய்யும் தவறும்,சமயத்தை சாரா…சைவ,வைணவ,அத்துவைத சமயங்கள்,தவறில்லா சமயங்கள்,பொய்மையில்லா சமயங்கள்.மூடர்கள் சிலர் செய்யும் அய்யோக்கியத்தனத்துக்கு,சமயம் பொறுப்பேற்காது.

நம் சமயங்களில்,சாமியார் பட்டியலில் யாரும் தவறு செய்யவில்லை,இனி வரப் போகும் காலங்களில்,கலியின் கோலமாக யாரும் தவறு செய்தாலும்,அது சமயத்தின் பொறுப்பல்ல.சரி,எதோ நம் சமயங்களில் மட்டுமே இந்த மாதிரி நடப்பது போன்று,இந்திய , ‘இந்து’ விரோத ஊடகம் செயல் படுகிறது.பாதிரியார்கள் மற்றும் உலாமாக்கள் இது போன்று தவறுகளை செய்தது போல்,நாம் எந்த நாளிதழிலோ அல்லது தொலைக்காட்சியிலோ கண்டிருக்கிறோமா ?புற சமயத்தவர்களின் மத குருமார்கள் அவ்வளவு யோக்யர்களா ? உண்மையென்னவென்றால்,நமக்கு,அவர்களின் பித்தலாட்டங்களும்,அயோக்கியத்தனங்களும் காட்டப்படாமல்,மறைக்கப்படுகின்றன.காரணமென்னவென்றால்,அரசியல் நோக்கமே,மற்றும் இந்திய ஊடங்களில் முகமதியர் மற்றும் கிருத்துவர்கள் பெரிய அளவில் கைபற்றியிருப்பதே.அரசியல்காரர்கள் முகமதியர் மற்றும் கிருத்துவர்களின் வாக்குகளை பெற, நம் சமயங்களை தாக்கி,அம்மாற்று சமயத்தவர்களின் ஆதரவை பெறுகின்றன.இதி,பெரும் வேதனையையளிக்கும் விஷயமென்னவென்றால்,வாக்குக்காகவும் ஆடம்பர வாழ்கையை பெறவும்,நம் சமயத்தவர்களே,இது போன்ற சூழ்ச்சிகளுக்கு துணை போவதே. ஊடங்களில்,கிருத்துவ முகமதியர்களின் நோக்கமென்னவென்றால்,இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் நம் சமயத்தவர்களின் ஆச்சாரியார்களையும் குருமார்களையும் பழித்து, ஒரு அசிங்கமான நிலையில் காண்பித்து,நம் சாமியார்களேன்றாலே இப்படித் தான்,மோசமானவர்களென எண்ணும்படி ஒரு மாயையை உருவாக்கி,அவர்கள் சமயங்களுக்கு நாம் பெரிய அளவில் புக,இது போன்று சூழ்ச்சிகளைக் கையாள்கிறார்கள். இந்த சூழ்ச்சியால்,இவர்களின் நோக்கமும் வெற்றியடைந்துவிட்டதை நாம் காணலாம்.நம் சமயத்தவர்களே,நம் ஆச்சாரியார்களையும் குருமார்களையும் ஏளனம் செய்கின்றனர் இன்று.நம் புனித சாமியார்களை தவறான நோக்குடன் பார்க்கும் நம் சமயத்தவர்களின் கூட்டம் அதிகரித்து விட்டது.கேலி சித்திரங்களிலும்,திரைப்படங்களிலும்,நம் சாமியார்களின் நிலை,கவலைக்கிடமாக உள்ளது.

சரி,பாதிரியார்களும் உலாமாக்களும் உண்மையிலேயே ,நம் திரைப்படங்களிலும்,கதைப்புத்தகங்களிலும்,ஊடங்களிலும் சித்தரிக்கப்படுவது போல்,நல்லவர்களா என ஆழ்ந்து,ஆராய்ந்து,சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால்,நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும் !!! அவைதீக சமயத் தலைவர்களின் சரித்திரத்தை பார்த்தால்,முக்கால் வாசி பேர் அயோக்கியர்களகவும்,காமுகர்களாகவும்,கொலைகார பாவிகளாகவுமே இருக்கின்றனர்.இவர்களின் வண்டவாளங்களை தோலுரிப்பதே இத்தொடரின் நோக்கமாகும்.ஆதலால்,இந்த கட்டுரையில் ,போப்பாண்டவர்களின் காம லீலைகள் மற்றும் கொடூரம் நிறைந்த ,வினோதமான சரித்திரத்தை சற்று பார்ப்போம்.

அதற்கு முன்,போப்பாண்டவர்களென்றால் யாவர்,என்று சற்று தெரிந்துக் கொள்வோம்.கிருத்துவத்தின் பெரும்பகுதியினர்,ரோமன் கத்தொலிக்க கிருத்துவர்கள். பாதிரிகளின் அயோக்கியத்தனத்தையும் சுரண்டல்களையும் எதிர்க்கும் விதமாக,ஜெர்மனியில்,மார்ட்டின் லூதர் என்பவரால்,16ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது.இந்த கிருத்துவ பிரிவிற்கு,போப்பாண்டவரகளில்லை.

Pope Pius XI, Rerum omnium perturbationem (#4), Jan. 26, 1923: “The saint was no less a person that Francis de Sales, Bishop of Geneva and Doctor of the Universal Church. Like those brilliant examples of Christian perfection and wisdom to whom We have just referred, he seemed to have been sent especially by God to contend against the heresies begotten by the [Protestant] Reformation. It is in these heresies that we discover the beginnings of that apostasy of mankind from the Church, the sad and disastrous effects of which are deplored, even to the present hour, by every fair mind.”

மேலே உள்ள வாசகத்தின் மூலம்,போப் பயஸ் எனும் போப்பாண்டவர்,சீர்திருத்த பிரிவான புரோட்டாஸ்டன் கிருத்துவத்தை எதிர்க்கிறாரென நாம் தெரிந்துக் கொள்ளலாம்.இவர் மட்டுமல்ல,ரோமன் கத்தொலிக்கர்களே,புரோட்டஸ்டன் சமயத்தை ஒரு பொய் சமயமாகவும் ,இறை விரோத பிரிவாகவும் எண்ணுகிறார்கள்.புரோட்டஸ்டன், கிருத்துவமே அல்ல,என்றே ரோமன் கத்திலிக்கர்கள் கூறுவர். புரோட்டாஸ்டனுக்கும் ரோமன் கத்தொலிக்க பிரிவுகளுக்குமிடையே பல போர்கள் நடந்திருக்கின்றன. அது நிற்க.சரி,கத்தொலிக்க கிருத்துவர்கள் சொல்கின்றனர் அவர்களின் சமயமே புனிதமென்று.போப்பாண்டவர்கள் சொன்னதைத் தான் இவர்களும் சொல்கின்றனர்.ஏசுவின்,12 திருத்தூதர்களில்,மிகவும் முக்கியமானவரும்,திருத்தூதர்களின் ராஜர் என்றும் போற்றப்படும், ‘புனிதர்’ பீட்டரின் பரம்பரையினர் தான் இந்த போப்பாண்டவர்கள்.இனி,இந்த போப்பாண்டவர்களின், ‘புன்னிய’ சரித்திரத்தை காண்போம்.
( * இங்கு கொடுக்கப்படிருக்கும்,போப்பாண்டவர்களின் காம லீலைகள்,Nigel Cawthoren என்பவர் எழுதிய ‘Sex lives of the Popes’ எனும் நூலிலிருந்து, எடுக்கப்பட்டன. )

போப்பாண்டவர்களின் பெயரும்,அவர்கள் போப்பாண்டவ பதவியை வகித்த காலமும்,அவர்கள் சரித்திரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பண்ணிரண்டாம் ஜோன் போப்பாண்டவர் /Pope John XII (கிபி 955-964)
: கிருத்துவத்தில் முன்பு இல்லாத பாவக் கொள்கையை ,அறிமுகப்படுத்தியது இவர்தானென கூறப்படுகிறது.இவரின் இந்த ,மனிதத் தன்மையற்ற பாவக் கொள்கையால், அனைத்து கிருத்துவ மடங்களும்,அல்லும் பகலும்,இவர் சீக்கிரம் இறக்க பிரார்த்தித்தனர்.லட்டரன் அரண்மனையெனும் தன்னுடைய குடியிருப்பை,விலைமாதர் இல்லமாக மாற்றியமைத்தார்.சூதாட்டத்தில் பல தடவை தோற்று,அந்தக் கடன்களை அடைக்க, போப்பாண்டவ கருவூலமெனும்,சமய பொதுவுடமையான சொத்திலிருந்து எடுத்து,அடைத்தார்.ஒருத்தியுடன்,படுக்கையில் விபச்சாரம் செய்துக் கொண்டிருக்கும்போது,அந்த பெண்ணின் கணவனால்,பிடிபட்டு,கொலைசெய்யப்பட்டார். 14ஆம் திகதி ,ஜூன் மாதம்,கிபி 964இல்,தனது 24ஆம் வயதில் இறந்தார்.

எட்டாம் மாசற்ற போப்பாண்டவர்/Pope Innocent VII (கிபி 1484-1492) :
இவருக்கு சட்டத்திற்கு புறம்பான (illigemate children) எட்டு மகன்களும் பல மகள்களும் இருந்தனர்.இந்த சட்டத்திற்கு புறம்பான பிள்ளைகளை அவரே தனது குழந்தைகளென ஒப்புக்கொண்டார்.இவர் போப்பாண்ட பதவியை வகித்த காலத்தை , ‘இழி பிறவிகளின்(தகாத வழியில் பிறந்தவர்களின் ) பொற்காலம்'(Golden Age of bastards) என கூறப்படுகிறது.சூனியக்காரிகளென சந்தேகிக்கப்படும் பெண்களை அழிக்க, ஒரு கிருத்துவ மன்றத்தை (inquisition) இவர் ஆரம்பித்தார்.இவர் இறக்கும் நிலையில் இருந்த போது,இவருக்கு பிடித்தமான உணவான,முலை பாலை இவருக்கு ஊட்ட,ஒரு தாதி
(wet nurse) நியமிட்டப்பட்டாள்.

இருபத்தி இரண்டாம் ஜோன் போப்பாண்டவர்/John Pope XXII (கிபி 1316-1334) :
வரியை கட்டாமல் இருந்ததால்,தன்னுடன் பணி புரிந்த இதர சமய குருமார்களை,ரோமன் கத்தொலிக்க தேவாலய பதவிகளிலிருந்து,அகற்றினார்

பண்ணிரண்டாம் பயஸ் போப்பாண்டவர்/Pope Pius XII (கிபி 1922-1939) :
இவர் ,ரோமன் கத்தொலிக்கர்களிடம் ,ஹிட்லருக்கெதிரான பகைமையை விடும்படி உபதேசித்தார். முசோலினி,அபிசினியாவை கைபற்றியபோது,அதற்கு ஆதரவாக இருந்தார்.

இரண்டாம் கெலஸ்டின் போப்பாண்டவர்/Pope Celastine II (1143-144) :
இவர் ஜோர்டான் கோமானை(Count Jordan) படுகொலை செய்தார். ஜோர்டான் கோமானை, நிர்வாணமாக்கி,கொதிக்கும் இரும்பு நாற்காலியில் கட்டி,சிவப்பு நிறமாக மாறும் வரை பழுக்கக் காய்ச்சிய ஒரு மகுடத்தை,அக்கோமானின் தலையில்,ஆணியாலடித்தார்.

மூன்றாம் மாசற்ற போப்பாண்டவர்/Pope Innocent III (கிபி 1198-1216) :
இவர்தான்,ஓரின புணர்ச்சியாளர்களிடம்,ஆதாரபூர்வமாக குறுக்கு விசாரணை செய்யும் திட்டத்தை அறுமுகப் படுத்தினார். ஓரின புணர்ச்சியாளர்கள்,தங்கள் தவற்றை ஒப்புக்கொள்ளும்படி செய்ய,அவர்களை நிர்வாணமாக்கி, பழுக்க காய்ச்சிய கழுவிலேற்றுவார்.இந்த முறை, 1816ஆம் ஆண்டு வரை,புழக்கத்திலிருந்தது.

ஏழாம் கிலமண்டு போப்பாண்டவர்/Pope Clement VII (கிபி 1379-1394) :
இவரின் இயற்பெயர் ஜெனிவ் ராபர்ட். ஈட்டியால் சிரச்சேதம் செய்வதில் வல்லவர்.இவர் பின்பு ஏழாம் கிலமண்ட போப்பாண்டவராயினார்.இப்பதிவியை வகிக்கும் காலங்களில்,இவர் உடல் சுகத்தில் தன் நெரத்தை போக்கினார்.தேவாலயத்து வேலைக்காரச் சிறுவர்களுடன் உடலுறவு கொள்வார்.இவர் போப்பாண்டவர் பதவியை வகிக்கும் பொழுது, முன்பு வேலைக்கார சிறுவர்கள்,முட்டி அளவு வரை,சட்டை போடும் முறையை அகற்றி,பின்பக்கத்தின் பாதியளவு வரை மட்டும்,அல்லது அதை விட மிக சிறியதாக சட்டை போடும்படி உத்தரவிட்டார்,அப்பொழுதுதான்,அவர்களுடன் சுலபமாக உடலுறவுக் கொள்ளலாமென்பதால்.

பதினோறாம் பெணடிக் போப்பாண்டவர்/Pope Benedict XI :
இவர் 12 வயதிலேயே போப்பாண்டவ பதவியை வகித்தார். இவர் இருவகை புணர்வாளர் (bisexual) ,மிருகங்களுடன் உடலுறவு கொள்பவர்,பல கொலைகளுக்கு உத்தரவிட்டவர், பாவகரமான தந்திரங்களிலும்(black magic) சாத்தானிய சமயத்திலும் (satanism) ஈடுபாடுள்ளவர். இவர் பெரியளவில் ,கிறுக்குத்தனமான இருவகை புணர்ச்சி களியாட்டங்ளை (wild bisexual orgy party) நடத்தினார். இவர் போப்பாண்டவர் பதவியை, கிபி 1032-1044,1045 ,1047-1048 ஆகிய ஆண்டுகளில் வகித்தார். “மதகுரு உருவில் நடமாடும் நரகத்திலிருந்து வந்த சாத்தான்” என்று இவர் அழைக்கப்பட்டார்.புனித பீட்டர் டாமியன்(St Peter Damian) ” இந்த இழி பிறவி, சமய தலைவராக ஆகிய காலத்திலிருந்து,இறப்பு வரை,தனது வாழ்க்கையை,ஒழுங்கீனத்திலேயே கழித்துள்ளான் ” என்று இவரை சாடுகிறார்.தனது 23ஆம் வயதில்,தன்னை ,பொது பிரார்த்தனை கூட்டத்தின் போது, வழிபாட்டுத் திருவினை மேடையில் கழுத்து நெறித்து கொல்லும் கொலை முயற்சியிலிருந்து தப்பித்தார். தன்னுடைய பெற்றொருடன் பிறந்தவர்களின் மகளை(cousin) மணந்த பிறகு,தன்னை சமய கல்வியில் புகுத்தி பாதுகாத்த,தந்தையான (Godfather) ஆறாம் கிரிகொரியிடம் (Gregory VI ),தனது சமய அதிகாரத்தை(papacy) விற்றார்.

ஏழாம் பொனிபேசு போப்பாண்டவர்/Pope Boniface VII (கிபி 974, கிபி 984-985) :
இவர், “கொடூரமான அரக்கன்” என்றும் “அயோக்கியத்தனத்தில்,உலகிலுள்ள மனிதர் எல்லோரையும் மிஞ்சுபவன்” என்று வர்ணிக்கப்படுகிறார்.

மூன்றாம் சிக்தசு போப்பாண்டவர்/Pope Sixtus III (கிபி 432-440) :
கிபி 440இல், ஒரு கன்னியாஸ்திரியை கற்பழித்ததற்காக, தண்டிக்கப்பட்டார்.

முதலாம் லியோ போப்பாண்டவர்/Pope Leo I (கிபி 440-461) :
இவர் மன நிலை பாதிக்கப்பட்டவர்.சித்திரவதைகள் பல செய்து,அதில் இன்பம்/காம சுகம் காணும் சித்திரவதை சக்ரவர்த்தி.
தன்னிடம் சிக்கியவர்கள்,விந்தை கிருத்துவ தேவாலயத்தில் நடக்கு சடங்குகளில் கலப்பதற்கு,வழிபாட்டுத் திருவினை மேடையில் இளம் பெண்களை ,பயன்படுத்தியதாக ஒத்துக்கொள்ளுமாறு வற்புறுத்துவார்.தன்னுடைய கருத்தை எதிர்ப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் முறையை அறிமுகப்படுத்தி,செயல்படுத்திய முதல் போப்பாண்டவர்,இவரே.

ஏழாம் பயசு போப்பாண்டவர்/Pope Pius VII (கிபி 1800-1823) :
“சமயத்தின் அடித்தளத்தை அழித்த மிகவும் வெறுக்கத்தக்க கண்டுபிடிப்பு” என்று பைபிள் சங்கங்களை (Bible Society) சாடினார்.

இருபத்தி மூன்றாம் ஜான் போப்பாண்டவர்Pope John XXIII (கிபி 1410-1415) :
போப்பாண்டவர் பதவியை வகிக்கும் முன்பு,கடல் கொள்ளையராக இருந்த இவர்,ஒரு நாஸ்திகர். தன்னுடைய சக கத்தொலிக்க குருமார்களை சித்திரவதை செய்தார்.தன்னுடன் உடன் பிறந்த இரண்டு சகோதரிகளுடன் உடலுறவில் ஈடுபட்டார்.சலிஸ்பரி பிஷொப் (Bishop Of Salisbury),ராபர்ட் ஹால்லம் (Robert Hallum),என்பவர், “நெருப்பில் எறிக்கப்பட வேண்டியவன்” என,இவரை சாடியுள்ளார்.

இரண்டாம் பவுல் போப்பாண்டவர்/Pope Paul II (கிபி 1464-1471) :
இவர்,ஓரின புணர்ச்சியாளர் (Homosexual).நிர்வாணமாக்கப்பட்ட ஆண்கள் சித்திரவதை செய்யப்படுவதையும் ,பற்கலுடைய சட்டத்தால்(rack) அவர்களின் உடல் இரண்டாக வெட்டப்படுவதையும் பார்த்து ஆனந்தப்படுபவர்.தன்னுடைய விருப்பமான ஆண் காம அடிமைகளில் ஒருவன் தன்னை புணரும்பொழுது,இருதய வலியால்,மரணமடைந்தார்.

பதிமூன்றாம் ஜான் போப்பாண்டவர்/Pope John XIII (965-972) : (பல பதிமூன்றாம் ஜான் போப்பாண்டவர்களில் இவரும் ஒருவர்) தன்னுடைய தந்தையுடன் திருமண பந்தமில்லாமல்,கூடி வாழும் பெண்ணையும் (concubine),தனது சகோதர/சகோதரியின் மகளையும் (niece)கற்பழித்தார்.ஒருத்தியுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதால்,அவளின் கணவனால்,இப்போப்பாண்டவர் கொல்லப்பட்டார். இவருடைய தந்தையான,பன்னிரெண்டாம் ஜான் போப்பாண்டவரும்(Pope John XII) ,இந்த மாதிரியே கொல்லப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் சர்ஜியசு போப்பாண்டவர்/Pope Sergius III (கிபி 904-911) :
இவர் வயது குறைந்த இளம்பெண்களுடன் உடலுறவு கொண்டு,அதில் இன்பமடைந்தவர்.இவரை, “இழி செயல்களனைத்துக்கும் அடிமை” என சரித்திராசிரியர்,பரோனியுஸ்(Baronius) கூறுகிறார். தனது 45ஆம் வயதில்,15 வயதுடைய ஒரு பெண்ணை,காதலியாகக் கொண்டார்.இப்பெண் வேறொருவருடைய மனைவியென்பது குறிப்பிடத்தக்கது.இவளுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டு,ஒரு மகனை பெற்றெடுத்தார் இந்த போப்பாண்டவர்.அந்த மகந்தான்,பதினோறாம் ஜான் போப்பாண்டவர்(Pope John XI).

ஆறாம் ஸ்தீபன் போப்பாண்டவர்/Pope Stephen VI (கிபி 896-897) :
இவர்,தனக்கு முன்னால் போப்பாண்டவர் பதவியை வகித்த,போர்மொஸசு போப்பாண்டவர்(Pope Formosus) மேலுள்ள பகைமையின் காரணமாக,அவரை வஞ்சிக்க எண்ணி,அவர் பிணத்தை தோண்டியெடுத்து,அவருக்கு போப்பாண்டவர் உடைகளையுடுத்தி,ஆசனத்தில் அமர்த்தி,வாய்மை உரைக்க சூளுரை செய்யப்பட்ட போதிலும்,தெரிந்தே பொய் கூறியதாகவும்,போப்பாண்டவ அதிகாரத்தை கைபற்ற பேராசைக் கொண்டதாகவும் இவர் மேல்,ஸ்டீபன் போப்பாண்டவர் குற்றம் சாட்டி,இந்த பிணத்துக்கு வாதாட ஒருவரை நியமித்தார்.இந்த வழக்கில்,போர்மோஸசு போப்பாண்டவர் குற்றவாளியென்று தீர்ப்பு வழங்கப்பட்டு,அவரின் பிணத்தின் வலது கரத்திலுள்ள மூன்று விரல்கள் வெட்டப்பட்டு,அவரின் புனித ஆடைகள் பறிக்கப்பட்டு,அவர் பிணம் புதைக்கப்பட்டது.இதன் வழி,ஸ்தீபன் போப்பாண்டவர்,போர்மொஸசு போப்பாண்டவர் மேலுள்ள வஞ்சத்தை தீர்த்துக் கொண்டார்.

பண்ணிரண்டாம் பெணடிக் போப்பாண்டவர்/Pope Benedict XII (கிபி 1334-1342) :
இவர் ஒரு பெரும் குடிகாரர்.இவரின் இச்செயலால்,இவர் போப்பாண்டவ பதவியை வகித்த காலத்தில், “போப்பாண்டவரைப் போல குடிகாரர்” என்ற பழமொழி பிரபலியமானது.

அணக்லடசு போப்பாண்டவர்/Pope Anacletus(கிபி 1130-1138) :
தனது சகோதரிகளுடன் உடலுறவு வைத்துக் கொண்டு மகிழ்ந்தவர் இவர்.பல பெண் உறவினர்களுடனும் இவர் உடலுறவு வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.கன்னியாஸ்திரிகளை கற்பழிப்பது இவருக்கு பிடித்தமான செயலாகும்.

நான்காம் கிலமண்டு போப்பாண்டவர்/Pope Clemen IV(கிபி 1342-1352) :
இவரை,பெற்றாக்கு (Petrarch) என்பவர், “வெறுக்கத்தக்க சூழ்ச்சிகளை கையாள்வதில் பிரபலியமான இவர் , மத குரு உருவில் வந்த டயோனிசசு* ” என்று வர்ணிக்கிறார். இப்போப்பாண்டவர்,பல விபச்சாரிகளுடன் உடலுறவு வைத்துக் கொண்டதோடு அல்லாமல்,பிறன்மனைகளுடன் கள்ளக் காதலிலும் ஈடு பட்டார்.இவர் இறந்த போது,இவர் ஆத்மா சாந்தியடைய,50 பாதிரியார்கள்,ஒன்பது நாட்களுக்கு தொடர்ந்து பிரார்த்தித்தனர்.ஆனாலும்,இப்பிரார்த்தனைகளின் வழியும்,இப்போப்பாண்டவர் நரகத்திலிருந்து விடுபட,போதாதென,பொதுவாக ,எல்லோராலும் ஒப்புக்கொள்ளப் படுகிறது.

இரண்டாம் பயசு போப்பாண்டவர்/Pope Pius II (கிபி 1458-1464) :
இவர்,பல காமக் காவியங்களை(erotic literature) இயற்றியுள்ளார்.சுமார்,12 சட்ட விரோத பிள்ளைகளுக்கு(illegimate children) தந்தை, இவர்.

நான்காம் சிக்தசு போப்பாண்டவர்/Pope Sixtus IV (கிபி 1471-1484) :
சிசுதின் சப்பல் (Sistine Chapel) எனும் தேவாலயத்தை கட்டியவர் இவரே. இவருக்கு, ஆறு சட்டவிரோத பிள்ளைகளிருந்தனர் (Illegimate ),அதில் ஒரு பிள்ளை,இவர் தனது சகோதரியைப் புணர்ந்து பெற்றது.

இரண்டாம் ஜூலியசு போப்பாண்டவர்/Pope Julius II (கிபி 1503-1513) :
சிசுதின் சப்பலெனும் தேவாலயத்தின் உட் கூரைக்கு சாயம் பூச உத்தரவிட்டவர் இவரே.இவர்,ஒரு சிறு பெண்ணை மணந்தார். தனது பெரும்பான்மையான நேரத்தை,(காமத்துக்காக) சிறுவர்களுடனும் ஆண் விபச்சாரிகளுடனும் கழித்தார்.

இரண்டாம் அர்பன் போப்பாண்டவர்/Pope Urban II :
இவர்,கிபி 1095இல், கலடியமெனும் (Caladium), காம வரியை (sex tax) அறிமுகப்படுத்தினார். இந்த வரியின் மூலம்,மத குருமார்கள் பிறன்மனைகளை/தன்னுடன் திருமணமாகாத பெண்களை ,(காமத்துக்காக) காதலிகளாக வைத்துக் கொள்ளலாம், போப்பாண்டவருக்கு ஆண்டுதோறும் இந்த வரியை கட்டி வந்தால். இந்த வரி,மணமாகாத பெண்களுடன் கூடி வாழும் பாதிரிகளின் எண்ணிக்கையை குறைத்து, ஓரின புணர்ச்சியை,மத குருமார்களிடையே மேலோங்க செய்துவிட்டது.

மூன்றாம் பவுல் போப்பாண்டவர்/Pope Paul III (கிபி 1534-1549) :
இவர் தனது மகளுடன் உடலுறவில் ஈடுபட்டவர்.தனது குடும்ப சொத்தின் மீது தன் ஆதிக்கத்தை செலுத்த,பல உறுவினர்களுக்கு விஷமூட்டி கொன்றார்,தன் தாய் மற்றும் சகோதர/சகோதரியின் மகள் உட்பட. மத சமபந்தப்பட்ட ஒரு விஷயத்தை தீர்த்து வைக்க,இரண்டு மத குருமார்களையும் ஒரு போலந்து பிஷொப்பையும் கொன்றார்.இவரை,ரோம் நகரின் மிகப் பெரிய பகாமத் தரகரென்றே(pimp) கூறிவிடலாம்,ஏனெனில்,இவருக்கு 45,000 விபச்சாரிகளிருந்தனர்.இவர்கள்,இப்போப்பாண்டவருக்கு,மாதந்தோறும் ,ஒரு குறிப்பிட்ட தொகையை/கப்பத்தை (tribute) செலுத்தி வந்தனர்.

மூன்றாம் ஜூலியசு போப்பாண்டவர்/Pope Julius III (கிபி 1550-1555) :
இவர் சிறுவர்களை புணர்ந்தவர்,அச்சிறுவர்களில் ஒருவன்,அவரது சட்ட விரோத மகன். பல அழகான பதின்ம வயது ஆண்களை,மதகுருமார்களாக நியமித்தார்.டெல்லா காசா(Della Casa) எனும் மதகுரு எழுதிய “ஓரின புணர்ச்சியை போற்றுதல்”(In the Praise of Sodomy) எனும் கவிதை,இப்போப்பாண்டவருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

புனிதர் சிரில்(St Cyril) தலைமையில், பல மதகுருமார்களைக் கொண்ட ஒரு கும்பல்,ஆலெக்சாண்டிரியா நூலகத்தையும் (Great Library of Alexandria) அதனுள்ளே இருந்த 600 000 நூற் தொகுப்புக்களையும் எறித்தனர். 16 ஆம் நூற்றாண்டில்,கத்தொலிக்க பாதிரிகளின் அயோக்கியத்தனகளுக்கெதிராக ,மார்டின் லூதரால் உருவாக்கப்பட்ட,புரோடஸ்டன் கிருத்துவ பிரிவின் வளர்ச்சியைக் கண்டு,தங்களின் சூழ்ச்சிகளை மறக்க,தங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் கத்தொலிக்க ராஜாக்களை ,புரோடஸ்டன் பிரிவிற்கு எதிராக ஏவி விட்டனர்..ஜெர்மனியில் ,இந்த கத்தொலிக்க-புரோடஸ்டன் போர்,முப்பது வருஷ போரென்று(Thirty-Years War) அழைக்கப் படுகிறது. இப்போரால்,கெர்மனியின் பாதி மக்கள் தொகை அழிந்தது.

ஏசுவின் சமயத்தை உலகெல்லாம் பரப்புவதற்கு,கத்தொலிக்க குருமார்கள்,ஸ்பெயின் படையினரை அனுப்பினர்.இந்த ஸ்பெயின் படையினர்,தென் அமெரிக்கா கண்டத்தை கண்டுபிடித்தவுடன்,அங்கிருந்தவர்களை கொன்று குவித்து,கற்பழிப்புகளை பெரிய அளவில் நடத்தி,அங்குள்ள தங்கக் கட்டிகளை கப்பல் நிறைய ஏற்றிக் கொண்டு,ஸ்பெயினுக்கு திரும்பினார்கள்.இப்படியே பல தடவை,இருத்தரப்பினருக்கு பல போர்கள் நடந்தனர்.ஒவ்வொரு தடவையும்,தென் அமெரிக்க பூர்வ குடியினர்,ஸ்பெயின் படையினரின் பீரங்கிகளுக்கும் துப்பாகிகளுக்கு முன்னும் தாக்கு பிடிக்க முடியாமல்,பல கோடியில் மாண்டனர்.சிறுக சிறுக,அங்குள்ள பூர்வகுடியினரான இன்கா(Incas) மற்றும் மாயன் (Mayans) ஜாதியினர், கிருத்துவர்களாக மாறினர், கத்தொலிக்க பாதிரிகளால் கட்டாயப்படுத்தப்பட்டு.இப்பூர்வ குடியினர், முன்பு சூரிய வழிபாட்டை கடைபிடித்தவர்கள்.

“கொன்ஸ்டண்டை கொடையாக கொடுத்தல் ” (Donation of Constantine) எனும் பத்திரம் போலியானது.நான்காம் அடிரியன் போப்பாண்டவரின்(Pope Adrian IV),ஆதிக்கத்தின் கீழ் அயர்லாந்து இருக்கவில்லை,ஆதலால் ,அந்நாட்டை,இங்கிலாந்துக்கு,கொடுக்கும் உரிமை,அவருக்கில்லை.இந்த மாதிரி,போலி பத்திரங்களை உருவாக்கி, ஒரு நாட்டை,தன்னுடைய ஆதிக்கத்தின் கீழுள்ள ராஜவுக்கு கொடையாக கொடுப்பது,போப்பாண்டவர்களின் சூழ்ச்சிகளில் ஒன்று..,தங்களின் ஆதிக்கத்தின் கீழ் பல நாடுகள் இருந்தால் தான்,தாங்கள் இஷ்டம் போல் செய்யலாம் என்பதற்காகத் தான் இது போன்று போலி பத்திரங்களை உருவாக்குவது.இது போலவே,மன்னிப்பு பத்திரங்களை,போப்பாண்டவர்கள் உருவாக்கி,மக்களை சுரண்டனர்.இந்த மன்னிப்பு பத்திரங்கள் மூலம்,ஒருத்தன்,எவ்வளவு பெரிய பாவம் பண்ணினாலும்,அவன்,இந்த மத குருமார்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து,இம்மனிப்பு பத்திரத்தை பெற்றுக் கொண்டால்,அவன் செய்த பாவங்கள்,தீர்ந்து போய்விடும்.

போப்பாண்டவர்களில் மிகவும் பிரபலியமானவர்களில் ஒருவரான,ஆறாம் அலேக்சாண்டர்(Alexander VI),பித்தலாட்டத்திற்கு பெயர்போன போர்கியா(Borgia) எனும் மத குரு வம்சத்திலிருந்து வந்தவர்.கிபி 1492,ஒரு ரகசியக் கூட்டத்தில்,எட்டாம் மாசற்ற போப்பாண்டவருக்கு(Pope Innocent VIII) பின்,இவரை போப்பாண்டவ பதவிக்கு நியமித்தனர்.இந்த போப்பாண்டவருக்கு காசு மழை பெய்ய,இவர் போப்பாண்டவ அதிகாரத்தை வாங்கிவிட்டார்.பல பெண்களை புணர்ந்து,ஆறு மகன்களையும் மூன்று மகள்களையும் பெற்றார்.தனது,பிள்ளைகளை,பெரிய பதவிகளுக்கு நியமித்தார்(இவர் கதை நம்ம கருணாநிதி கதை போலல்லவா இருக்கின்றது !?).

இவருக்குப் பின், கிபி 1503இல் இரண்டாம் ஜூலியசு (Pope Julius II), போப்பாண்டவர் பதவியேற்றார். இவருக்கு மூன்று மகள்களுண்டு.மத குருவாக இருந்த இவர்,அதே சமயத்தில் கொடடூரமான போர் விரனாகவும் இருந்தார். தன் அதிகாரத்தை எதிர்ப்பவர்களுக்கெதிராக,படையுடன் புறப்படுவார்,இவர்.

பத்தாம் லியோ போப்பாண்டவர்(Pope Leo X) பதவி வகித்த காலங்களில், ஊழல்/கையூட்டு தலை விறித்தாடியது. ஆசிர்வாதங்கள்,பணத்துக்காக விற்கப்பட்டன.கிபி 882இல், எட்டாம் ஜான் போப்பாண்டவர் (Pope John VIII) , விஷமூட்டப்பட்டு,தடியால் அடித்துக் கொல்லப்பட்டார்.கொலை செய்யப்பட்ட முதல் போப்பாண்டவர்,இவரே.எட்டாம் ஸ்தீபன் போப்பாண்டவர் (Pope Stephen VIII) ,சிறையிலிடப்பட்டு,கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டார். கிபி 1478இல, அதிகாரமிக்க, மெடிசி ஜமீந்தார் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.இந்த கொலை குற்றத்தில்,நான்காம் சிக்தசு போப்பாண்டவர் (Pope Sixtus IV) ஒரு முக்கிய புள்ளியாக இருந்தார். போப்பாண்டவர்கள் வரலாற்றில்,ஐந்து போப்பாண்டவர்கள் சிறையிலிடப்பட்டனர், நான்கு பேர் கொல்லப்பட்டனர், ஒருத்தர் ,அரசியல் காரணத்திற்காக,கொல்லப்பட்டார், ஒருத்தர்,போப்பாண்டவ அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டார், ஒருத்தர்,மக்கள் மத்தியில் பிரம்பால் அடிக்கப்பட்டார், ஒருத்தர் போரில் இறந்தார்,இன்னொருவர் ,தேவாலயத்தின் மேற் கூரை தன் மேல் விழ,இறந்தார்.

எட்டாம் அர்பன் போப்பாண்டவர்/Pope Urban VIII (கிபி 1623-1644) : இவர் ,தனது,குடும்ப உறுப்பினர்கள்,தகுதியற்றவர்களானாலும்,பெரிய பதவிகளுக்கு,அவர்களை நியமிப்பதில், கெட்டிக்காரர்.தன்னை சுற்றியுள்ள மதகுருமார்கள் மீதுள்ள சந்தேகத்தால்,அவர்கள் எப்பொழுது இறப்பார்களென தெரிவதற்கு,அவர்களின் ஜாதகத்தை,ஒரு ஜோதிடரிடம் கணிக்க உத்தரவிட்டார். கிருத்துவ சமயத்தை எதிர்த்ததற்காக,சிறையிலடைக்கப்பட்டு,பின்பு விடுவிக்கப்பட்ட, ஒரு டோமினிக்க மதகுருவை (Domican priest), மாயா ஜால விழா ஒன்றை நடத்தி, நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தால் உண்டாகும் அபாயங்களை போக்கும் படி உத்தரவிட்டார்.

கிருத்துவ போப்பாண்டவர்களின் வண்டவாளங்களில் சிலவற்றை தான் மேலே பார்த்தோம்.இவர்களின் வண்டவாளங்களைப் பற்றி எழுதினால்,கிண்ணஸ் உலக சாதனையில்,மிகப் பெரிய நூலுக்கான விருந்தை வென்றுவிடலாம்,அவ்வளவு வண்டவாளங்கள் நிறைந்தது,இப்போப்பாண்டவர்களின் சரித்திரம். கிருத்துவர்களின் (போப்) ஆண்டவர்களே இப்படி,காமுகர்களாகவும்,ஒழுங்கீனர்களாகவும்,கொலைகாரர்களாகவும்,கொள்ளையர்களாகவும் இருக்கும் பொழுது,நம் சமய ஆச்சாரியர்களை பற்றி பேச இவர்களுக்கு ஏதெனும் அருகதையுண்டா ?

ஆனால்,மேலே நீங்கள் படித்தவை,ஒரு கிருத்துவ வெள்ளைக்காரரின்(Nigel Cawthoren) புஸ்தகத்திலிருந்து(‘ Sex lives of the Popes’) என்னால் மொழிபெயர்க்கப்பட்டது.இதை,நீங்கள் நமது இந்திய தொலைக்காட்சியிலோ அல்லது இந்திய ஊடங்களிலோ பார்க்க முடியாது,ஏனெனில்,இந்திய ஊடங்கள்,இந்து ஊடங்களல்ல,குல்லா மற்றும் சிலுவை ஊடகங்களே !!! ஆனால்,இந்த சைவ,வைணவ விரோத ஊடகங்களை,பார்பன ஊடங்கங்கள் என்று சுலபமாகவே புளுகிவிடுவார்கள் நமது முகமதி மற்றும் கிருத்துவ கயவர்கள். NDTV,CNN-IBN, Times Group, STAR TV, HINDUSTAN TIMES, The Hindu, INDIAN EXPRESS, EENADU, Andhra Jyothi, The Statesman, Kairali TV,Mathrabhoomi ,Asian Age ,Deccan Chronicle
போன்ற ஊடகங்கள் சைவ,வைணவ சமயங்களுக்கு எதிரானவை.இவை,கிருத்துவ மற்றும் முஸ்லிம் மத போதகர்கள் செய்யும் அயோக்கியத்தங்களை நமக்கு காட்ட மாட்டார்கள்,ஆனால் அங்கொன்று இங்கொன்றுமாக நடக்கும் போலி சாமியார்களை (இவர்கள் சாமியார்களே இல்லையே !!!) மட்டும் பல வாரங்களுக்கு,படம் பிடித்து காட்டுவார்கள்.ஆனாலும்,கிருத்துவ முகமதிய மத குருமார்கள் செய்த காம லீலைகள்,பித்தலாட்டங்கள்,கொள்ளை,கொலை,கற்பழிப்புகளில்,1% விழுக்காடுக் கூட நம் ஆச்சாரியார்கள் செய்ததில்லை,செய்யவேயில்லை !!! வேதத்தையும்,ஆகமங்களையும்,சாத்திரங்களையும் நன்கு கற்றுணர்ந்த சைவ,வைணவ ஆச்சாரியார்கள் யாராவது இப்படி செய்துள்ளனரா ? ஆனால்,குரானையும் பைபிளையும் நன்கு கற்றுணர்ந்த பாதிரிகள் மற்றும் உலாமாக்கள்,ஆயிரக்கணக்கில் இந்த மாதிரி,ஒழுக்க ஈன செயல்களை செய்து வருகின்றனர்.அடுத்த கட்டுரையில்,உலாமாக்களின் ஒழுங்கீனங்களை பார்ப்போம்.

நன்றி, வணக்கம் !!!

Advertisements

One thought on “அபிரகாமிய காமுகர்கள்-பாகம் 1 ( போப்பாண்டவர்களின் காமக் களியாட்டங்கள் )

  1. யாரைத்தான் நம்புவது? எனக்கு தலை சுற்றுகிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s